Posts

Showing posts from November, 2023

காலாமர்களுக்கு தந்த போதனை

  காலாமர்களுக்கு தந்த போதனை அங்குத்தர நிகாயம் AN 3.65 ஃஃஃ ஒன்றுக் கொன்று முரண்பாடான ஆன்மீக கருத்துக்களை எவ்வாறு கையாள்வது என்பதை பகவர் கேசபுத்த நகரைச் சார்ந்த காலாமர்களுக்கு எடுத்துரைக்கின்றார். ஃஃஃ ஒருமுறை பகவர் கோசல நாட்டில், ஒரு பெரும் பிக்கு சங்கத்தினருடன் சுற்றுப்பிரயாணம் செய்து கொண்டிருக்கையில், கேசபுத்திரம் என்னும் காலாமர் மக்கள் வாழும் ஊருக்கு சென்றடைந்தார். காலாமர்கள் இவ்வாறு கேள்விப்பட்டனர்: "சமணர் கோதமர், சாக்கியரின் புதல்வர், சாக்கியர் குடும்பத்திலிருந்து வீடு துறந்தவர், கேசபுத்திரம் வந்துள்ளார். இவரைப் பற்றி ஒரு சிறந்த கருத்து பரவியிருக்கிறது: 'கோதமர் ஒரு அருகர், முழுமையாக விழிப்புற்றவர், முழுமையான அறிவும் நடத்தையும் கொண்டவர், மங்கலமானவர், பிரபஞ்சத்தை அறிந்தவர், கற்பிக்கக் கூடியவருக்கான தன்னிகரற்ற பயிற்சியாளர், தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் ஆசிரியர்; பூரண ஞான முற்றவர்; பாக்கியவான். தேவர்களும், மாரரும், பிரம்மரும், துறவிகளும், பிராமணர்களும், மக்களும் கொண்ட இந்த உலகினை தன் நேரடி அறிவினால் உணர்ந்த அவர், மற்றவர்கும் அதனை தெரிவிக்கின்றார். அவர் துவக்கத்திலும், மத்