Posts

Showing posts from January, 2024

Jan 21 விமான வத்து கதைகள்

  Jan 21:  பாந்தே Sasanawanse போதனையின் சாராம்சம், புத்தர் மீது நம்பிக்கை இருந்தால் அது  நல் விளைவுகளையும், பெரும் மகிழ்ச்சியையும் அளிக்கும் என்பதே. திரிபிடத்தின் விமான வத்து புத்தகத்திலிருந்து பல சம்பவங்களை  எடுத்துக்காட்டினார். ஃஃஃ விமான வத்து  5.6 கரணிய சுத்தம் https://suttafriends dot org/sutta/vv5-6/ மொக்களானர் சொர்க்கத்திற்கு சென்று ஒரு தேவதையின் அழகிய அரண்மனையைப் பார்த்து வியந்து புகழ்ந்தார். அப்படிப்பட்ட மாளிகை கிடைப்பதற்கு தான் என்ன புண்ணிய காரியங்களை செய்தார் என்று கேட்க, தேவதை:  "மெய்யறிவு உடையோர் தங்கள் நலம் கருதி புண்ணிய காரியங்களை செய்ய வேண்டும். பகவான் புத்தர் சரியான பாதையை தொடர்ந்து பயணத்தை முடித்தவர். அப்படிப்பட்ட புத்தர்களுக்கு தானம் தருவது பெரும் பலனைத் தரும். என் அதிர்ஷ்டவசம், ஒரு நாள் புத்தர் வனத்திலிருந்து வெளியே வந்து எங்கள் கிராமத்திற்கு வந்தார். அவரை பார்த்தவுடன் என் மனதில் நம்பிக்கை தோன்றியது. அதன் விளைவாக இந்த தாவதிம்ச சொர்க்கத்துக்கு நான் வந்து சேர்ந்தேன். அந்த புண்ணியக் காரணத்தினால் நான் ஒரு அழகிய தேவதையாக பிறந்து, எல்லா சுக போகங்களையும் அனுபவிக்கின்

Jan 14 போதனை Cūḷanikāsutta

  Jan 14, 2024  பாந்தே Sasanawanse  விவரித்த சுத்தம். AN3.80 Cūḷanikāsutta https://suttacentral dot net/an3.80/ (சுருக்கம் மட்டும்) இவ்வாறு நான் கேள்விப்பட்டேன். ஒருமுறை போற்றுதற்குரிய ஆனந்தர் பகவரிடம் சென்று, அவரை வணங்கி ஒரு புறமாக அமர்ந்தார். அப்போது ஆனந்தர் பகவரியிடம், "அண்ணலே, 'ஆனந்தா, சிக்கி புத்தரின் சீடரான அபிபு, பிரம்மலோகத்தில் நின்று கொண்டிருக்கையில் ஆயிரம் உலகங்களுக்கு அவருடைய குரலை செலுத்தக் கூடிய ஆற்றல் பெற்றவராக இருந்தார்,' என்று நீங்கள் சொல்ல கேட்டிருக்கின்றேன்." "அப்படியென்றால், முழுமையாக ஞானம் பெற்ற பகவர் எவ்வளவு தூரம் அவருடைய குரலை செலுத்த முடியும்?" "அவர் ஒரு சீடர் ஆனந்தா, தாதாகதர்களை அளவிட முடியாது." ஆனந்தருக்கு அந்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்பதால் இரண்டாம் முறை, மூன்றாம் முறை அதே கேள்வியை திரும்பக் கேட்டார். "ஆயிரம் மடங்கு சிறிய மண்டலம் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றாயா? அதில் ஆயிரம் நிலவுகளும், ஆயிரம் கதிரவனும், ஆயிரம் மேரு மலைகளும், ஆயிரம் இந்திய கண்டங்களும்.... ஆயிரம் பிரம்மலோகங்களும் உள்ளன. அப்படிப்பட்ட சிறிய மண்டலங

சுந்தருக்குத் தந்த போதனை

  வெள்ளிக்கொல்லர் சுந்தருக்குத் தந்த போதனை அங்குத்தர நிகாயம் AN 10.176 நான் இவ்வாறு கேள்வியுற்றேன். ஒருமுறை பகவர் பாவா ஊருக்கு அருகே வெள்ளிக்கொல்லர் சுந்தரின் மாந்தோப்பில் தங்கியிருந்தார். வெள்ளிக்கொல்லர் சுந்தர் பகவரிடம் சென்று, அவரை வணங்கி, பின் ஒரு புறமாக அமர்ந்தார். அமர்ந்திருந்த அவரிடம் பகவர், "சுந்தா, எப்படிப்பட்ட தூய்மை ஆசாரத்தை நீ ஏற்கின்றாய்?" என்று கேட்டார். "தண்ணீர் பானைகளை தூக்கிச் செல்லும், நீர்ச் செடிகளாலான மாலைகளை அணிந்து கொண்டும், தீயை வழிபடும், நீரால் தூய்மை செய்து கொள்ளும் மேற்கத்திய நாட்டு பிராமணர்கள் உரைக்கும் தூய்மையாச்சாரத்தை நான் ஏற்கின்றேன், ஐயா." "அவ்வாறு தண்ணீர் பானைகளை தூக்கிச் செல்லும், நீர்ச் செடிகளாலான மாலைகளை அணிந்து கொண்டும், தீயை வழிபடும், நீரால் தூய்மை செய்து கொள்ளும் மேற்கத்திய நாட்டு பிராமணர்கள் எவ்வாறான தூய்மையாச்சாரத்தை உரைக்கின்றனர்?" "....மேற்கத்திய நாட்டு பிராமணர்கள் தங்கள் சீடர்களை இவ்வாறு பயிற்சி மேற்கொள்ள கூறுவர்: 'வாரும் உத்தமபுருஷர்களே, சரியான நேரத்தில் படுக்கையிலிருந்து எழுந்து பூமியைத் தொட வேண