Posts

Showing posts from 2024

புத்தரின் ஒன்பது பண்புகள்

 (இலங்கை Sasanawanse பாந்தே அவர்களின் ஞாயிறு இரவு போதனையில் குறிப்பிடப்பட்டது...) Buddhanusati தினசரி காலை எழுந்தவுடன் அல்லது வெளியே போகும் முன்பு புத்தரின் ஒன்பது பண்புகளை நினைவு கூறுதல் நல்லது. அதாவது  1. அவர் ஒரு அருகர் Arahaṃ (the Holy One), 2. சுய முயற்சியினால் முழுமையாக விழிப்புற்றவர் Sammāsambuddho (fully enlightened), 3. முழுமையான அறிவும் நடத்தையும் கொண்டவர் Vijjācaraṇa sampanno (endowed with clear vision and virtuous conduct),  4. நல்ல வழியில் சென்றவர் Sugato (sublime),  5. பிரபஞ்சத்தை அறிந்தவர் Lokavidū (the knower of worlds),  6. கற்பிக்கக்கூடியவருக்கான தன்னிகரற்ற பயிற்சியாளர் Anuttaro purisadammasārathi (the incomparable leader of men to be tamed),  7. தேவர்களுக்கும் மனிதர்க்கும் ஆசிரியர் Satthā devamanussānaṃ (the teacher of gods and men), 8. விழிப்புற்றவர் Buddho (enlightened),  9. ஆசிர்வதிக்கப்பட்டவர் Bhagavā (blessed). இதைப் பற்றி அன்றைய இந்தியாவின் வட மேற்கு பகுதியை ஆண்டு வந்த கிரேக்க மன்னன் மிலிந்தருக்கும் பௌத்த துறவி நாகசேனருக்கும் இடையே நடந்த பிரபலமான உரையாடல் தொக

மெத்தா - பதினோறு அனுகூலங்கள்

  Feb 18, 2024  பாந்தே Sasanawanse மெத்தா (எல்லையற்ற அன்பு) தியானம் செய்வதன் 11 பயன்கள். (அங்குத்தர நிகாயம் AN11.15) அன்பைப் பயின்று, அன்பை வளர்த்து, அன்பைப் பெரிது படுத்தி, அன்பை ஒரு வாகனமாக, அடித்தலமாக அமைத்து, அன்போடு நெருங்கியிருப்பதால், அதனை நன்கு நிறுவுவதால் மனம் விடுதலையடைகிறது. அதனால் விளையும் பதினோறு அனுகூலங்கள்: 1. ஒருவர் மகிழ்ச்சியாகக் தூங்குகிறார்,  2. மகிழ்சியாக விழிக்கிறார்.  3. கெட்ட கனவுகள் காண்பதில்லை.  4-5. மனிதர்களும் மனிதரல்லாதவரும்‌ (அமனுஸ்சர்) அவரை நேசிக்கின்றனர்.  6. தேவர்களால் அவர் காக்கப் படுகிறார்.  7. தீ, நஞ்சு மற்றும் வாட்கள் (ஆயுதங்கள்) ஆகியவை அவரை பாதிப்பதில்லை. 8. மனத்தை விரைவாக ஒரு நிலைப்படுத்துகிறார்.  9. தோற்றப் பொலிவுடன் காணப்படுகிறார்.  10. தடுமாற்றம் ஏதுமின்றி அவர் இயற்கையெய்துகிறார்.  11. மேற்கொண்டு அவர் தன்னை வளர்த்துக் கொள்ளாமலிருந்தாலும் (இம்மையில் நிப்பாண நிலை அடையா விட்டாலும்), மறுமையில் குறைந்தபட்சம் அவர் பிரம்மலோகத்திலாவது பிறப்பார். (தமிழில்: திரு தி. சுகுணன்) Eleven advantages are to be looked for in the freedom of mind through the practic

ஒழுக்கங்கள்

  பாந்தே Sasanawanse இந்த வாரம் பாந்தே கற்பித்த பல விஷயங்களுள் ஒன்று, ஒரு கேள்விக்கான பதில் - ஐந்து ஒழுக்கங்கள் கடைப்பிடிப்பதால் வரும் ஐந்து அனுகூலங்களைப் பற்றி. அந்த ஐந்து நன்மைகளில் நான்கை இம்மையிலேயே காணலாம்.  புத்த பகவான்:   "இல்லறத்தார்களே, ஒரு ஒழுக்கமுள்ள மனிதரின் நல்லொழுக்கத்தின் காரணமாக அவருக்கு ஐந்து அனுகூலங்கள் கிடைக்கின்றன. எந்த ஐந்து?  அவர் விவேகத்துடன் வாழ்கின்றபடியால், பெரும் செல்வத்தைச் சேர்க்கிறார். இதுவே முதல் அனுகூலம்.  அவர் புகழ் பரவுகிறது. இதுவே இரண்டாம் அனுகூலம்.  மேலும், அவர் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வாராயின், அது க்ஷத்திரியர்கள், பிராமணர்கள், இல்லறத்தார் அல்லது தியானிகளின் கூட்டமாக இருக்கலாம் - அந்த ஆண் அல்லது பெண் தன்னம்பிக்கையுடன், கூச்சப்படாமல், தலை நிமிர்ந்து கலந்து கொள்வார். இதுவே மூன்றாம் அனுகூலம் இது.  மேலும், அவர் இறக்கும் போது தெளிந்த மனத்தோடு இறப்பார். இதுவே நான்காம் அனுகூலம். மேலும் அவர் உடல் சிதைந்த பின், மரணத்தின் பின் நல்ல மறுபிறப்பெடுப்பார். சொர்க்கத்தில் பிறப்பார். இதுவே ஐந்தாம் அனுகூலம். இல்லறத்தார்களே, ஒரு ஒழுக்கமுள்ள மனிதரின் ஒழுக்கத்தி

வஜிராருடன்

  சங்யுத்த நிகாயம் 5.10 Vajirāsutta வஜிரா சுத்தம் ஆதாரம்: https://suttacentralnet/sn5.10 With Vajirā வஜிராருடன் சாவத்தியில். முற்பகலில் பிக்குணி வஜிரா சீவர ஆடைகளை சீர் செய்துக் கொண்டு, பிச்சா பாத்திரத்துடன் சாவத்தி நகருக்குள் உணவு பெறுவதற்குச் சென்றார். சாவத்தியில் உணவுக்காக நடந்தார். இரந்த உணவை அருந்திவிட்டு திரும்பிய பின்னர், இருண்ட காடு எனப்படும் வனத்தின் ஆழமான பகுதிக்குச் சென்று ஒரு மரத்தினடியில் அந்த நாள் தியானத்திற்காக அமர்ந்தார்.  அப்போது மாரன் என்ற தீயவன் (காம உலகத் தலைவன்) பிக்குணி வஜிராவிற்கு பயம் உணர்த்துவதற்காக, அச்சத்தாற்கலங்கவைப்பதற்காக, மயிர்சிலிர்கச்செய்வதற்காக, அவரது தியானத்தை குலைக்கும் நோக்கத்தோடு அவரிடம் சென்று இவ்வாறு பாவடிவில் சொன்னான்: "யார் தோற்றுவித்தது இந்த உயிரை? அதைத் தோற்றுவித்தவர் எங்கே? எங்கு தோன்றியது இந்த உயிர்? அது எங்கு மறையும்?" பிக்குணி வஜிரா இவ்வாறு நினைத்தார், "இந்த பாவடிவில் பேசுவது யார்? மனிதனா, மனிதரல்லாதவனா?" பின் இவ்வாறு நினைத்தார், "இது தீயோன் மாரன். எனக்கு பயம் உணர்த்துவதற்காக, என்னை அச்சத்தாற்கலங்கவைப்பதற்காக, மயிர

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

Image
    பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்.. புண்ணியம் இன்றி விலங்குகள் போல்.. In spite of taking human birth on Earth... living like animals, not doing meritorious acts காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப வீண்.. காலமும் செல்ல மடிந்திடவோ.. Hearts filled with lust and anger.. To waste away and die as time runs out ... உத்தம மானிடராய் பெரும் புண்ணிய.. நல்வினையால் உலகில் பிறந்தோம்.. Due to good actions in past lives  We have taken this high human birth.. சத்திய ஞான தயாநிதி யாகிய.. புத்தரை போற்றுதல் நம் கடனே.. To praise the fully enlightened and compassionate Lord Buddha is our duty.. உண்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்.. இல்லையெனில் நர ஜென்மமிதே.. Without Truth, Love and Non-violence  this life would be hell.. மண்மீதில் ஓர் சுமையே பொதிதாங்கிய..பாழ்மரமே வெரும் பாமரமே.. (அறிவிலியாக (பாமரம்) வாழ்பவன், இந்த பூமிக்கு சுமையாக (பொதி - மூட்டை load) இருக்கும் அழுகிப்போன மரத்தைப் (பாழ்மரம்) போல) One who lives life in ignorance is a burden (to himself and to others), like a rotten tree is to Earth.. ____

மத்தா என்ற பேய்

  Mar 3, 2024 பாந்தே Sasanawanse போதனையில் விளக்கப்பட்ட சுத்தம் பேத வத்து (பேய்க் கதைகள்) Pv 2.3 மத்தா சுத்தம் மத்தா என்ற பேய் சிறு தீச்செயல்களும் பெரும் துன்பத்திற்கு எடுத்துச் செல்லக்கூடும் என்பதை விளக்கும் கதை. திஸ்ஸா என்ற இல்லாள் ஒரு பெண் பேய்யைப் பார்த்து இவ்வாறு கேட்கிறாள், திஸ்ஸா: நிர்வாணமாகவும் அருவருக்கத்தக்க உருவமும் கொண்டுள்ளாய். உனது நரம்புகள் புடைத்துக் கொண்டிருக்கின்றன. விலாவெலும்புகள் தெரியும் அளவு ஒல்லியானவளாக உள்ளாய். நீ யார்? மத்தா (பேய்): எனது பெயர் மத்தா. நீ திஸ்ஸா. நினைவில்லையா உனக்கு? நான் உனது கணவனின் மறு மனைவி. பல தீயச் செயல்களைச் செய்ததால், இப்போது பேய் உலகில் பிறந்துள்ளேன். திஸ்ஸா: பேய் உலகில் பிறப்பதற்கு உடலாலும் பேச்சாலும் அல்லது மனத்தாலும் அப்படி என்ன தீயச் செயல்களை செய்தாய்? மத்தா: சுலபமாக கோபம் கொண்டேன், கடுமையாக பேசினேன். பேராசையும், பொறாமையும், கபடமும் கொண்டேன். கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் பேய் உலகில் மறு பிறப்பெடுத்தேன். திஸ்ஸா: ஓ ஆமாம், எனக்கு நினைவு இருக்கிறது. அந்நாளில் மிகவும் சண்டகோபியாய் இருந்தாய். மற்றொரு கேள்வி கேட்க விரும்புகிறேன

Karajakāya sutta

 Feb 25, 2024 பாந்தே Sasanawanse தொடர்ந்து மெத்தா பாவனை செய்வதன் நன்மைகளைப் பல சுத்த உதாரணங்களை கொண்டு பாந்தே விளக்கினார். அவற்றுள் சில... ஃஃஃ அங்குத்தர நிகாயம் AN10.219 Karajakāya sutta வினை தோற்றுவித்த இந்த உடல் சுத்தம் (சுருக்கம்) பகவான் புத்தர் கூறுகிறார்: "தீவினை செய்திருந்தால் அதன் பலனை அனுபவிக்காமல் துன்பத்தின் முடிவுக்கு வர முடியாது. அந்த வினைப் பயனை இந்த வாழ்க்கையில் அல்லது அடுத்த வாழ்க்கையில் அல்லது அதன் பின் தொடரும் வாழ்க்கைகளில் அனுபவிக்க நேரிடும். (அந்த தீவினைப் பலனைக் குறைப்பது எப்படி?) ஒரு மேன்மையான சீடர்  பேராசை இல்லாமல்,  பகைமை இல்லாமல்,  குழப்பம் இல்லாமல்,  தெளிவான மனதுடன்  தம்முள்ளத்தில் அன்பு நிறைந்தவராக அந்த அன்பை ஒரு திசையில் பரப்புகிறார். பின் இரண்டாம், மூன்றாம், நான்காம் திசைகளில் பரப்புகிறார். அதே போல மேல் திசையிலும் கீழ் திசையிலும் உலகம் முழுவதற்கும் தன் அன்பை செலுத்துகிறார் - நிறைந்த, பரந்த வரையறையற்ற, பகைமையற்ற அன்பு அது. அவர் இவ்வாறு அறிகிறார்: 'முன்பு எனது உள்ளம் அளவானதாக, வளர்க்கப்படாமல் இருந்தது. இப்போது அது அளவற்றதாகவும் நன்றாக வளர்க்கப்பட்டு

கேள்வியும் பதிலும்

  Feb 11, 2024  பாந்தே Sasanawanse  பாந்தேவுடன் கேள்வியும் பதிலும் (கேட்டதை நினைவில் வைத்துக் கொண்டு எழுதப்பட்டது. பிழைகளுக்கு நானே பொறுப்பு) கேள்வி: எல்லாம் அநிச்சம் என்று சொல்லப்படுகிறது. மருத்துவ பரிசோதனைக்கு சென்ற பின் அதன் முடிவுகள் நாம் விரும்பியபடி இல்லாவிட்டால், நாம் எதுவும் செய்யாமல் இருந்துவிடலாமே? அநிச்சத்தின் காரணமாக தானாக சரியாகி விடலாம் அல்லவா? பதில்: இல்லை, இல்லை. உடலை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். உடலில் பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும். அவர் சொல்படி கேட்க வேண்டும். தரப்படும் மருந்துகளை அவர் சொன்னபடி உட்கொள்ள வேண்டும். நம்மால் முடிந்தவரை உடலை கவனித்துக் கொள்ள வேண்டும்.  ஆனால், ஒரு நாள் உடலின் பிணியை எந்த மருத்துவராலும் குணப்படுத்த முடியாத நிலை வரும். அதனால் தான் இந்த உடல் நிலையற்றது, அநிச்சம் என்று சொல்கிறோம். ஃஃஃ கேள்வி: தமிழ்நாட்டில் பௌத்தம் என்றால் கடவுள் இல்லாத மதம் என்று பரவலாகக் கருதப்படுகிறது. ஆனால் நீங்கள் கடவுளரை பற்றியும், தேவர்களைப் பற்றியும் அவர்களை வணங்குவதைப் பற்றியும் கூறுகின்றீர்கள். பதில்: புத்தர் ஒரு கடவுள் இல்லை.   ஆனால் பௌத்

சப்பாசவ சுத்தம் 2/2

 சப்பாசவ சுத்தம் MN2 மஜ்ஜிம நிகாயம் உள்ளக் கறைகளெல்லாம் Part 2 கட்டுப்படுத்திக் கைவிட வேண்டிய கறைகள் 12. "துறவிகளே, கட்டுப்படுத்திக் கைவிட வேண்டிய கறைகள் எவை? [11] இங்கு ஒரு பிக்கு விவேகத்துடன் சிந்தித்து கட்புலனை அடக்கி வாழ்கிறார். கட்புலனை அடக்காமல் வாழ்கின்ற ஒருவருக்கு கறைகளும், துன்பமும், காய்ச்சலும் தோன்றலாம். ஆனால் கட்புலனை அடக்கி வாழ்கின்ற ஒருவருக்கு இவை ஏதும் தோன்றுவதில்லை. [12] விவேகத்துடன் சிந்தித்து செவிப்புலன் அடக்கி வாழ்கிறார்...மோப்பத்தை அடக்கி...சுவையை அடக்கி...தொடுவுணர்வுப்புலனை அடக்கி... மன உணர்வை அடக்கி..... புலன்களை அடக்காமல் வாழ்கின்ற ஒருவருக்கு கறைகளும், துன்பமும், காய்ச்சலும் தோன்றலாம். ஆனால் புலன்களை அடக்கி வாழ்கின்ற ஒருவருக்கு இவை ஏதும் தோன்றுவதில்லை. இவையே கட்டுப்படுத்திக் கைவிட வேண்டிய கறைகள். பயன்படுத்திக் கைவிட வேண்டிய கறைகள்   13. "துறவிகளே, பயன்படுத்திக் கைவிட வேண்டிய கறைகள் எவை? [13] இங்கு ஒரு பிக்கு விவேகத்துடன் சிந்தித்து, தனது சீவர ஆடையை தன்னை குளிரிலிருந்து பாதுகாக்கவும், வெப்பத்திலிருந்து பாதுகாக்கவும், ஈக்கள், கொசுக்கள் ஆகியவற்றின் கடிகள

சப்பாசவ சுத்தம் 1/2

 சப்பாசவ சுத்தம் MN2 மஜ்ஜிம நிகாயம் உள்ளக் கறைகளெல்லாம் 1. நான் இவ்வாறு கேள்வியுற்றேன். ஒரு முறை புத்தர் சாவத்தி நகருக்கருகே, ஜேதா வனத்தில், அனாதபிண்டிகரின் விகாரத்தில் எழுந்தருளியிருந்தார். அப்போது அங்கு இருந்த பிக்குமார்களுக்கு அவர் உரையாற்றினார். "துறவிகளே." - "அண்ணலே!" என்று துறவிகள் பதிலளித்தனர்.    2. துறவிகளே, உள்ளத்தின் கறைகளை [1] கட்டுப்படுத்த ஒரு போதனையை கற்பிக்கப் போகிறேன். நான் சொல்வதை கவனமாக கேளுங்கள்."- "சரி, அண்ணலே," என்று துறவிகள் பதிலளித்தனர். பகவர் இவ்வாறு போதித்தார்:  சுருக்கம்  3."துறவிகளே, அறிந்து உணர்ந்து கொள்பவர்களால் மட்டுமே கறைகளை அழிக்க முடியும். அறியாதவர்களுக்கு, உணர்ந்துகொள்ள முடியாதவர்களுக்கு அது முடியாது. கறைகளை அழிக்க என்ன அறிய வேண்டும், எதனை உணர வேண்டும்? அவை இரண்டு: விவேகத்துடன் அவதானித்தல் (கவனம் செலுத்துதல்), விவேகமற்ற அவதானம் [2]. ஒருவர் விவேகம் இல்லாமல் கவனம் செலுத்தினால் இதுவரை தோன்றாத கறைகளும் தோன்றும், ஏற்கனவே தோன்றிய கறைகளும் பெருகும். விவேகத்தோடு கவனம் செலுத்தும் போது இதுவரை தோன்றாத கறைகள் தோன்றுவதில

தேவர்களும் தேவ உலகங்களும்

  Feb 4 போதனை சாரம்சம் பாந்தே Sasanawanse தேவர்களும் தேவ உலகங்களும் உள்ளதாக புத்தர் கூறினாரா? ஃஃஃ பிக்குமார்கள் தங்களை வணங்குவோரை, இந்த (தம்மபதம் 109) செய்யூளோடு ஆசீர்வதிப்பார்கள்: Abhivadana silissa niccam vuddhapacayino cattaro dhamma vaddhanti ayu vanno sukham balam. எப்போதும் (niccam) ஞானத்தினாலும் வயதினாலும் மூத்த பெரியோர்களை வணங்குகிறவர்களுக்கும் (vuddhapacayino),  சீலங்களை கடைபிடிப்பவர்களை வணங்குகிறவர்களுக்கும் (Abhivadanasilissa)  ஆயுள் (ayu),  அழகு (vanno),  இன்பம் (sukham),  ஆற்றல் (balam)  ஆகிய நான்கும் (cattaro dhamma) அதிகரிக்கும் (vaddhanti). இரண்டு வாரங்களுக்கு முன்பு மட்டக்குண்டலி பற்றி அறிந்தோம். அவர் புத்தரை வணங்கிய ஒரே காரணத்தால் தேவலோகத்தில் மறுபிறப்பெடுத்து திவ்ய ஆயுள், திவ்ய அழகு, திவ்ய இன்பம், திவ்ய ஆற்றல் கண்டார். (விமான வத்து 7.9 மட்டக்குண்டலியின் அரண்மனை) ஆம், தேவர்கள், தேவலோகங்களைப் பற்றி புத்தர் கூறியுள்ளார். சங்யுத்த நிகாயத்தில் தேவர்கள் பற்றிய போதனைகள் (Devaputtasaṁyutta SN 2), பிரம்மதேவர் பற்றிய போதனைகள் (Brahmasaṁyutta SN 6), சக்கர் பற்றிய போதனைகள்

Jan 28 போதனை

பாந்தே Sasanawanse தியானத்தில் விருத்தியடைதல் எப்படி என்பதே Jan 28 போதனையின் சாரம்சம். பாந்தே குறிப்பிட்ட சில கருத்துக்கள்: ஃ ஆனாபானா சதி தியானம் (உன் மூச்சு வெளி மூச்சு கவனித்தல்) செய்வதில் சிரமம் இருந்தால் முதலில் மெத்தா (எல்லா உயிர்கட்கும் வரையறையற்ற அன்பு செலுத்துதல்) தியானத்தோடு தொடங்குங்கள் அல்லது புத்தானுஸ்ஸதி தியானம் (புத்த பகவானின் ஒன்பது பண்புகளை நினைவுகூரும் தியானம்) தியானத்தோடு தொடங்குங்கள். மெத்தா தியானம்: https://youtu.be/dtI8qiBEcaU?feature=shared ஃ மெத்தா தியானம் பயில்வதன் நன்மைகளுல் ஒன்று: மனத்தை விரைவாக ஒரு நிலைப்படுத்த முடிவது. ஃ ஐந்து சீலங்களை கடைப்பிடிப்பது நல்லது. பொறிகளை கட்டுப்படுத்தி இருப்பது நல்லது. இதனால் தியானத்தில் முன்னேறலாம். indriya-saṃvara-sīla விகாரைக்கு போக முடிந்தால், அவ்விடத்தை சுத்தம் செய்தல் பிக்குமார்களுக்கு உதவுதல் போன்ற புண்ணியச் செயல்கள் சீலத்தை முழுமையடையச் செய்யும். ஃ காலை நேரங்களில் தியானம் செய்வது நல்லது. ஃ சீலங்களை கடைப்பிடிக்க உதவும் மற்றொரு விஷயம்: வெட்கம்-அச்சம் (ஹிரீ-ஒத்தாப்ப) இருப்பது நல்லது. ஹிரீ என்றால் மனசாட்சி. தவறு செய்யுமுன்

Jan 21 விமான வத்து கதைகள்

  Jan 21:  பாந்தே Sasanawanse போதனையின் சாராம்சம், புத்தர் மீது நம்பிக்கை இருந்தால் அது  நல் விளைவுகளையும், பெரும் மகிழ்ச்சியையும் அளிக்கும் என்பதே. திரிபிடத்தின் விமான வத்து புத்தகத்திலிருந்து பல சம்பவங்களை  எடுத்துக்காட்டினார். ஃஃஃ விமான வத்து  5.6 கரணிய சுத்தம் https://suttafriends dot org/sutta/vv5-6/ மொக்களானர் சொர்க்கத்திற்கு சென்று ஒரு தேவதையின் அழகிய அரண்மனையைப் பார்த்து வியந்து புகழ்ந்தார். அப்படிப்பட்ட மாளிகை கிடைப்பதற்கு தான் என்ன புண்ணிய காரியங்களை செய்தார் என்று கேட்க, தேவதை:  "மெய்யறிவு உடையோர் தங்கள் நலம் கருதி புண்ணிய காரியங்களை செய்ய வேண்டும். பகவான் புத்தர் சரியான பாதையை தொடர்ந்து பயணத்தை முடித்தவர். அப்படிப்பட்ட புத்தர்களுக்கு தானம் தருவது பெரும் பலனைத் தரும். என் அதிர்ஷ்டவசம், ஒரு நாள் புத்தர் வனத்திலிருந்து வெளியே வந்து எங்கள் கிராமத்திற்கு வந்தார். அவரை பார்த்தவுடன் என் மனதில் நம்பிக்கை தோன்றியது. அதன் விளைவாக இந்த தாவதிம்ச சொர்க்கத்துக்கு நான் வந்து சேர்ந்தேன். அந்த புண்ணியக் காரணத்தினால் நான் ஒரு அழகிய தேவதையாக பிறந்து, எல்லா சுக போகங்களையும் அனுபவிக்கின்

Jan 14 போதனை Cūḷanikāsutta

  Jan 14, 2024  பாந்தே Sasanawanse  விவரித்த சுத்தம். AN3.80 Cūḷanikāsutta https://suttacentral dot net/an3.80/ (சுருக்கம் மட்டும்) இவ்வாறு நான் கேள்விப்பட்டேன். ஒருமுறை போற்றுதற்குரிய ஆனந்தர் பகவரிடம் சென்று, அவரை வணங்கி ஒரு புறமாக அமர்ந்தார். அப்போது ஆனந்தர் பகவரியிடம், "அண்ணலே, 'ஆனந்தா, சிக்கி புத்தரின் சீடரான அபிபு, பிரம்மலோகத்தில் நின்று கொண்டிருக்கையில் ஆயிரம் உலகங்களுக்கு அவருடைய குரலை செலுத்தக் கூடிய ஆற்றல் பெற்றவராக இருந்தார்,' என்று நீங்கள் சொல்ல கேட்டிருக்கின்றேன்." "அப்படியென்றால், முழுமையாக ஞானம் பெற்ற பகவர் எவ்வளவு தூரம் அவருடைய குரலை செலுத்த முடியும்?" "அவர் ஒரு சீடர் ஆனந்தா, தாதாகதர்களை அளவிட முடியாது." ஆனந்தருக்கு அந்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்பதால் இரண்டாம் முறை, மூன்றாம் முறை அதே கேள்வியை திரும்பக் கேட்டார். "ஆயிரம் மடங்கு சிறிய மண்டலம் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றாயா? அதில் ஆயிரம் நிலவுகளும், ஆயிரம் கதிரவனும், ஆயிரம் மேரு மலைகளும், ஆயிரம் இந்திய கண்டங்களும்.... ஆயிரம் பிரம்மலோகங்களும் உள்ளன. அப்படிப்பட்ட சிறிய மண்டலங

சுந்தருக்குத் தந்த போதனை

  வெள்ளிக்கொல்லர் சுந்தருக்குத் தந்த போதனை அங்குத்தர நிகாயம் AN 10.176 நான் இவ்வாறு கேள்வியுற்றேன். ஒருமுறை பகவர் பாவா ஊருக்கு அருகே வெள்ளிக்கொல்லர் சுந்தரின் மாந்தோப்பில் தங்கியிருந்தார். வெள்ளிக்கொல்லர் சுந்தர் பகவரிடம் சென்று, அவரை வணங்கி, பின் ஒரு புறமாக அமர்ந்தார். அமர்ந்திருந்த அவரிடம் பகவர், "சுந்தா, எப்படிப்பட்ட தூய்மை ஆசாரத்தை நீ ஏற்கின்றாய்?" என்று கேட்டார். "தண்ணீர் பானைகளை தூக்கிச் செல்லும், நீர்ச் செடிகளாலான மாலைகளை அணிந்து கொண்டும், தீயை வழிபடும், நீரால் தூய்மை செய்து கொள்ளும் மேற்கத்திய நாட்டு பிராமணர்கள் உரைக்கும் தூய்மையாச்சாரத்தை நான் ஏற்கின்றேன், ஐயா." "அவ்வாறு தண்ணீர் பானைகளை தூக்கிச் செல்லும், நீர்ச் செடிகளாலான மாலைகளை அணிந்து கொண்டும், தீயை வழிபடும், நீரால் தூய்மை செய்து கொள்ளும் மேற்கத்திய நாட்டு பிராமணர்கள் எவ்வாறான தூய்மையாச்சாரத்தை உரைக்கின்றனர்?" "....மேற்கத்திய நாட்டு பிராமணர்கள் தங்கள் சீடர்களை இவ்வாறு பயிற்சி மேற்கொள்ள கூறுவர்: 'வாரும் உத்தமபுருஷர்களே, சரியான நேரத்தில் படுக்கையிலிருந்து எழுந்து பூமியைத் தொட வேண