Posts

Showing posts from 2023

காலாமர்களுக்கு தந்த போதனை

  காலாமர்களுக்கு தந்த போதனை அங்குத்தர நிகாயம் AN 3.65 ஃஃஃ ஒன்றுக் கொன்று முரண்பாடான ஆன்மீக கருத்துக்களை எவ்வாறு கையாள்வது என்பதை பகவர் கேசபுத்த நகரைச் சார்ந்த காலாமர்களுக்கு எடுத்துரைக்கின்றார். ஃஃஃ ஒருமுறை பகவர் கோசல நாட்டில், ஒரு பெரும் பிக்கு சங்கத்தினருடன் சுற்றுப்பிரயாணம் செய்து கொண்டிருக்கையில், கேசபுத்திரம் என்னும் காலாமர் மக்கள் வாழும் ஊருக்கு சென்றடைந்தார். காலாமர்கள் இவ்வாறு கேள்விப்பட்டனர்: "சமணர் கோதமர், சாக்கியரின் புதல்வர், சாக்கியர் குடும்பத்திலிருந்து வீடு துறந்தவர், கேசபுத்திரம் வந்துள்ளார். இவரைப் பற்றி ஒரு சிறந்த கருத்து பரவியிருக்கிறது: 'கோதமர் ஒரு அருகர், முழுமையாக விழிப்புற்றவர், முழுமையான அறிவும் நடத்தையும் கொண்டவர், மங்கலமானவர், பிரபஞ்சத்தை அறிந்தவர், கற்பிக்கக் கூடியவருக்கான தன்னிகரற்ற பயிற்சியாளர், தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் ஆசிரியர்; பூரண ஞான முற்றவர்; பாக்கியவான். தேவர்களும், மாரரும், பிரம்மரும், துறவிகளும், பிராமணர்களும், மக்களும் கொண்ட இந்த உலகினை தன் நேரடி அறிவினால் உணர்ந்த அவர், மற்றவர்கும் அதனை தெரிவிக்கின்றார். அவர் துவக்கத்திலும், மத்

விபஸ்ஸனா

விபஸ்ஸனா Bhante Gunaratna ("Bhante G") தந்த விளக்கம். வி என்றால் விசேட பஸ்ஸனா என்றால் பார்வை. அதாவது ஒரு சிறப்பான வழியில் பார்ப்பது கண்கள் மூலம் பார்ப்பது வேறு.  உதாரணமாக, கண்களாள் ஒரு இலை நிறம் மாறி இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால், இலையின் தோன்றி, மறையும் அநிச்ச தன்மையை, விபஸ்ஸனா மூலம் அறிவோம். விபஸ்ஸனா உள்ளதை உள்ளபடி பார்க்கிறது. அதற்கு 'யோனிசோ மனசிகாரா' தேவை அதாவது விவேகத்துடன் கவனித்தல். Yoniso manasikārā - wise attention, impartial, unbiased attention விபஸ்ஸனா மூலம் பொருட்களின், மனநிலைகளின் 'அநிச்ச, அனாத்ம, துக்க' தன்மைகளை அறிய வேண்டும். ஃஃஃ "நிலையில வறிய துன்பம் என நோக்க"      மணிமேகலை 30-030 நிலையில - நிலையில்லாதனவென்றும் (impermanent); வறிய - சாரமற்றவை என்றும் (insubstantial, non-self, no owner); துன்பம் என - துன்பமென்றும் (unsatisfactory); நோக்க- எப்பொருளையும் எந்த மனநிலையையும் (நுகர்ச்சி, மனக்குறிப்பு, எண்ணங்கள், உணர்வு போன்றவை) நான், எனது, என் ஆன்மா என்று நினைக்காமல்,  காரணங்களால் தோன்றும் அவற்றை, தோன்றி மறையும் தன்மையுடைய  அவற்றை நிலையி

அன்பளிப்புகள் பற்றிய உரை

அன்பளிப்புகள் பற்றிய உரை Dakkhiṇāvibhaṅga Sutta dakkhiṇā - தட்சிணை, அன்பளிப்பு vibhaṅga - வியாக்கியானம், உரை மஜ்ஜிம நிகாயம் MN142 Source: The Middle Length Discourses of the Buddha. A translation of the Majjhima Nikāya by Bhikku Ñanamoli and Bhikku Bodhi - Wisdom Publications மகாபஜாபதி கோதமி தரும் அன்பளிப்பை புத்தர் ஏற்க மறுப்பு   இவ்வாறு நான் கேள்வியுற்றேன். ஒரு சமயம் பகவர் சாக்கியர் நாட்டின் கப்பிலவத்துவில் உள்ள நிக்ரோதரின் விகாரையில் எழுந்தருளியிருந்தார்.   அப்போது மகாபஜாபதி கோதமி [1] இரண்டு புதிய துணிகளோடு பகவரிடம் சென்றார். அவரை வணங்கியபிறகு ஒரு புறமாக அமர்ந்து பகவரிடம், "போற்றுதற்குரிய ஐயா, இந்த இரண்டு புதிய துணிகளை நான் பகவருக்காகவே இழைத்து, நெய்துள்ளேன். பகவர் கருணையோடு இதனை என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாராக," [2] என்று கேட்டுக் கொண்டார்.   இதை கேட்ட பகவர் அவரிடம் "இதை சங்கத்துக்குத் தரவும், கோதமியாரே. சங்கத்துக்குத் தரும்போது நானும் சங்கத்தாரும் கௌரவிக்கப்படுவோம்."   இரண்டாவது முறை, மூன்றாவது முறை கோதமி பகவரிடம், "போற்றுதற்குரிய ஐயா........ இதனை கருணையோ

ஆரிய மார்க்க சுத்தம்

ஆரிய மார்க்க சுத்தம்: மேன்மையான பாதை Ariyamagga Sutta: The Noble Path  AN 4.237 translated from the Pali by Thanissaro Bhikkhu "துறவிகளே, நான்கு விதமான செய்கைகளை நான்  நேரடியாக அறிந்து,, சரிபார்த்து,தெரியப்படுத்தியுள்ளேன். எந்த நான்கு? 1. இருளான செயல், அதனால் இருளான விளைவு. 2. பிரகாசமான செயல், அதனால் பிரகாசமான விளைவு. 3. இருளான மற்றும் பிரகாசமான செயல், அதனால் இருளான மற்றும் பிரகாசமான விளைவுகள். 4. இருளற்ற பிரகாசமுமற்ற செயல்‌, அதனால் இருளும் இல்லாத பிரகாசமும் இல்லாத விளைவு. இது கன்மத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லும். 'இருளான செயல் அதனால் இருளான விளைவு', என்றால் என்ன? ஒருவர் தங்கள்  மனோவாக்குக்காயங்களில் (மனம், சொல், உடல்)  புண்படுத்தும் செய்கையில் ஈடுபட்டால், அதன் காரணமாக அவர் ஒரு புண்படுத்தும் உலகில் தோன்றுகிறார். அவர் அங்கு புண்படுத்தும் ஊறுகளால் [1] தொடப்படுகிறார். புண்படுத்தும் ஊறுகளால் தொடப்பட்ட அவர், நரகத்தில் உள்ள ஜீவன்களைப்போலவே, முழுமையாக துன்பமான நுகற்சிகளையே அனுபவிக்கிறார்.  இதுவே 'இருளான செயல் அதனால் உண்டாகும் இருளான விளைவு', என்பது. 'பிரகாசம

போஜங்க சுத்த பரித்தம்

Image
  போஜங்க சுத்த பரித்தம் சிவானி குப்தா அகர்வால் அவர்கள் குரலில் (பரித்தம் - துன்ப நிவாரணத்தின் பொருட்டுச் ஓதும் சுத்தங்கள்) Bojjhango sati-sankhāto Dhammānam vicayo tathā Viriyam-pīti-passaddhi Bojjhangā ca tathāpare போதி அங்கங்கள் ஏழு. அவை கடைப்பிடி, தம்மங்களை ஆராய்தல், வீரியம் (முயற்சி), அகமலர்ச்சி, அமைதி ... மேலும் இரண்டு. Samādhupekkha-bojjhangā Sattete sabba-dassinā Muninā sammadakkhātā Bhāvitā bahulīkatā சமாதியும், மன சமநிலையும். இந்த ஏழும் எல்லாம் அறிந்த முனிவரால் நன்கு விளக்கப்பட்டு இருக்கின்றன. அவை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன, மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யப்பட்டுள்ளன. Samvattanti abhiññāya Nibbānāya ca bodhiyā Etena sacca-vajjena Sotthi te hotu sabbadā. இதனால் மெய்ஞானம் எழுகிறது, துக்கம் முடிவுக்கு வருகிறது, மார்க்கம் அறியப்படுகிறது. இந்த அருள் வாக்கினால் எப்போதும் மணமகிழ்வோடு இருப்பீர்களாக! Ekasmim samaye nātho Moggallānañca Kassapam Gilāne dukkhite disvā Bojjhange satta desayi ஒரு சமயம் மொக்களானரும் கஸ்ஸப்பரும் உடல் நலம் குன்றி துன்புற்றிருப்பதைக் கண்டு பகவர் அவர்களுக்கு

சவித்தருடன்

  சவித்தருடன் 3.21 அங்குத்தற நிகாயம்  பிற மதத் தலைவர்கள் ஞானம் அடைந்தவர்களா, இல்லையா என்று சுபத்திரர் கேட்ட கேள்விக்கு புத்தர், '... எந்த ஒரு அறநெறியில் ..மேன்மையான அட்டாங்க மார்க்கம் அறியப்படுகிறதோ அங்கு முதல்... இரண்டாம்… மூன்றாம்… நான்காம் ஞான நிலையை அடைந்தவர்களைக் காண முடியும்', என்றார். (மஹா பரிநிப்பாண சூத்தம் DN16) எனவே அட்டாங்க மார்க்கம் மட்டுமே துக்கத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லும். ஆனால் அந்த பாதையில் எவ்வாறான பயணம் மேற்கொள்கிறோம் என்பதில் வேறுபாடுகள் இருக்கலாம். உதாரணமாக மூன்று பேர் நெடுஞ்சாலையில் செல்கின்றனர். ஒருவர் மாருதி வண்டியிலும், மற்றொருவர் மஹிந்திரா வண்டியிலும், மூன்றாம் நபர் டாடா வண்டியிள் செல்வது போலத் தான். அவர்கள் மூவரும் வெவ்வேறு 'மாடல்' வண்டியில் சென்றாலும் அவை மூன்றுமே போக வேண்டிய இடத்துக்கு எடுத்துச் செல்லும்.  அதுபோலவே அட்டாங்க மார்க்கத்தை மூன்று வழிகளில் மேற்கொள்ளலாம் என்பதை இந்த சுத்தம் எடுத்துக்காட்டுகிறது. சவித்தருடன் 3.21 அங்குத்தற நிகாயம் நான் இவ்வாறு கேள்வியுற்றேன். ஒரு முறை புத்தர் சாவத்தி நகருக்கருகே, ஜேதா வனத்தில், அனந்தபி

எண்ணங்களை சாந்தப்படுத்தல்

  Vitakka saṇṭhāna sutta Vitakka - எண்ணம், எண்ணுவது Santhana - சாந்தப்படுத்தல் மஜ்ஜிம நிகாயம் MN 20 ஃஃஃ நான் இவ்வாறு கேள்வியுற்றேன். ஒரு முறை புத்தர் சாவத்தி நகருக்கருகே, ஜேதா வனத்தில், அனந்தபிண்டிகரின் பூங்காவில் எழுந்தருளியிருந்தார். அப்போது அங்கு இருந்த பிக்குமார்களுக்கு அவர் உரையாற்றினார். "துறவிகளே." - "அண்ணலே!" என்று துறவிகள் பதிலளித்தனர்.  "துறவிகளே, மேலான மனதை [1] நாடும் ஒரு துறவி அவ்வப்போது இந்த ஐந்து குறிகள் (நிமித்தங்கள்) மீது கவனம் செலுத்த வேண்டும். அந்த ஐந்து எவை? i ஒரு துறவி ஏதோ ஒரு குறியின் மீது கவனம் செலுத்தும் போது அதன் காரணமாக அவர் மனதில் காமம், வெறுப்பு, மயக்கம் சம்பந்தப்பட்ட தீய திறமையற்ற எண்ணங்கள் தோன்றுமேயானால், அவர் வேறு ஒரு சாமர்த்தியமான எண்ணங்கள் சம்பந்தப்பட்ட குறிக்கு [2] கவனத்தை செலுத்த வேண்டும். அவர் அவ்வாறு சாமர்த்தியமான எண்ணங்கள் சம்பந்தப்பட்ட குறிக்கு கவனம் செலுத்தும் போது காமம், வெறுப்பு, மயக்கம் சம்பந்தப்பட்ட திறமையற்ற எண்ணங்கள் அமைதியாகி, கைவிடப்படுகின்றன. அவை கைவிடப்பட்ட பின், அவர் மனம் அடங்கி, சாந்தமடைந்து, ஒன்றி, ஒருமுகப

பாந்தே அறிவுரை

ஐந்து ஒழுக்கங்களை கடைப்பிடிப்பது முக்கியம். அதனால் நமக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. நம்மை சுற்றி இருப்பவருக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. நமக்கு நாமே மற்றும் நாம் பிறருக்கு தரும் அன்பளிப்பு அது. நமக்கு புண்ணியம் சேரும். இம்மையில் மகிழ்ச்சி தரும் மறுமையில் சொர்க்கத்துக்கு எடுத்துச் செல்லும். [1]  அப்படி கடைபிடிக்க முடியவில்லையென்றால் பரவாயில்லை. 'அட, இந்த ஒழுக்கத்தை காப்பாற்ற முடியவில்லையே!', என்று நினைத்து வருத்தப்படுவதில் பயனில்லை.  ஆனால் முக்கியமாக, விரைவில் ஒன்றைச் செய்ய வேண்டும்.   மீண்டும் ஐந்து ஒழுக்கங்களை கடைப்பிடிப்பதற்கு நேர்ந்துக் கொள்ள வேண்டும். மீண்டும் நேர்ந்துக் கொள்ளும் வரை அது ஒரு ஆபத்தான காலம். பாதுகாப்பு இல்லாத காலம்.  ஒரு புத்தர் உருவத்தின் முன் அல்லது நாமே மனதில் ஐந்து ஒழுக்க விதிகளை சொல்லிக் கொள்ள வேண்டும்.  எந்த உயிரையும் கொல்லுதலைத் தவிர்கும் ஒழுக்க விதியை மேற்கொள்கிறேன். பிறர் பொருளை களவு செய்வதைத் தவிர்கும் ஒழுக்க விதியை மேற்கொள்கிறேன். தவறான பாலியல் உறவுகளைத் தவிர்கும் ஒழுக்க விதியை மேற்கொள்கிறேன். [2] தவறான பேச்சு உரைப்பதைத் தவிர்கும் ஒழுக்க விதிய

தேவதா சுத்தம் - ஒரு தேவன்

  பொதுவாக கீழ் உலகத்தில் பிறந்தவர்கள் தான் வருத்தப்படுவார்கள் என்று நாம் நினைக்கலாம். அதாவது நரக, மிருக, பூத உலகங்களில் பிறந்தவர்கள். மனிதர்களாக வாழ்ந்த போது, நற் பண்புடனும் விவேகத்துடனும் நடந்துக் கொண்டு புண்ணியம் சேர்த்திருந்தால் தமக்கு இந்த கொடுமையான நிலை வந்திருக்காது என்று நினைத்து வேதனைப்படுவார்கள்.  ஆனால் சொர்க்க லோகத்தில் பிறந்தவர்களும் வருத்தப்படலாம் என்பதை இந்தச் சுத்தம் விளக்குகிறது முக்கியமாக இந்த சுத்தம் விவேகத்துடன் வாழ்வதன் முக்கியத்துவத்தையும், அறத்தைப் பயில கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது. படிப்படியாக மேல் செல்லும் தேவலோகங்கள்: மண்ணுலக தேவர்கள் சாதும்மஹாராஜிக தேவர்கள் தாவதிங்ச தேவர்கள் யாம தேவர்கள் துசித தேவர்கள் நிம்மாணரதீ தேவர்கள் பரனிம்மிதவசவத்தி தேவர்கள் ... ஆபஸ்ஸர தேவர்கள் பரித்தசுப தேவர்கள் ... சுதஸ்ஸீ தேவர்கள் பிரம்ம லோக தேவர்கள் Devatāsutta, A Deity AN 9.19 தேவதா சுத்தம் - ஒரு தேவன் அங்குத்தர நிகாயம் 9.19 "துறவிகளே இன்று இரவு பல பிரகாசமான தேவர்கள் ஜெதவனத்தை ஒளிமயமாக்கியவாரு என்னிடம் வந்து, வணங்கி, ஒருபுரம் நின்று சொன்னது

புகழை நாடி

 மற்றவர் நம்மை புகழ வேண்டும் என்று நினைப்பது சரியா? இது ஆணவம் சம்பந்தப்பட்டது, எனவே அவ்வாறு விரும்புவதாகாது என்று நாம் நினைக்கலாம். ஆனால் புத்தர் ஒழுக்கத்துடன் வாழ்பவர் அதன் காரணமாக மற்றவர் தம்மை புகழ வேண்டும் என்று விரும்புவது சரியே என்கிறார். இதிவுத்தகா #76 Itivuttaka குத்தக நிகாயம் மகிழ்ச்சியை நாடுவது இது பகவான் புத்தர் சொன்னது... "துறவிகளே, மூன்று வகையான மகிழ்ச்சியை விரும்பி, நல்லறிவுடையார் தமது ஒழுக்கத்தை காப்பாற்றுகிறார். அந்த மூன்று எவை? 'என்னை நாடிப் புகழ் வர வேண்டும்,' என்று விரும்பி அறிவுடையவர் தமது ஒழுக்கத்தை பாதுகாக்கிறார். 'நான் செல்வந்தராக வேண்டும்,' என்று விரும்பி அறிவுடையவர் தமது ஒழுக்கத்தை பாதுகாக்கிறார். 'உடல் அழியும் சமயத்தில், மரணத்தின் போது நான் சொர்க்கலோகத்தில் மறுபிறப்பெடுக்க வேண்டும்,' என்று விரும்பி அறிவுடையவர் தமது ஒழுக்கத்தை பாதுகாக்கிறார்.. இந்த மூன்று மகிழ்ச்சிகளை விரும்பி அறிவுடையவர் தமது ஒழுக்கத்தை பாதுகாக்க வேண்டும்."

பாந்தே அறிவுரை

பௌத்தத் துறவிகள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ளும் ஒரு வலிமை மிகு கேள்வி, உங்கள் பாதங்களை நீங்களே வணங்குவதற்கு தயாரா?', என்பதுதான். முடியும் என்றால் அருமை! தொடர்ந்து உள்ளபடி செயல்படுங்கள்.  முடியாது என்றால் பரவாயில்லை. ஆனால் நீங்கள் புதிதாக செய்ய வேண்டிய காரியங்கள் உள்ளன. அதன் மூலம் உங்களையே நீங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் கால்களையே நீங்கள் வணங்குதற்கு தகுதி பெறும் வரை.

மஹாநாமருடன்

  மஹாநாமருடன் (சங்யுத்தத நிகாயம் 55.21) With Mahānāma (1st) இவ்வாறு கேள்வியுற்றேன். ஒரு சமயம் புத்தர் சாக்கியரின் நாட்டில், கபிலவத்து அருகில், ஆலமர விகாரையில் தங்கியிருந்தார். சாக்கியர் மஹாநாமர் புத்தரிடம் சென்று, வணங்கி, ஒரு புறம் அமர்ந்து, அவரிடம் சொன்னார்: "ஐயா, இந்த கபிலவத்து செல்வ செழிப்புள்ள ஊர். முட்டுச்சந்து மூலைமுடுக்கெல்லாம் மக்கள் நிறைந்துள்ளனர். பிற்பகல் புத்தருக்கு அல்லது ஒரு மதிக்கத்தக்க துறவிக்கு அஞ்சலி செலுத்தியபின் நான் கபிலவத்து நுழையும் போது ஒரு தனி யானையை அல்லது ஒரு குதிரையை அல்லது ஒரு தேரை, ஒரு மாட்டு வண்டியை, ஒரு மனிதரை சந்திக்க நேர்கிறது. அப்போது புத்த, நம்ம சங்கம் பற்றிய மன கவனம் இழந்து விடுகிறேன். 'நான் இந்த சமயத்தில் இறந்து விட்டால் அடுத்த பிறப்பில் எங்கே பிறப்பேனோ', என்ற அச்சம் என்னுள் தோன்றுகிறது." "பயப்படாதே மஹாநாமா, பயப்படாதே! உனது மரணம் மோசமானதாக இருக்காது. உனது மறைவு மோசமானதாக இருக்காது. நீண்ட நாட்களாக நம்பிக்கை, ஒழுக்கம், போதனைகள் பற்றிய அறிவு, தயாள குணம், விவேகம் (saddhā, sīla, suta, cāga, paññā) ஆகிய பண்புகளில் மனம் தோய்ந்

ஒரு பாந்தே தந்த அறிவுரை

  ஒரு பாந்தே தந்த அறிவுரை. நாம் பல பிரச்சனைகளை நினைத்து கவலை படுகிறோம்: குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை, தொழில் பிரச்சனை, உடல் பிரச்சனை, என்று பலவகை பிரச்சனைகளை, அவற்றைப் பற்றிய சிந்தனைகள்.  ஆனால் இவையெல்லாம் சிறிய விஷயங்கள். நாம் நினைக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அது, நமது அடுத்த பிறப்பு எப்படிப்பட்டதாக இருக்கும், என்பது தான். நம்மில் பெரும்பாலானோர் மறுபிறப்பு எடுக்க வேண்டி இருக்கும் என்பது தான் உண்மை.  மனதில் ஆசை தோன்றுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் . எதற்கோ ஆசைப்படுகிறோம். ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. அந்த ஏக்கம் கொண்ட மனநிலையில் மரணம் தழுவுகிறோம். சொல்லிவிட்டா வருகிறது மரணம்? அப்படி குறைபாடுள்ள மனநிலையில் மரணம் தழுவினால், அடுத்த பிறப்பு நரகத்தில் அல்லது மிருக லோகத்தில் இருக்கலாம் என்று புத்தர் சொல்கிறார் (சங்யுத்த நிகாயம் 35.235). ஆனால் நம் மனதில் பல நேரங்களிலும் ஏக்கம், கோபம், குழப்பம் கொண்ட எண்ணங்கள் தோன்றுகின்றனவே? அச்சமயத்தில் இறந்து விட்டால் கீழ்கதிகளிலிருந்து எப்படி தப்பிப்பது? இந்த கேள்வி மஹாநாமருக்கும் தோன்றியது. மஹாநாமர், புத்தரின் தந்தையான சுத்தோதனர

மகிழ்ச்சியோடு வாழ ..

 மகிழ்ச்சியாக வாழ ஒன்றைச் செய்ய வேண்டும். அது என்ன? புண்ணியம் சேர்த்தல். மூன்று வழிகளில் புண்ணியம் சேர்க்கலாம். 1. தானம் செய்தல் சாப்பிட்ட பின் கழுவிய பாத்திரத்தில் உள்ள தண்ணீரை, 'இந்த தண்ணிர் விலங்குகளின் தாகத்தைத் தீர்க்கட்டும்', என்று நினைத்தவாரு எரிந்தால், அதுகூட புண்ணியம சேர்க்கும் ஒரு தானச் செயலே. 2. ஒழுக்கத்தோடு வாழ்ந்தல். தானம் செய்வதை விட மேன்மையானது ஐந்து சீலங்களை கடைப்பிடித்தல். 3. நற் கடைப்பிடி அதாவது மன கவனத்தோடு இருத்தல். மேற்குறிப்பிட்ட இரண்டு வழிகளை விட இது மேன்மையானது. (கோட்டை வாயிலிலில் உள்ள காவலாளி தெரிந்தவரை மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றான். தெரியாதவரை அனுமதிப்பதில்லை. அதேபோல் மன கவனத்துடன் இருப்பது என்பது தீய எண்ணங்களை மனதில் அனுமதிக்காமல் இருப்பது.)

கோட்டை உவமானம்

  கோட்டை உவமானம் Nagaropamasutta நகரோபமசுத்தம் The Simile of the Citadel Aṅguttara Nikāya 7.67 (சுருக்கம்) எல்லைப் புறத்தில் உள்ள ஒரு கோட்டை எப்போது வேண்டுமானாலும் எதிரிகளால் தாக்கப்படலாம். எனவே, தயார் நிலையில் இருப்பது நல்லது. அதன்படி கோட்டையின் பாதுகாப்பு அமைந்திருக்க வேண்டும். அதேபோல நாமும் காமம், வெகுளி, அறியாமை என்ற விஷங்களால், விழித்திருக்கும் எந்நேரமும் தாக்கப்படுகிறோம். எனவே, நாமும் தயார் நிலையில் இருப்பது நல்லது. கோட்டையின் பாதுகாப்புக்குத் தேவையானவற்றை உவமானங்களாகக் கொண்டு, புத்தர் மனதின் பாதுகாப்புக்கான ஏழு அத்தியாவசியங்களையும், நான்கு ஆகாரங்களையும் பட்டியலிட்டு தருகிறார்.  சூல புண்ணமா சுத்தத்தில் (சிறிய பௌர்ணமி தின போதனை MN110) வரும் நல்லோரின் ஏழு பண்புகளும், இந்த சுத்தத்தில் குறிப்பிடப்படும் ஏழு அத்தியாவசியமானவையும் ஒன்று.   அவை: 1. நம்பிக்கை saddhā 2. வெட்கம் (தவறு செய்வதற்கு) hirī  3. அச்சம் (தவறின் விளைவுகளுக்கு) ottāppa 4. போதனைகளை அறிந்திருப்பது bahussutā  5. சுறுசுறுப்புடன் செயல்படுவது vīriyā 6. கடைப்பிடி (கூர்மையான கவனம்) sati 7. விவேகம் pañña  ஃஃஃ நகரோபம

சிறிய பௌர்ணமி தின போதனை

 சிறிய பௌர்ணமி தின போதனை Cūḷapuṇṇama sutta    cūḷa சிறிய puṇṇama பௌர்ணமி மஜ்ஜிம நிகாயம் MN110 ஃஃஃ இவ்வாறு நான் கேள்வியுற்றேன். பகவர் ஒருமுறை சாவத்திக்கருகில், கிழக்கு விகாரையில், மிகாரரின் தாயின் அரண்மையில் எழுந்தருளியிருந்தார்.  அன்று பௌர்ணமி உபோசத தினம். சங்கத் துறவிகள் அவரை சூழ்ந்து இருக்க, புத்தர் ஒரு திறந்தவெளியில அமர்ந்திருந்தார். மிகவும் அமைதியாக இருந்த துறவிகளை புத்தர் கண்ணோட்டமிட்டார். அவர்களிடம், 'துறவிகளே, ஒரு நேர்மை இல்லாத மனிதர் மற்றொரு நேர்மை இல்லாத மனிதரை கண்டு, 'அவர் ஒரு நேர்மை இல்லாதவர்', என்று தெரிந்து கொள்ள முடியுமா? "முடியாது, ஐயா." "நல்லது, துறவிகளே! அது முடியாது. நேர்மை இல்லாத மனிதர், மற்றொரு நேர்மை இல்லாத மனிதரைக் கண்டு, 'அவர் நேர்மை இல்லாதவர்', என்று தெரிந்து கொள்ள இயலாது.  ஆனால், ஒரு நேர்மை இல்லாத மனிதர், ஒரு நேர்மையான மனிதரைக் கண்டு, 'அவர் ஒரு நேர்மையானவர்', என்று தெரிந்து கொள்ள முடியுமா? "முடியாது, ஐயா." "நல்லது, துறவிகளே! அதுவும் முடியாத காரியம். ஒரு நேர்மை இல்லாதவர், தீய பண்புகளையும், தீயோ

விஷப் பாம்பு உவமானம்

Image
  விஷப் பாம்பு உவமானம் Āsīvisopamasutta  Āsīvisa - விஷப் பாம்பு Upamā - உவமை சங்யுத்த நிகாயம் SN 35.238   பிறவியிலுள்ள (இம்மையிலும் மறுமையிலும்) ஆபத்தினையும், அதிலிருந்து தப்பிக்க வழியையும் - விஷப்பாம்புகள், கொலைக்காரர்கள், வெறுமையான கிராமம், கொள்ளையர்கள்.. என்று பல வலிமையான உவமானங்களின் கோர்வையாக விளக்கம் தருகிறார் புத்தர். ஃஃஃ "துறவிகளே, நான்கு மரணம் விளைவிக்கத்தக்க விஷமுள்ள விரியன் பாம்புகள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அதே சமயம், வாழ விரும்பும் ஒருவர், மரணம் விரும்பாதவர், மகிழ்ச்சியை விரும்புபவர், துன்பத்துக்கு அஞ்சுபவர் அங்கு வருகிறார். அவரிடம் இவ்வாறு சொல்வார்கள்: 'ஐயா, இங்கு நான்கு மரணம் விளைவிக்கத்தக்க விஷமுள்ள விரியன் பாம்புகள் உள்ளன. அவற்றை அவ்வப்போது எடுத்து, குளிப்பாட்டி, உணவூட்டி, தூங்க வைக்க வேண்டும். ஆனால் அவற்றில் ஒன்றேனும் உங்களிடம் கோபம் கொண்டால், நீங்கள் உறுதியாக மரணம் தழுவவேண்டியிருக்கும் அல்லது உங்களுக்கு மரண வலி ஏற்படும். நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள்.' அதைக் கேட்ட அந்த மனிதர் அந்த நான்கு விஷப் பாம்புகளுக்கு பயந்து, அங்கிருந்து, தப்பிக்க,

எண்ணங்களை நிறுத்த ஐந்து வழிகள்

  எண்ணங்களை நிறுத்த ஐந்து வழிகள் விடக்க சந்தான சுத்தம் Vitakka saṇṭhāna sutta   Vitakka - எண்ணம், எண்ணுவது Santhana - சாந்தப்படுத்தல்  மஜ்ஜிம நிகாயம் MN 20 (சுருக்கம் மட்டும்) காமம், வெகுளி (வெறுப்பு), மயக்கம் (அறியாமை) பொருந்திய திறமையற்ற எண்ணங்கள் மனதில் தோன்றினால், அவற்றை நீக்க, இந்த ஐந்து  வழிகளை பயன்படுத்தலாம் என்று புத்தர் கூறினார். 1. தீய எண்ணங்கள் மனதில் தோன்றும் போது, வேறு ஏதேனும் சாமர்த்தியமான எண்ணங்களை நினைக்க வேண்டும். அப்போது அந்த தீய எண்ணங்கள் மறைந்துவிடும். இது ஒரு தச்சர் அல்லது அவரது உதவியாளர், ஒரு பெரிய மரவாணியை   (மரத்தாலாகிய ஆணி) ஒரு சிறிய மரவாணியைக் கொண்டு வெளியே எடுப்பதற்கு ஒப்பாகும்.  2. அந்தத் தீய, திறமையற்ற எண்ணங்கள் தொடருமானால், அந்த எண்ணங்களில் உள்ள குறைபாடுகளைக் கூர்ந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்: 'உண்மையிலேயே, என்னுள் தோன்றிய இந்த எண்ணங்கள் திறமையற்றவை, என்னுள் தோன்றிய இந்த எண்ணங்கள் பழித்தற்குரியவை, என்னுள் தோன்றிய இந்த எண்ணங்கள் துன்பத்தைத் தருவன.' இவ்வாறு நினைக்கும் போது அந்த எண்ணங்களின் தாக்கம் மெல்லக் குறைந்து விடும்.  இது, கண்ணாடியின் முன் நின

ஒரு அன்பளிப்பின் தூய்மை

  ஒரு அன்பளிப்பை தூய்மைப்படுத்துவது எப்படி? (மஜ்ஜிம நிகாயம் MN142 சுருக்கம், ஒரு பகுதி மட்டும்) "ஆனந்தா, நான்கு வழிகளில் ஒரு அன்பளிப்பை தூய்மைப்படுத்தலாம். எந்த நான்கு? தருபவரால் ஒரு அன்பளிப்பு தூய்மைப்படுத்தப்படுகிறது. பெறுபவரால் அல்ல.  -   தருபவர் ஒழுக்கம் உடையவர், பண்புள்ளவர். பெறுபவர் ஒழுக்கம் கெட்டவர், தீய குணமடைவர். பெறுபவரால் ஒரு அன்பளிப்பு தூய்மைப்படுத்தப்படுகிறது. தருபவரால் அல்ல. - தருபவர் ஒழுக்கம் கெட்டவர், தீய குணமடைவர். பெறுபவர் ஒழுக்கம் உடையவர், பண்புள்ளவர்.  தருபவர், பெறுபவர் இருவராலும் ஒரு அன்பளிப்பு  தூய்மைப்படுத்தப்படாமல் போகிறது. - தருபவர், பெருபவர் இருவரும் ஒழுக்கம் கெட்டவர், தீய குணமடைவர். ஒரு அன்பளிப்பு தருபவராலும், பெறுபவராலும் தூய்மைப்படுத்தப்படுகிறது. தருபவர், பெருபவர்  இருவரும் ஒழுக்கம் உடையவர், பண்புள்ளவர்." இந்த நான்கு வழிகளில் ஒரு அன்பளிப்பு தூய்மைப்படுத்தப்படுகிறது. மேலும் அந்த கருணை உடைய புத்த பகவான் சொன்னது: "ஒழுக்கமுடைய ஒருவர், இனிய மனதோடு  நேர்மையாக பெற்ற ஒரு அன்பளிப்பை,  நற்செயலின் விளைவில் நம்பிக்கை உடையவராக, ஒழுக்கம் இல்லாதோருக்கு தரும

வேலாமர் பற்றி

 வேலாமர் பற்றி About Velāma அங்குத்தர நிகாயம் AN 9.20 சுருக்கம்:  நாம் செய்யும் தானம் - அது சாதாரணமாக இருக்கலாம் அல்லது  சிறப்பாக இருக்கலாம்  - அதை கவனத்தோடும், முன் யோசனையுடனும் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த தானத்தின் விளைவு வெளிப்படும்போது, அதனை மகிழ்வோடு அனுபவிக்க முடியும். மேலும், அந்த தானத்தின் காரணமாக சேரும் புண்ணியம், பெறுபவரின் மனப்பக்குவத்தை பொறுத்தும் இருக்கிறது.  ஒரு காலத்தில் வேலாமர் என்ற செல்வந்தர் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெரும் பொருள் தானம் செய்தார். ஆனால் அவருக்கு பெரிய அளவு பலன் கிடைக்கவில்லை. ஏனென்றால், அதை பெறுதற்கு தகுதியானவர் எவரும் இல்லை.  புத்தர் தோன்றாத காலம் அது. எண் வழி பாதையை பின்பற்றுவோர் யாரும் இல்லாத காலம் அது. தானத்தினால் வரும் பலனை விட மேன்மையானது, மும்மணிகளிடம்  சரண் செல்வது.  அதைவிட மேன்மையானது ஐந்து ஒழுக்கங்களை கடைபிடிப்பது.  அதைவிட மேன்மையானது எல்லையற்ற  அன்பை, பாகுபாடின்றி, உள்ளத்தில் வளர்ப்பது.  இவை அனைத்தையும் விட மேலான ஒன்று - ஒரு நொடியேனும் நிலையாமை உணர்த்தல்.  ஃஃஃ வேலாமர் பற்றி ஒரு முறை புத்தர் சாவத்தி நகருக்கருகே,  ஜேத வனத்தில்,