Posts

Showing posts from September, 2023

விபஸ்ஸனா

விபஸ்ஸனா Bhante Gunaratna ("Bhante G") தந்த விளக்கம். வி என்றால் விசேட பஸ்ஸனா என்றால் பார்வை. அதாவது ஒரு சிறப்பான வழியில் பார்ப்பது கண்கள் மூலம் பார்ப்பது வேறு.  உதாரணமாக, கண்களாள் ஒரு இலை நிறம் மாறி இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால், இலையின் தோன்றி, மறையும் அநிச்ச தன்மையை, விபஸ்ஸனா மூலம் அறிவோம். விபஸ்ஸனா உள்ளதை உள்ளபடி பார்க்கிறது. அதற்கு 'யோனிசோ மனசிகாரா' தேவை அதாவது விவேகத்துடன் கவனித்தல். Yoniso manasikārā - wise attention, impartial, unbiased attention விபஸ்ஸனா மூலம் பொருட்களின், மனநிலைகளின் 'அநிச்ச, அனாத்ம, துக்க' தன்மைகளை அறிய வேண்டும். ஃஃஃ "நிலையில வறிய துன்பம் என நோக்க"      மணிமேகலை 30-030 நிலையில - நிலையில்லாதனவென்றும் (impermanent); வறிய - சாரமற்றவை என்றும் (insubstantial, non-self, no owner); துன்பம் என - துன்பமென்றும் (unsatisfactory); நோக்க- எப்பொருளையும் எந்த மனநிலையையும் (நுகர்ச்சி, மனக்குறிப்பு, எண்ணங்கள், உணர்வு போன்றவை) நான், எனது, என் ஆன்மா என்று நினைக்காமல்,  காரணங்களால் தோன்றும் அவற்றை, தோன்றி மறையும் தன்மையுடைய  அவற்றை நிலையி

அன்பளிப்புகள் பற்றிய உரை

அன்பளிப்புகள் பற்றிய உரை Dakkhiṇāvibhaṅga Sutta dakkhiṇā - தட்சிணை, அன்பளிப்பு vibhaṅga - வியாக்கியானம், உரை மஜ்ஜிம நிகாயம் MN142 Source: The Middle Length Discourses of the Buddha. A translation of the Majjhima Nikāya by Bhikku Ñanamoli and Bhikku Bodhi - Wisdom Publications மகாபஜாபதி கோதமி தரும் அன்பளிப்பை புத்தர் ஏற்க மறுப்பு   இவ்வாறு நான் கேள்வியுற்றேன். ஒரு சமயம் பகவர் சாக்கியர் நாட்டின் கப்பிலவத்துவில் உள்ள நிக்ரோதரின் விகாரையில் எழுந்தருளியிருந்தார்.   அப்போது மகாபஜாபதி கோதமி [1] இரண்டு புதிய துணிகளோடு பகவரிடம் சென்றார். அவரை வணங்கியபிறகு ஒரு புறமாக அமர்ந்து பகவரிடம், "போற்றுதற்குரிய ஐயா, இந்த இரண்டு புதிய துணிகளை நான் பகவருக்காகவே இழைத்து, நெய்துள்ளேன். பகவர் கருணையோடு இதனை என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாராக," [2] என்று கேட்டுக் கொண்டார்.   இதை கேட்ட பகவர் அவரிடம் "இதை சங்கத்துக்குத் தரவும், கோதமியாரே. சங்கத்துக்குத் தரும்போது நானும் சங்கத்தாரும் கௌரவிக்கப்படுவோம்."   இரண்டாவது முறை, மூன்றாவது முறை கோதமி பகவரிடம், "போற்றுதற்குரிய ஐயா........ இதனை கருணையோ

ஆரிய மார்க்க சுத்தம்

ஆரிய மார்க்க சுத்தம்: மேன்மையான பாதை Ariyamagga Sutta: The Noble Path  AN 4.237 translated from the Pali by Thanissaro Bhikkhu "துறவிகளே, நான்கு விதமான செய்கைகளை நான்  நேரடியாக அறிந்து,, சரிபார்த்து,தெரியப்படுத்தியுள்ளேன். எந்த நான்கு? 1. இருளான செயல், அதனால் இருளான விளைவு. 2. பிரகாசமான செயல், அதனால் பிரகாசமான விளைவு. 3. இருளான மற்றும் பிரகாசமான செயல், அதனால் இருளான மற்றும் பிரகாசமான விளைவுகள். 4. இருளற்ற பிரகாசமுமற்ற செயல்‌, அதனால் இருளும் இல்லாத பிரகாசமும் இல்லாத விளைவு. இது கன்மத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லும். 'இருளான செயல் அதனால் இருளான விளைவு', என்றால் என்ன? ஒருவர் தங்கள்  மனோவாக்குக்காயங்களில் (மனம், சொல், உடல்)  புண்படுத்தும் செய்கையில் ஈடுபட்டால், அதன் காரணமாக அவர் ஒரு புண்படுத்தும் உலகில் தோன்றுகிறார். அவர் அங்கு புண்படுத்தும் ஊறுகளால் [1] தொடப்படுகிறார். புண்படுத்தும் ஊறுகளால் தொடப்பட்ட அவர், நரகத்தில் உள்ள ஜீவன்களைப்போலவே, முழுமையாக துன்பமான நுகற்சிகளையே அனுபவிக்கிறார்.  இதுவே 'இருளான செயல் அதனால் உண்டாகும் இருளான விளைவு', என்பது. 'பிரகாசம

போஜங்க சுத்த பரித்தம்

Image
  போஜங்க சுத்த பரித்தம் சிவானி குப்தா அகர்வால் அவர்கள் குரலில் (பரித்தம் - துன்ப நிவாரணத்தின் பொருட்டுச் ஓதும் சுத்தங்கள்) Bojjhango sati-sankhāto Dhammānam vicayo tathā Viriyam-pīti-passaddhi Bojjhangā ca tathāpare போதி அங்கங்கள் ஏழு. அவை கடைப்பிடி, தம்மங்களை ஆராய்தல், வீரியம் (முயற்சி), அகமலர்ச்சி, அமைதி ... மேலும் இரண்டு. Samādhupekkha-bojjhangā Sattete sabba-dassinā Muninā sammadakkhātā Bhāvitā bahulīkatā சமாதியும், மன சமநிலையும். இந்த ஏழும் எல்லாம் அறிந்த முனிவரால் நன்கு விளக்கப்பட்டு இருக்கின்றன. அவை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன, மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யப்பட்டுள்ளன. Samvattanti abhiññāya Nibbānāya ca bodhiyā Etena sacca-vajjena Sotthi te hotu sabbadā. இதனால் மெய்ஞானம் எழுகிறது, துக்கம் முடிவுக்கு வருகிறது, மார்க்கம் அறியப்படுகிறது. இந்த அருள் வாக்கினால் எப்போதும் மணமகிழ்வோடு இருப்பீர்களாக! Ekasmim samaye nātho Moggallānañca Kassapam Gilāne dukkhite disvā Bojjhange satta desayi ஒரு சமயம் மொக்களானரும் கஸ்ஸப்பரும் உடல் நலம் குன்றி துன்புற்றிருப்பதைக் கண்டு பகவர் அவர்களுக்கு