Posts

Showing posts from November, 2024

புகழ்தலும் இகழ்தலும்

  புகழ்தலும் இகழ்தலும் Praise and blame  ஒரு முறை பகவர் பெரும் சங்கத் தாரோடு  இராஜகிருகத்திலிருந்து  நாளந்தைக்கு பயணித்துக் கொண்டிருந்தார். அதே சமயம் நாடோடி சுப்பியாவும் அவரது மாணவரான இளைஞர் பிரம்மதத்தரும் அவர்களுக்கு பின்னால் அதே வழியில் நடந்துவந்துக் கொண்டிருந்தனர். சுப்பியா பல வழிகளில் புத்த, தம்ம, சங்கம் ஆகிய மும்மணிகளையும் அவதூராக பேசி கொண்டு வந்தார். ஆனால் அவரது மாணவரான பிரம்மதத்தரோ புத்த, தம்ம சங்கத்தினரை புகழ்ந்து கொண்டு வந்தார். இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டு புத்தரையும் சங்கத்தினரையும் தொடர்ந்தனர். பின்னர் பகவரும் சங்கத்தாரும் அரசனின் சத்திரமான அம்பலதிக்கை தோட்டத்தில் இரவைக் கழிக்க தங்கினர். சுப்பியாவும் அவரது மாணவரும் அதே இடத்தில் இரவைக் கழித்தனர். முன் போலவே அந்த இடத்திலும் சுப்பியா மும்மணிகளை அவதூறாக பேசிக் கொண்டிருந்தார். அவரது மாணவர் பிரம்மதத்தர் மும்மணிகளை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். மறுநாள்  பொழுது விடிந்ததும் சில பிக்குகள் அங்கிருந்த மண்டபத்தில்  கூடினர். அங்கு உட்காந்திருக்கையில் அவர்களிடையே இந்த பேச்சு துவங்கியது. " அருமை!  அதிச...