புண்ணியம் செய்யும் வழிகள்
(சென்ற வாரம் பாந்தே போதனை) புண்ணியம் செய்யத் தயங்க வேண்டாம், ஏனென்றால், புண்ணியமும் மகிழ்ச்சியும் ஒன்று என்று புத்தர் கூறினார். AN8.36 puñña kiriya vatthu Sutta புண்ணியம் செய்ய வழிகள் மூன்று வழிகளில் புண்ணியம் சேர்க்கலாம்: 1. தானம் 2. சீலம் (ஒழுக்கம்) 3. தியானம் (பாவனை - மனதைப் பக்குவப்படுத்தல்) (தானத்தை விட சீலம் உயர்ந்தது. முதல் இரண்டை விட தியானம் உயர்ந்தது. ஒரு பூவை முகரும் நேரத்திற்கு மட்டுமே உள்ளத்தில் அன்பை நிரப்பி கொண்டாள் (மெத்தா தியானம் மூலம்) அது புத்தர் தலைமையில் உள்ள சங்கத்தினருக்கு ஒரு விகாரை தானம் செய்வதால் கிடைக்கும் புண்ணியத்தை விட அதிக புண்ணியம் சேர்க்கும் என்று புத்தர் கூறினார். ஆகவே தானம் நல்லது, ஆனால் தியானம் தானத்தை விட மேலானது.) 1. ஓரளவுக்கு தானம், ஓரளவுக்கு சீலம் கடைப்பிடித்து ஆனால் தியானம் செய்யாத ஒருவர் மரணத்தின் பின் மனிதர் மத்தியில் பிறக்கின்றார். ஆனால் அனுகூலமற்ற சூழ்நிலையில் பிறக்கின்றார். (உதாரணமாக, ஒரு வறியோனாக பிறக்கலாம்.) 2. நடுத்தர அளவு தானம் நடுத்தர அளவு சீலம் கடைப்பிடித்து ஆனால் தியானம் செய்யாத ஒருவர் மரணத்தின் பின் மனிதர் மத்...