புண்ணியம் செய்யும் வழிகள்
(சென்ற வாரம் பாந்தே போதனை)
புண்ணியம் செய்யத் தயங்க வேண்டாம், ஏனென்றால், புண்ணியமும் மகிழ்ச்சியும் ஒன்று என்று புத்தர் கூறினார்.
AN8.36 puñña kiriya vatthu Sutta
புண்ணியம் செய்ய வழிகள்
மூன்று வழிகளில் புண்ணியம் சேர்க்கலாம்:
1. தானம்
2. சீலம் (ஒழுக்கம்)
3. தியானம் (பாவனை - மனதைப் பக்குவப்படுத்தல்)
(தானத்தை விட சீலம் உயர்ந்தது. முதல் இரண்டை விட தியானம் உயர்ந்தது.
ஒரு பூவை முகரும் நேரத்திற்கு மட்டுமே உள்ளத்தில் அன்பை நிரப்பி கொண்டாள் (மெத்தா தியானம் மூலம்) அது புத்தர் தலைமையில் உள்ள சங்கத்தினருக்கு ஒரு விகாரை தானம் செய்வதால் கிடைக்கும் புண்ணியத்தை விட அதிக புண்ணியம் சேர்க்கும் என்று புத்தர் கூறினார். ஆகவே தானம் நல்லது, ஆனால் தியானம் தானத்தை விட மேலானது.)
1. ஓரளவுக்கு தானம், ஓரளவுக்கு சீலம் கடைப்பிடித்து ஆனால் தியானம் செய்யாத ஒருவர் மரணத்தின் பின் மனிதர் மத்தியில் பிறக்கின்றார். ஆனால் அனுகூலமற்ற சூழ்நிலையில் பிறக்கின்றார். (உதாரணமாக, ஒரு வறியோனாக பிறக்கலாம்.)
2. நடுத்தர அளவு தானம் நடுத்தர அளவு சீலம் கடைப்பிடித்து ஆனால் தியானம் செய்யாத ஒருவர் மரணத்தின் பின் மனிதர் மத்தியில் பிறக்கின்றார். ஆனால் அனுகூலமுள்ள சூழ்நிலையில் பிறக்கின்றார். (உதாரணமாக, ஒரு பணக்கார குடும்பத்தில் பிறக்கலாம்).
(மேலே சொன்னவற்றிலிருந்து ஒரு அளவு தானமும் சீலமும் கூடச் செய்யாதவர் கீழான நான்கு உலகங்களில் பிறப்பார் என்று ஊகிக்கலாம்.)
3. பெருமளவு தானமும், பெருமளவு சீலம் கடைப்பிடித்து ஆனால் தியானம் செய்யாத ஒருவர் மரணத்தின் பின்
நான்கு மகாராஜர்கள் ஆளும் தேவர்கள் மத்தியில் பிறக்கிறார் (catumaharajika deva). அந்த நான்கு மகாராஜாக்கள் அங்கு உள்ள மற்ற தேவர்களை விட தானம் ஒழக்கம் மூலம் அதிக புண்ணியம் செய்தபடியால் அவர்களை விட பத்து வழிகளில் மேற்பட்டவர்களாக உள்ளார். அவை:
தெய்வீக ஆயுட்காலம், தெய்வீக அழகு, தெய்வீக மகிழ்ச்சி, தெய்வீக கீர்த்தி தெய்வீக அதிகாரம், தெய்வீக உருவம், தெய்வீக ஓசை, தெய்வீக மணம், தெய்வீக சுவை, தெய்வீக உறல் (பரிசம்).
4. இன்னொருவர் மேலும் சிறப்பாக தானம் செய்பவர், சீலம் கடைப்பிடிப்பவர், ஆனால் தியானம் செய்யாதவர். அவர் மரணத்தின் பின் தாவதிம்ச தேவர்கள் மத்தியில் பிறக்கிறார் (Tāvatimsa deva). அங்கு தேவர்களை ஆட்சி செய்பவர் சக்கர் (Sakka) அங்குள்ள தேவர்களை விட 10 வழிகளில் சிறந்தவர்.......
5. இன்னொருவர் மேலும் சிறப்பாக தானம் செய்பவர், சீலம் கடைப்பிடிப்பவர், ஆனால் தியானம் செய்யாதவர். அவர் மரணத்தின் பின் யாம தேவர்கள் மத்தியில் பிறக்கிறார் (Yāma deva). அங்கு தேவர்களை ஆட்சி செய்பவர் சுயாமர் (Suyāma) அங்குள்ள தேவர்களை விட 10 வழிகளில் சிறந்தவர்.......
6. இன்னொருவர் மேலும் சிறப்பாக தானம் செய்பவர், சீலம் கடைப்பிடிப்பவர், ஆனால் தியானம் செய்யாதவர். அவர் மரணத்தின் பின் துசித தேவர்கள் மத்தியில் பிறக்கிறார் (Tusita deva). அங்கு தேவர்களை ஆட்சி செய்பவர் சந்துசித (Santusita) அங்குள்ள தேவர்களை விட 10 வழிகளில் சிறந்தவர்.......
7. இன்னொருவர் மேலும் சிறப்பாக தானம் செய்பவர், சீலம் கடைப்பிடிப்பவர், ஆனால் தியானம் செய்யாதவர். அவர் மரணத்தின் பின் படைப்பில் பெரு மகிழ்ச்சி அடையும் தேவர்கள் மத்தியில் பிறக்கிறார் (nimmanarati deva). அங்கு இளைஞர் சுனிமித்தர் (Sunimmita) என்ற தேவர் அங்குள்ள மற்ற தேவர்களை விட 10 வழிகளில் சிறந்தவர்.......
8. இன்னொருவர் மேலும் சிறப்பாக தானம் செய்பவர், சீலம் கடைப்பிடிப்பவர், ஆனால் தியானம் செய்யாதவர். அவர் மரணத்தின் பின் மற்றவர் செய்யும் படைப்புகளை அதிகாரம் செய்யக்கூடிய தேவர்கள் மத்தியில் பிறக்கிறார் (paranimmita-vasavatti deva). அங்கு இளைஞர் வாசவத்தி (Vasavattī) என்ற தேவர் அங்குள்ள மற்ற தேவர்களை விட 10 வழிகளில் சிறந்தவர்.......
"பிக்குகளே, இவையே புண்ணியச் செயல்களுக்கான மூன்று வழிகள்."
Comments
Post a Comment