ஒழுக்கம்
புத்தர் ஒழுக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார் . அவர் பாதையைச் சுருக்கமாக சொல்வதென்றால் அது : ஒழுக்கம் ( சீலம் ), மன ஒருமுகபடுத்துதல் ( சமாதி ), விவேகம் ( பஞ்ஞா ) என்பதே . ஒழுக்கம் இல்லாமல் பாதையில் முன்னேறுவது என்பது இயலாத காரியம் . இது சம்பந்தமாகக் கிருபானந்த வாரியார் (1906-1993) அவர்கள் சொற்பொழிவு ஒன்றில் பல நல்ல அறிவுறைகளைத்தருகிறார் . " சொல்லும் செயலும் ஒத்து இருக்க வேண்டும் ", "பக்தியைக் காட்டிலும் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அதிகம் இந்த நாட்டிலே", " அறசியல் தலைவர் என்றால் நேர்மை இருக்க வேண்டும் ." அவர் பேச்சில் பெண்கள் அடக்கமாக இருக்கவேண்டும் என்கிறார் . ஆனால் பௌத்த நோ...