ஒழுக்கம்

புத்தர் ஒழுக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார்.  அவர் பாதையைச் சுருக்கமாகசொல்வதென்றால் அதுஒழுக்கம் (சீலம்), மன ஒருமுகபடுத்துதல் (சமாதி), விவேகம் (பஞ்ஞாஎன்பதேஒழுக்கம் இல்லாமல் பாதையில் முன்னேறுவது  என்பது இயலாத காரியம்.
இது சம்பந்தமாகக் கிருபானந்த வாரியார் (1906-1993) அவர்கள் சொற்பொழிவு ஒன்றில்  பல நல்ல அறிவுறைகளைத்தருகிறார்.
 "சொல்லும் செயலும் ஒத்து இருக்க வேண்டும்",  
"பக்தியைக் காட்டிலும் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அதிகம் இந்த நாட்டிலே", 
 "அறசியல் தலைவர் என்றால் நேர்மை இருக்க வேண்டும்."   
அவர் பேச்சில் பெண்கள் அடக்கமாக இருக்கவேண்டும் என்கிறார்.  ஆனால் பௌத்த நோக்கில் ஆண்களும் அடக்கமாக (humility) இருக்க வேண்டும் என்று சொன்னால் அது பொருந்தும்.  அடக்கமாக இருக்க வேண்டுமென்றால் அடிமையாக  (slavish) இருக்க வேண்டும் என்பதில்லை.  
மேலும் மந்திரிக்கு இருக்க வேண்டிய இலக்கணம் பற்றி கம்பரின் அறிவுரையை அழகாக விளக்குகின்றார் வாரியார்

உரையில் வரும் குறள்:  
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.     # குறள் 131

விளக்கம்:
உயிர் சிறந்ததுஉயிரைக்காட்டிலும் ஒழுக்கம் சிறந்ததுஏனெனில் ஒழுக்கமே அவ்வுயிரோடு கூடியவாழ்க்கைக்கு விழுப்பத்தைத் தருகிறது (விழுப்பம்நிலைத்த நன்மதிப்புசிறப்பு). எனவே ஒழுக்கத்தைஉயிரைக்காட்டிலும் கருத்தாகப் பாதுகாக்க வேண்டும். (நன்றி  International Tamil Language Foundationவெளியிட்ட திருக்குறள்)

உரையில் வரும்  கம்பரின் வாக்கு (முழுமையாக):

அமைச்சருக்கு அழகு:

உற்றது கொண்டுமேல்வந்து உறுபொருள் உணரும் கோளார்,
மற்றது வினையின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும் பெற்றியர்;
பிறப்பின் மேன்மைப் பெரியவர் ; அரிய நூலும் கற்றவர் ;
மானம் நோக்கின் கவரிமா அனைய நீரார் “ 

விளக்கம் நன்றி  http://www.tamilvu.org/:
(நடந்ததைக் கொண்டு - எதிர்காலத்து வந்து நேரத் தக்கவற்றை;  கணித்து அறியும் அறிவு ஆற்றளுடையவர்கள்;
அந்த வேண்டாத கேடு ஊழ்வினையினால் ஒருகால் வந்தாலும்; அதனை மாற்றவல்ல முயற்சித்திறம் உடையவர்கள்;
நற்குடிப் பிறப்பினால் வந்த சிறப்பினையுடைய பெரியவர்கள்; கற்றற்கு அரிய நுண்ணிய நூல்களையும் கற்றுத் தேர்ந்தவர்கள்; 
மானத்தை நோக்குமிடத்தில் ;  கவரிமானைப் போன்ற தன்மையுடையவர்கள்.

கவரிமான், இமயமலைபோலும் குளிர் மிகுந்த மலைப்பகுதிகளில் வாழும் ஒருவகை மான். அந்த மானின் உடலிலிருந்து மயிர் உதிர்ந்தால், அது குளிர் தாங்காது மாண்டுபோகும். அதுபோலத் தம் புகழுக்கு இழுக்கு நேரும்காலம் வந்துழி உயிர் வாழார் ;  அழிவர் என்பதாம். ) 

Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

சுந்தருக்குத் தந்த போதனை