கோட்டை உவமானம்
கோட்டை உவமானம் Nagaropamasutta நகரோபமசுத்தம் The Simile of the Citadel Aṅguttara Nikāya 7.67 (சுருக்கம்) எல்லைப் புறத்தில் உள்ள ஒரு கோட்டை எப்போது வேண்டுமானாலும் எதிரிகளால் தாக்கப்படலாம். எனவே, தயார் நிலையில் இருப்பது நல்லது. அதன்படி கோட்டையின் பாதுகாப்பு அமைந்திருக்க வேண்டும். அதேபோல நாமும் காமம், வெகுளி, அறியாமை என்ற விஷங்களால், விழித்திருக்கும் எந்நேரமும் தாக்கப்படுகிறோம். எனவே, நாமும் தயார் நிலையில் இருப்பது நல்லது. கோட்டையின் பாதுகாப்புக்குத் தேவையானவற்றை உவமானங்களாகக் கொண்டு, புத்தர் மனதின் பாதுகாப்புக்கான ஏழு அத்தியாவசியங்களையும், நான்கு ஆகாரங்களையும் பட்டியலிட்டு தருகிறார். சூல புண்ணமா சுத்தத்தில் (சிறிய பௌர்ணமி தின போதனை MN110) வரும் நல்லோரின் ஏழு பண்புகளும், இந்த சுத்தத்தில் குறிப்பிடப்படும் ஏழு அத்தியாவசியமானவையும் ஒன்று. அவை: 1. நம்பிக்கை saddhā 2. வெட்கம் (தவறு செய்வதற்கு) hirī 3. அச்சம் (தவறின் விளைவுகளுக்கு) ottāppa 4. போதனைகளை அறிந்திருப்பது bahussutā 5. சுறுசுறுப்புடன் செயல்படுவது vīriyā 6. கடைப்பிடி (கூர்மையான கவனம்) sati ...