சவித்தருடன்
சவித்தருடன் 3.21 அங்குத்தற நிகாயம் பிற மதத் தலைவர்கள் ஞானம் அடைந்தவர்களா, இல்லையா என்று சுபத்திரர் கேட்ட கேள்விக்கு புத்தர், '... எந்த ஒரு அறநெறியில் ..மேன்மையான அட்டாங்க மார்க்கம் அறியப்படுகிறதோ அங்கு முதல்... இரண்டாம்… மூன்றாம்… நான்காம் ஞான நிலையை அடைந்தவர்களைக் காண முடியும்', என்றார். (மஹா பரிநிப்பாண சூத்தம் DN16) எனவே அட்டாங்க மார்க்கம் மட்டுமே துக்கத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லும். ஆனால் அந்த பாதையில் எவ்வாறான பயணம் மேற்கொள்கிறோம் என்பதில் வேறுபாடுகள் இருக்கலாம். உதாரணமாக மூன்று பேர் நெடுஞ்சாலையில் செல்கின்றனர். ஒருவர் மாருதி வண்டியிலும், மற்றொருவர் மஹிந்திரா வண்டியிலும், மூன்றாம் நபர் டாடா வண்டியிள் செல்வது போலத் தான். அவர்கள் மூவரும் வெவ்வேறு 'மாடல்' வண்டியில் சென்றாலும் அவை மூன்றுமே போக வேண்டிய இடத்துக்கு எடுத்துச் செல்லும். அதுபோலவே அட்டாங்க மார்க்கத்தை மூன்று வழிகளில் மேற்கொள்ளலாம் என்பதை இந்த சுத்தம் எடுத்துக்காட்டுகிறது. சவித்தருடன் 3.21 அங்குத்தற நிகாயம் நான் இவ்வாறு கேள்வியுற்றேன். ஒரு முறை புத்தர் சாவத்தி நகருக்கருகே, ஜேதா வனத்தில், அனந்தபி...