அடிக்கடி நினைவில் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்
சமீபத்தில் ஒர் பௌத்த பெரியவர் தந்த அறிவுரை: 'புத்தருக்கு மரியாதை செலுத்த வேண்டுமானால் மெய்ம்மையோடு (எதார்த்தத்தோடு) ஒத்து வாழ்' (Best way to honour the Buddha is to live in line with reality). புத்தர் நினைவில் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்களைப் பற்றி கூறியது: 1. வயதாவது மனித இயல்பு. நான் வயதாவதைக் கடந்து போகவில்லை. I am of the nature to age, I have not gone beyond aging. இளமையின் மீதான மோகத்தை குறைக்க. (மோகத்தின் காரணமாக உடலாலும் பேச்சாலும் அறிவாலும் குற்றம் செய்யும் வாய்ப்புகள் அதிகம்) 2. நோய்வாய்ப்படுவது மனித இயல்பு. நான் நோய்வாய்ப்படுவதைக் கடந்து போகவில்லை. I am of the nature to sicken, I have not gone beyond sickness. உடல் ஆரோக்கியத்தின் மீதான மோகத்தை குறைக்க. 3. மரணமடைவது மனித இயல்பு. நான் மரணமடைவதைக் கடந்து போக வில்லை. வாழ்க்கையின் மீதான மோகத்தை குறைக்க. 4. எனக்குப் பிடித்த சுகம் தரும் பொருட்களும், அன்பும் பாசமும் கொண்ட உறவுகளும் ஒரு நாள் அப்படி அல்லாமல் மாறிப் போய்விடும். என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிடுவார்கள். All that is mine, beloved and pleasing, will become otherwi...