மும் மணி சரணம்
மும் மணி சரணம் (திரி சரணம்) புத்தங் சரணங் கச்சாமி! தம்மங் சரணங் கச்சாமி! சங்கங் சரணங் கச்சாமி! துதியம்பி (இரண்டாம் முறையாக)... ததியம்பி (மூன்றாம் முறையாக)... மும்மணிகளிடம் சரியான வழியில் சரண் செல்லும்போது நமக்கு அவற்றிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். . ஃஃஃ உத்தமரான, தூய்மையான, சுய முயற்சியினால் முழுமையாக விழிப்புற்ற புத்தருக்கு உணவு தானம் செய்வதை விட, புத்தர் தலைமையில் உள்ள சங்கத்தினருக்கு உணவு தானம் செய்வதை விட, அவர்களுக்கு இருப்பிடம் கட்டிக் கொடுப்பதை விட, மேன்மையானது - புத்தர் தர்மம் சங்கத்திடம் அடைக்கலம் செல்வது. [ஆதாரம்: AN9.20 வேலாமா பற்றி] ஃஃஃ புத்தரிடம் சரண் செல்லும்போது அவருடன் ஒரு இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். புத்தர் போதிசத்துவராக இருந்தபோது நம்மைப் போல் மனதில் துன்பம் அனுபவித்தார். எனவே அவருக்குள் நாம் இருக்கின்றோம். அதே சமயம் நமக்குள் அவர் இருக்கின்றார். ஏனென்றால் சரியாகப் பயிற்சி செய்தால் நாமும் அவரைப் போல் ஞானம் பெறலாம். அதேபோல் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளும் வழி (அவை முழு நிறைவடையவில்லை என்றாலும்) ஓரளவுக்கு நமக்கு தெரியும். எனவே நமக்குள் த...