Posts

Showing posts from June, 2023

மஹாநாமருடன்

  மஹாநாமருடன் (சங்யுத்தத நிகாயம் 55.21) With Mahānāma (1st) இவ்வாறு கேள்வியுற்றேன். ஒரு சமயம் புத்தர் சாக்கியரின் நாட்டில், கபிலவத்து அருகில், ஆலமர விகாரையில் தங்கியிருந்தார். சாக்கியர் மஹாநாமர் புத்தரிடம் சென்று, வணங்கி, ஒரு புறம் அமர்ந்து, அவரிடம் சொன்னார்: "ஐயா, இந்த கபிலவத்து செல்வ செழிப்புள்ள ஊர். முட்டுச்சந்து மூலைமுடுக்கெல்லாம் மக்கள் நிறைந்துள்ளனர். பிற்பகல் புத்தருக்கு அல்லது ஒரு மதிக்கத்தக்க துறவிக்கு அஞ்சலி செலுத்தியபின் நான் கபிலவத்து நுழையும் போது ஒரு தனி யானையை அல்லது ஒரு குதிரையை அல்லது ஒரு தேரை, ஒரு மாட்டு வண்டியை, ஒரு மனிதரை சந்திக்க நேர்கிறது. அப்போது புத்த, நம்ம சங்கம் பற்றிய மன கவனம் இழந்து விடுகிறேன். 'நான் இந்த சமயத்தில் இறந்து விட்டால் அடுத்த பிறப்பில் எங்கே பிறப்பேனோ', என்ற அச்சம் என்னுள் தோன்றுகிறது." "பயப்படாதே மஹாநாமா, பயப்படாதே! உனது மரணம் மோசமானதாக இருக்காது. உனது மறைவு மோசமானதாக இருக்காது. நீண்ட நாட்களாக நம்பிக்கை, ஒழுக்கம், போதனைகள் பற்றிய அறிவு, தயாள குணம், விவேகம் (saddhā, sīla, suta, cāga, paññā) ஆகிய பண்புகளில் மனம் தோய்ந்...

ஒரு பாந்தே தந்த அறிவுரை

  ஒரு பாந்தே தந்த அறிவுரை. நாம் பல பிரச்சனைகளை நினைத்து கவலை படுகிறோம்: குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை, தொழில் பிரச்சனை, உடல் பிரச்சனை, என்று பலவகை பிரச்சனைகளை, அவற்றைப் பற்றிய சிந்தனைகள்.  ஆனால் இவையெல்லாம் சிறிய விஷயங்கள். நாம் நினைக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அது, நமது அடுத்த பிறப்பு எப்படிப்பட்டதாக இருக்கும், என்பது தான். நம்மில் பெரும்பாலானோர் மறுபிறப்பு எடுக்க வேண்டி இருக்கும் என்பது தான் உண்மை.  மனதில் ஆசை தோன்றுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் . எதற்கோ ஆசைப்படுகிறோம். ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. அந்த ஏக்கம் கொண்ட மனநிலையில் மரணம் தழுவுகிறோம். சொல்லிவிட்டா வருகிறது மரணம்? அப்படி குறைபாடுள்ள மனநிலையில் மரணம் தழுவினால், அடுத்த பிறப்பு நரகத்தில் அல்லது மிருக லோகத்தில் இருக்கலாம் என்று புத்தர் சொல்கிறார் (சங்யுத்த நிகாயம் 35.235). ஆனால் நம் மனதில் பல நேரங்களிலும் ஏக்கம், கோபம், குழப்பம் கொண்ட எண்ணங்கள் தோன்றுகின்றனவே? அச்சமயத்தில் இறந்து விட்டால் கீழ்கதிகளிலிருந்து எப்படி தப்பிப்பது? இந்த கேள்வி மஹாநாமருக்கும் தோன்றியது. மஹாநாமர், புத்தரின் தந்த...

மகிழ்ச்சியோடு வாழ ..

 மகிழ்ச்சியாக வாழ ஒன்றைச் செய்ய வேண்டும். அது என்ன? புண்ணியம் சேர்த்தல். மூன்று வழிகளில் புண்ணியம் சேர்க்கலாம். 1. தானம் செய்தல் சாப்பிட்ட பின் கழுவிய பாத்திரத்தில் உள்ள தண்ணீரை, 'இந்த தண்ணிர் விலங்குகளின் தாகத்தைத் தீர்க்கட்டும்', என்று நினைத்தவாரு எரிந்தால், அதுகூட புண்ணியம சேர்க்கும் ஒரு தானச் செயலே. 2. ஒழுக்கத்தோடு வாழ்ந்தல். தானம் செய்வதை விட மேன்மையானது ஐந்து சீலங்களை கடைப்பிடித்தல். 3. நற் கடைப்பிடி அதாவது மன கவனத்தோடு இருத்தல். மேற்குறிப்பிட்ட இரண்டு வழிகளை விட இது மேன்மையானது. (கோட்டை வாயிலிலில் உள்ள காவலாளி தெரிந்தவரை மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றான். தெரியாதவரை அனுமதிப்பதில்லை. அதேபோல் மன கவனத்துடன் இருப்பது என்பது தீய எண்ணங்களை மனதில் அனுமதிக்காமல் இருப்பது.)