ஒரு பாந்தே தந்த அறிவுரை

 

ஒரு பாந்தே தந்த அறிவுரை.


நாம் பல பிரச்சனைகளை நினைத்து கவலை படுகிறோம்:

குடும்ப பிரச்சனை,

கடன் பிரச்சனை,

தொழில் பிரச்சனை,

உடல் பிரச்சனை,

என்று பலவகை பிரச்சனைகளை, அவற்றைப் பற்றிய சிந்தனைகள். 


ஆனால் இவையெல்லாம் சிறிய விஷயங்கள்.


நாம் நினைக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அது,

நமது அடுத்த பிறப்பு எப்படிப்பட்டதாக இருக்கும், என்பது தான்.


நம்மில் பெரும்பாலானோர் மறுபிறப்பு எடுக்க வேண்டி இருக்கும் என்பது தான் உண்மை.


 மனதில் ஆசை தோன்றுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் . எதற்கோ ஆசைப்படுகிறோம். ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. அந்த ஏக்கம் கொண்ட மனநிலையில் மரணம் தழுவுகிறோம். சொல்லிவிட்டா வருகிறது மரணம்? அப்படி குறைபாடுள்ள மனநிலையில் மரணம் தழுவினால், அடுத்த பிறப்பு நரகத்தில் அல்லது மிருக லோகத்தில் இருக்கலாம் என்று புத்தர் சொல்கிறார் (சங்யுத்த நிகாயம் 35.235).


ஆனால் நம் மனதில் பல நேரங்களிலும் ஏக்கம், கோபம், குழப்பம் கொண்ட எண்ணங்கள் தோன்றுகின்றனவே? அச்சமயத்தில் இறந்து விட்டால் கீழ்கதிகளிலிருந்து எப்படி தப்பிப்பது?


இந்த கேள்வி மஹாநாமருக்கும் தோன்றியது. மஹாநாமர், புத்தரின் தந்தையான சுத்தோதனருக்கு பின்னர் சாக்கிய குலத் தலைவராக இருந்தவர். புத்தருக்கும் அவருக்கும் நடந்த உரையாடலில் இதற்கான பதிலை தெரிந்து கொள்ளலாம்.


(தொடரும்)


மேற்சொன்ன கருத்துக்கு ஆதாரம்:

https://suttacentral dot net/sn35.235


https://suttacentral.net/sn55.21/

Comments

Popular posts from this blog

எண்ணங்களை சாந்தப்படுத்தல்

நன்றி மறவாமை

தேவதா சுத்தம் - ஒரு தேவன்