பாந்தே அறிவுரை
ஐந்து ஒழுக்கங்களை கடைப்பிடிப்பது முக்கியம். அதனால் நமக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. நம்மை சுற்றி இருப்பவருக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. நமக்கு நாமே மற்றும் நாம் பிறருக்கு தரும் அன்பளிப்பு அது. நமக்கு புண்ணியம் சேரும். இம்மையில் மகிழ்ச்சி தரும் மறுமையில் சொர்க்கத்துக்கு எடுத்துச் செல்லும். [1] அப்படி கடைபிடிக்க முடியவில்லையென்றால் பரவாயில்லை. 'அட, இந்த ஒழுக்கத்தை காப்பாற்ற முடியவில்லையே!', என்று நினைத்து வருத்தப்படுவதில் பயனில்லை. ஆனால் முக்கியமாக, விரைவில் ஒன்றைச் செய்ய வேண்டும். மீண்டும் ஐந்து ஒழுக்கங்களை கடைப்பிடிப்பதற்கு நேர்ந்துக் கொள்ள வேண்டும். மீண்டும் நேர்ந்துக் கொள்ளும் வரை அது ஒரு ஆபத்தான காலம். பாதுகாப்பு இல்லாத காலம். ஒரு புத்தர் உருவத்தின் முன் அல்லது நாமே மனதில் ஐந்து ஒழுக்க விதிகளை சொல்லிக் கொள்ள வேண்டும். எந்த உயிரையும் கொல்லுதலைத் தவிர்கும் ஒழுக்க விதியை மேற்கொள்கிறேன். பிறர் பொருளை களவு செய்வதைத் தவிர்கும் ஒழுக்க விதியை மேற்கொள்கிறேன். தவறான பாலியல் உறவுகளைத் தவிர்கும் ஒழுக்க விதியை மேற்கொள்கிறேன். [2] தவறான பேச்சு உரைப்பதைத் த...