தேவதா சுத்தம் - ஒரு தேவன்

 

பொதுவாக கீழ் உலகத்தில் பிறந்தவர்கள் தான் வருத்தப்படுவார்கள் என்று நாம் நினைக்கலாம். அதாவது நரக, மிருக, பூத உலகங்களில் பிறந்தவர்கள். மனிதர்களாக வாழ்ந்த போது, நற் பண்புடனும் விவேகத்துடனும் நடந்துக் கொண்டு புண்ணியம் சேர்த்திருந்தால் தமக்கு இந்த கொடுமையான நிலை வந்திருக்காது என்று நினைத்து வேதனைப்படுவார்கள். 


ஆனால் சொர்க்க லோகத்தில் பிறந்தவர்களும் வருத்தப்படலாம் என்பதை இந்தச் சுத்தம் விளக்குகிறது முக்கியமாக இந்த சுத்தம் விவேகத்துடன் வாழ்வதன் முக்கியத்துவத்தையும், அறத்தைப் பயில கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது.


படிப்படியாக மேல் செல்லும் தேவலோகங்கள்:


மண்ணுலக தேவர்கள்

சாதும்மஹாராஜிக தேவர்கள்

தாவதிங்ச தேவர்கள்

யாம தேவர்கள்

துசித தேவர்கள்

நிம்மாணரதீ தேவர்கள்

பரனிம்மிதவசவத்தி தேவர்கள்

...

ஆபஸ்ஸர தேவர்கள்

பரித்தசுப தேவர்கள்

...

சுதஸ்ஸீ தேவர்கள்

பிரம்ம லோக தேவர்கள்


Devatāsutta, A Deity AN 9.19

தேவதா சுத்தம் - ஒரு தேவன்

அங்குத்தர நிகாயம் 9.19

"துறவிகளே இன்று இரவு பல பிரகாசமான தேவர்கள் ஜெதவனத்தை ஒளிமயமாக்கியவாரு என்னிடம் வந்து, வணங்கி, ஒருபுரம் நின்று சொன்னது: 'ஐயா நாங்கள் முன்பிறவியில் மனிதர்களாக இருந்தபோது துறவிகள் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். நாங்கள் மரியாதையுடன் எழுந்து நிற்போம் ஆனால் வணங்கவில்லை. எங்கள் கடமையை முழுமையாக செய்யாத காரணத்தால் மனவருத்தமமும் மனக்குறையுடனும் நாங்கள் கீழான (சொர்க்கலோகத்தில்) மறுபிறப்பு எடுத்துள்ளோம்.'

பின்னர் மற்ற தேவர்கள் என்னிடம் வந்து இவ்வாறு சொன்னார்கள்: 'ஐயா நாங்கள் முன்பிறவியில் மனிதர்களாக இருந்தபோது துறவிகள் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். நாங்கள் மரியாதையுடன் எழுந்து நிற்போம், அவர்களை வணங்கினோம். ஆனால் உட்கார இடம் தரவில்லை. ஆகவே எங்கள் கடமையை முழுமையாக செய்யாத காரணத்தால் மனவருத்தமமும் மனக்குறையுடனும் நாங்கள் கீழான சொர்க்கலோகத்தில் மறுபிறப்பு எடுத்துள்ளோம்.'

பின்னர் மற்ற தேவர்கள் என்னிடம் வந்து இவ்வாறு சொன்னார்கள்: 'ஐயா நாங்கள் முன்பிறவியில் மனிதர்களாக இருந்தபோது துறவிகள் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். நாங்கள் மரியாதையுடன் எழுந்து நிற்போம், அவர்களை வணங்கினோம், உட்கார இடம் தந்தோம். ஆனால் எங்களால் முடிந்ததை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை (உதாரணமாக உணவு தானம் தரவில்லை)..'

'.. போதனைகளை கேட்பதற்கு அருகில் அமரவில்லை..'

'.. அருகில் அமர்ந்தும், போதனைகளை உன்னிப்பாக கேட்கவில்லை....'

'... உன்னிப்பாக கேட்கும், போதனைகளை மனப்பாடம் செய்யவில்லை...'

'... மனப்பாடம் செய்தும், போதனைகளின் பொருளை ஆராய வில்லை...'

'... போதனைகளை ஆராய்ந்து புரிந்து கொண்டாலும் அதன்படி நடந்து கொள்ளவில்லை. ஆகவே எங்கள் கடமையை முழுமையாக செய்யாத காரணத்தால் மனவருத்தமமும் மனக்குறையுடனும் நாங்கள் கீழான சொர்க்கலோகத்தில் மறுபிறப்பு எடுத்துள்ளோம்.'


பின்னர் மற்ற பல தேவர்கள் என்னிடம் வந்து இவ்வாறு சொன்னார்கள்: 'ஐயா நாங்கள் முன்பிறவியில் மனிதர்களாக இருந்தபோது துறவிகள் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். நாங்கள் மரியாதையுடன் எழுந்து நிற்போம், அவர்களை வணங்கினோம்,

உட்கார இடம் ஒதுக்கினோம், 

எங்களால் முடிந்ததை அவர்களிடம் பகிர்ந்து கொண்டோம், 

போதனைகளை கேட்பதற்கு அருகில் அமர்ந்தோம்,

அருகில் அமர்ந்து போதனைகளை உன்னிப்பாக கேட்டோம்,

உன்னிப்பாக கேட்ட போதனைகளை மனப்பாடம் செய்தோம்,

மனப்பாடம் செய்த போதனைகளின் பொருளை ஆராய்ந்தோம்,

புரிந்துகொண்ட போதனைகளை உள்வாங்கிக் கொண்டு அதன் படி எங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டோம்.

ஆகவே எங்கள் கடமையை முழுமையாக செய்தபடியால் மனவருத்தமின்றி, மனக்குறையின்றி நாங்கள் மேலான சொர்க்கலோகத்தில் மறுபிறப்பு எடுத்துள்ளோம்.'

* * *

இதோ துறவிகளே மரவேர்கள் உள்ளன. வெருமையான குடிசைகள் உள்ளன. (மரத்தடியிலும், குடிசைகளுக்குள்ளும் சென்று) தியானம் பயலுங்கள், துறவிகளே! அசாக்கிரதையாக இருக்க வேண்டாம். முன்னர் வந்த தேவர்களைப் போல பின்னர் வருத்தப்படாதீர்கள்."

* * *

https://suttacentral dot net/an9.19/en/sujato


Comments

Popular posts from this blog

எண்ணங்களை சாந்தப்படுத்தல்

நன்றி மறவாமை