புகழை நாடி

 மற்றவர் நம்மை புகழ வேண்டும் என்று நினைப்பது சரியா? இது ஆணவம் சம்பந்தப்பட்டது, எனவே அவ்வாறு விரும்புவதாகாது என்று நாம் நினைக்கலாம். ஆனால் புத்தர் ஒழுக்கத்துடன் வாழ்பவர் அதன் காரணமாக மற்றவர் தம்மை புகழ வேண்டும் என்று விரும்புவது சரியே என்கிறார்.


இதிவுத்தகா #76 Itivuttaka

குத்தக நிகாயம்

மகிழ்ச்சியை நாடுவது



இது பகவான் புத்தர் சொன்னது...

"துறவிகளே, மூன்று வகையான மகிழ்ச்சியை விரும்பி, நல்லறிவுடையார் தமது ஒழுக்கத்தை காப்பாற்றுகிறார். அந்த மூன்று எவை?

'என்னை நாடிப் புகழ் வர வேண்டும்,' என்று விரும்பி அறிவுடையவர் தமது ஒழுக்கத்தை பாதுகாக்கிறார்.

'நான் செல்வந்தராக வேண்டும்,' என்று விரும்பி அறிவுடையவர் தமது ஒழுக்கத்தை பாதுகாக்கிறார்.

'உடல் அழியும் சமயத்தில், மரணத்தின் போது நான் சொர்க்கலோகத்தில் மறுபிறப்பெடுக்க வேண்டும்,' என்று விரும்பி அறிவுடையவர் தமது ஒழுக்கத்தை பாதுகாக்கிறார்..

இந்த மூன்று மகிழ்ச்சிகளை விரும்பி அறிவுடையவர் தமது ஒழுக்கத்தை பாதுகாக்க வேண்டும்."

Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

சுந்தருக்குத் தந்த போதனை