Jan 21 விமான வத்து கதைகள்
Jan 21: பாந்தே Sasanawanse போதனையின் சாராம்சம், புத்தர் மீது நம்பிக்கை இருந்தால் அது நல் விளைவுகளையும், பெரும் மகிழ்ச்சியையும் அளிக்கும் என்பதே. திரிபிடத்தின் விமான வத்து புத்தகத்திலிருந்து பல சம்பவங்களை எடுத்துக்காட்டினார். ஃஃஃ விமான வத்து 5.6 கரணிய சுத்தம் https://suttafriends dot org/sutta/vv5-6/ மொக்களானர் சொர்க்கத்திற்கு சென்று ஒரு தேவதையின் அழகிய அரண்மனையைப் பார்த்து வியந்து புகழ்ந்தார். அப்படிப்பட்ட மாளிகை கிடைப்பதற்கு தான் என்ன புண்ணிய காரியங்களை செய்தார் என்று கேட்க, தேவதை: "மெய்யறிவு உடையோர் தங்கள் நலம் கருதி புண்ணிய காரியங்களை செய்ய வேண்டும். பகவான் புத்தர் சரியான பாதையை தொடர்ந்து பயணத்தை முடித்தவர். அப்படிப்பட்ட புத்தர்களுக்கு தானம் தருவது பெரும் பலனைத் தரும். என் அதிர்ஷ்டவசம், ஒரு நாள் புத்தர் வனத்திலிருந்து வெளியே வந்து எங்கள் கிராமத்திற்கு வந்தார். அவரை பார்த்தவுடன் என் மனதில் நம்பிக்கை தோன்றியது. அதன் விளைவாக இந்த தாவதிம்ச சொர்க்கத்துக்கு நான் வந்து சேர்ந்தேன். அந்த புண்ணியக் காரணத்தினால் நான் ஒரு அழகிய தேவதையாக பிறந்து, எல்லா சுக ப...