மெத்தா - பதினோறு அனுகூலங்கள்

 


Feb 18, 2024 பாந்தே Sasanawanse


மெத்தா (எல்லையற்ற அன்பு) தியானம் செய்வதன் 11 பயன்கள்.

(அங்குத்தர நிகாயம் AN11.15)


அன்பைப் பயின்று, அன்பை வளர்த்து, அன்பைப் பெரிது படுத்தி, அன்பை ஒரு வாகனமாக, அடித்தலமாக அமைத்து, அன்போடு நெருங்கியிருப்பதால், அதனை நன்கு நிறுவுவதால் மனம் விடுதலையடைகிறது. அதனால் விளையும் பதினோறு அனுகூலங்கள்:


1. ஒருவர் மகிழ்ச்சியாகக் தூங்குகிறார், 

2. மகிழ்சியாக விழிக்கிறார். 

3. கெட்ட கனவுகள் காண்பதில்லை. 

4-5. மனிதர்களும் மனிதரல்லாதவரும்‌ (அமனுஸ்சர்) அவரை நேசிக்கின்றனர். 

6. தேவர்களால் அவர் காக்கப் படுகிறார். 

7. தீ, நஞ்சு மற்றும் வாட்கள் (ஆயுதங்கள்) ஆகியவை அவரை பாதிப்பதில்லை.

8. மனத்தை விரைவாக ஒரு நிலைப்படுத்துகிறார். 

9. தோற்றப் பொலிவுடன் காணப்படுகிறார். 

10. தடுமாற்றம் ஏதுமின்றி அவர் இயற்கையெய்துகிறார். 

11. மேற்கொண்டு அவர் தன்னை வளர்த்துக் கொள்ளாமலிருந்தாலும் (இம்மையில் நிப்பாண நிலை அடையா விட்டாலும்), மறுமையில் குறைந்தபட்சம் அவர் பிரம்மலோகத்திலாவது பிறப்பார்.


(தமிழில்: திரு தி. சுகுணன்)


Eleven advantages are to be looked for in the freedom of mind through the practice of love, by making love grow, by making much of it, by making love a vehicle and basis, by persisting in it, by becoming familiar with it, and by establishing it well. What eleven? One sleeps happily, one wakes happily, one has no bad dreams, one is dear to both humans and non-humans, one is guarded by the gods, fire, poison and swords do not affect one, the mind concentrates quickly, the complexion becomes radiant, one dies without bewilderment, and if one develops no further, one will reach at least to the Brahma world.


Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

சுந்தருக்குத் தந்த போதனை