Posts

Showing posts from 2019

நன்றி மறவாமை

இது பகவரின் வாக்கு. "துறவிகளே, உலகில் இந்த இரு வகையான மனிதர்களைக் காண்பது அரிது. எவ்விரண்டு? "அன்பை முதலில் விளைவிக்கும் ஒருவர். அன்பைப் பெற்றவர், நன்றியை மறவாதது மட்டுமின்றி அந்த அன்பைத் திருப்பித் தரவேண்டும் என்ற கடமை தனக்கு இருப்பதாக நினைப்பவர் மற்றவர்."    (காண்பது அரிது,  துள்ளபா சூத்திரம்.  அங்குத்தர நிகாயம் AN 2:118) “Monks, these two people are hard to find in the world. Which two? The one who is first to do a kindness, and the one who is grateful for a kindness done and feels obligated to repay it. These two people are hard to find in the world.”   Hard to find, Dullabhā Sutta (AN 2:118) புத்தர் இவ்விரு பண்புகளையுமுடையோர் அபூர்வமானவர் என்கின்றார். நாமும் எப்படி இத்தகைய அபூர்வமான மனிதாராக முடியும்? இவ்விரு பண்புகளையும் ஒருசேர வளர்த்துக் கொள்ள வேண்டும்.உள்ளப்பூர்வமாக நன்றி உணர்வு எப்போது தோன்றுகிறது? 1. இன்னொருவர் காட்டிய அன்பு நமக்கு உண்மையிலேயே நன்மை பயப்பதாக இருக்கும் போது. 2. மற்றவர் செய்த செய்கை நல்லெண்ணத்தோடு செய்யப்பட்டது என...

நல்வினை என்பது யாது?

   மணிமேகலையில் வரும் ஆறுவரிகளை இசையமைத்து காணொளியாக வெளியிட்டிருக்கின்ற ஆசிரியர் செ. பாலமுருகன் அவர்களை பாரட்டவேண்டும். ஆழ்ந்த பொருள் அடங்கிய பழங்கால கவிதைகளை இசை வடிவில் கேட்பது மிக அருமை. இன்றைய மாணவ மாணவிகளுக்கு இப்படிபட்ட ஆசிரியர்கள் தேவை! காணொளி காண்க "நல்வினை என்பது யாது?" என வினவின் சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச் சீலம் தாங்கித் தானம் தலைநின்று மேல் என வகுத்த ஒருமூன்று திறத்துத் தேவரும் மக்களும் பிரமரும் ஆகி மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்..      -மணிமேகலை காதை 30, வரிகள் 76-81 நல்வினை யென்று சொல்லப்படுவது யாதென்று கேட்பாயாயின்; முன்பு சொல்லப்பட்ட பத்துவகைத் தீவினைத் தொகுதிகளைச் செய்யாது நீங்கி;  சீலத்தை மேற்கொண்டு; தானங்கள் பலவற்றையும் செய்து; மேற்கதி யென்று சான்றோரால் வகுத்துரைக்கப் பட்ட மூன்று கதிகளில்;  தேவரென்றும், மக்களென்றும், பிரம ரென்றுமுள்ள கதிகளிற் பிறந்து; தாம் செய்த நல்வினைப் பயனாகிய இன்பத்தை நுகர்வர்     பதவுரை Vidwan Avvai Duraisamy Pillai  Should you ask, "What i...

சுனித்தர் என்ற சாதிவிலக்குண்டவர்

  சுனித்தர்  என்ற சாதிவிலக்குண்டவர் [பிறப்பு] ஏழ்மையில், உணவுக்குத் தடுமாறிய கீழான குடும்பத்தில் நான் பிறந்தேன். எனது வேலை இழிவானது: அழுகிப்போன பொருட்களையும்,  ஆலயங்களில் சேர்ந்த வாடிய பூக்களையும் கூட்டிப் பெருக்குவதே எனது வேலை. மக்கள் என்னைப் பார்த்து அருவருப்படைந்தனர். எள்ளி நகையாடினர், அவதூறு பேசினர். உள்ளத்தைத் தாழ்த்தி, அவர்களுள்  பலருக்கும் மரியாதை செலுத்தினேன். In a lowly family I was born, poor, with next to no food. My work was degrading: I gathered the spoiled, the withered flowers from shrines and threw them away. People found me disgusting, despised me, disparaged me. Lowering my heart, I showed reverence to many. [துறவு] பின்  சுய முயற்சியினால் முழுமையாக  விழிப்புற்ற  அந்த ஒருவர்,  மாவீரர், துறவிகள் அணிசூழ   மகதர்  தலைநகருக்குள்   நுழைவதைக் கண்டேன். என்னிடமிருந்த உறியை விசிறி விட்டு, மரியாதை செலுத்த அவரை அணுகினேன். அவர் - அந்த மாமனிதர் -  எனக...

கிழவன் அழகா, குமரன் அழகா?

எண்ணங்கள் மனத்திலிருந்தே தோன்றுகின்றன.  மனமே முதன்மையானது. தீய எண்ணத்துடனான பேச்சும் , செயற்பாடும் ஏற்படுத்தும் துன்பம், வண்டியை இழுத்துச்செல்லும் காளையின் காலடியைத் தொடரும் வண்டிச்சக்கரத்தைப் போலத் தொடரும். தூய எண்ணத்துடனான பேச்சும், செயற்பாடும் ஏற்படுத்தும் நன்மை,  விட்டுப் பிரியாத நிழலைப்போலத் தொடரும்.  (தம்மபதம் 1,2) எனவே ஒழுக்கம், பண்பு, சீலம், உள்ளத்தூய்மை போன்ற இயல்புகளுக்கு பௌத்தம் முக்கியத்துவம் தருகிறது. அந்த தூய்மைதான் வயோதிகத்திலும் அழகு சேர்க்கிறது என்கின்றார் சேக்கிழார். இளமையைப் பாதுகாக்க என்னவெல்லாம் செய்கிறோம்!  Anti-aging பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்கின்றனர் மக்கள்.  எங்கு பார்த்தாலும் botox ஊசி விளம்பரம்!  உண்மையான அழகு எங்குள்ளது? சேக்கிழார் வரிகளுக்கு வாரியார் அவர்களின் விளக்கம் பார்க்க.. (கிருபானந்த வாரியார் பேச்சிலிருந்து தொகுத்தது) வடிவுறு மூப்பு வந்து தளர்வொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்துச் சாயார். -சேக்கிழார் 12 ஆம் நூற்றாண்டு (12 ஆம் திருமுறை / பெரிய புராணம் - திருநீலகண்ட நாயனார் புராணம்) ஒழுக்கமே வட...