சுனித்தர் என்ற சாதிவிலக்குண்டவர்

 
சுனித்தர்  என்ற சாதிவிலக்குண்டவர்

[பிறப்பு]

ஏழ்மையில், உணவுக்குத் தடுமாறிய
கீழான குடும்பத்தில் நான் பிறந்தேன்.
எனது வேலை இழிவானது:
அழுகிப்போன பொருட்களையும், 
ஆலயங்களில் சேர்ந்த வாடிய பூக்களையும்
கூட்டிப் பெருக்குவதே எனது வேலை.
மக்கள் என்னைப் பார்த்து அருவருப்படைந்தனர்.
எள்ளி நகையாடினர், அவதூறு பேசினர்.
உள்ளத்தைத் தாழ்த்தி, அவர்களுள் 
பலருக்கும் மரியாதை செலுத்தினேன்.

In a lowly family I was born,
poor, with next to no food.
My work was degrading:
I gathered the spoiled,
the withered flowers from shrines
and threw them away.
People found me disgusting,
despised me, disparaged me.
Lowering my heart,
I showed reverence to many.

[துறவு]

பின் 
சுய முயற்சியினால் முழுமையாக 
விழிப்புற்ற  அந்த ஒருவர், 
மாவீரர், துறவிகள் அணிசூழ  
மகதர்  தலைநகருக்குள் 
நுழைவதைக் கண்டேன்.
என்னிடமிருந்த உறியை விசிறி விட்டு,
மரியாதை செலுத்த அவரை அணுகினேன்.
அவர் - அந்த மாமனிதர் -  எனக்காக மட்டுமே
கருணையோடு
அசையாமல் நின்றார்.
அவர் திருவடிகளில் 
மரியாதை செலுத்திய பின்
 ஒருபுறமாக நின்றேன்
உயிரினங்களில் தலை சிறந்த அவரிடம்
துறவறம் பூண வேண்டியவாறு.
அந்தக் கருணை மிக்க ஆசான்,
உலகம் அனைத்துக்கும் அனுதாபமுள்ள அவர்:
 "வாரும் துறவியே!"
என்று கூறி என்னை அழைத்தார்.
அதுவே என்னை அவர் சங்கத்தில் 
ஏற்றுக் கொண்டார் என்பதற்கான 
அடையாளம்.  

Then I saw the One Self-awakened,
arrayed with a squadron of monks,
the Great Hero, entering the city,
supreme, of the Magadhans.
Throwing down my carrying pole,
I approached him to do reverence.
He — the supreme man — stood still
out of sympathy
just
for me.
After paying homage
to the feet of the teacher,
I stood to one side
and requested the Going Forth from him,
supreme among all living beings.
The compassionate Teacher,
sympathetic to all the world, said:
"Come, monk."
That was my formal Acceptance.

[பயிற்சி]

தனிமையில் நான் வனத்தில் வசித்தேன். 
அயராமல்
அந்த வெற்றியாளன் எனக்குக் கற்பித்த 
சொற்படி பயின்றேன்.

Alone, I stayed in the wilds,
untiring,
I followed the Teacher's words,
just as he, the Conqueror, had taught me.

[விடுதலை]

இரவின் முதல் ஜாமத்தில்,
முற்பிறவிகளை நினைத்துப் பார்த்தேன்.
நடு ஜாமத்தில்,
 ஞானக்கண் தூய்மையானது.
கடை ஜாமத்தில்,
 மனத்தில் இருந்த இருளை அகற்றினேன். 

In the first watch of the night,
I recollected previous lives;
in the middle watch,
purified the divine eye;
in the last,
burst the mass of darkness.

[தேவர்கள் அஞ்சலி]

பின் இரவு முடிகிற வேளையில்
கதிரவன்  தோன்றும் நேரத்தில்,
இந்திரரும், பிரம்மரும் அவர்கள் நெஞ்சருகில் 
கை சேர்த்தவர்களாக
எனக்கு மரியாதை செலுத்த வந்தனர்:
"மனிதருள் மேன்மையானவரே! உமக்கு எங்கள் அஞ்சலி!
மனிதருள் தலைசிறந்தவரே! உமக்கு எங்கள் அஞ்சலி!
        உமது மனமாசுகள் நீக்கப்பட்டு விட்டன.
        அன்புடையவரே, நீங்கள் உபசரிக்கத் தக்கவர்!" 

Then, as night was ending
and the sun returning,
Indra and Brahma came to pay homage to me,
hands palm-to-palm at their hearts:
"Homage to you, O thoroughbred of men,
Homage to you, O man supreme,
whose fermentations are ended.
You, dear sir, are worthy of offerings."

[புத்தர்]

தேவர்கள் சூழ இருந்த என்னைப் பார்த்து
ஆசான்  புன்னகையோடு கூறினார்:
"எளிமையும் துறவும், பிரமச்சரியமும் மேற்கொண்டு,
தன்னடக்கமும், சுயகட்டுப்பாட்டோடும் இருக்கும் ஒருவர்:
       பிராமணராகிறார்.
       அவரே ஒரு ஒப்புயர்வற்ற பிராமணர்!"

Seeing me, arrayed with a squadron of devas,
the Teacher smiled and said:
"Through austerity, celibacy,
restraint, and self-control:
That's how one is a brahman.
He is a brahman supreme."


Sunita the Outcaste
translated from the Pali by Thanissaro Bhikkhu
Theragatha 12.2 தேரகதா 12.2  

Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

சுந்தருக்குத் தந்த போதனை