நல்வினை என்பது யாது?
மணிமேகலையில் வரும் ஆறுவரிகளை இசையமைத்து காணொளியாக வெளியிட்டிருக்கின்ற ஆசிரியர் செ. பாலமுருகன் அவர்களை பாரட்டவேண்டும். ஆழ்ந்த பொருள் அடங்கிய பழங்கால கவிதைகளை இசை வடிவில் கேட்பது மிக அருமை. இன்றைய மாணவ மாணவிகளுக்கு இப்படிபட்ட ஆசிரியர்கள் தேவை!
காணொளி காண்க
"நல்வினை என்பது யாது?" என வினவின்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்
சீலம் தாங்கித் தானம் தலைநின்று
மேல் என வகுத்த ஒருமூன்று திறத்துத்
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்..
-மணிமேகலை காதை 30, வரிகள் 76-81
நல்வினை யென்று சொல்லப்படுவது யாதென்று கேட்பாயாயின்;
காணொளி காண்க
"நல்வினை என்பது யாது?" என வினவின்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்
சீலம் தாங்கித் தானம் தலைநின்று
மேல் என வகுத்த ஒருமூன்று திறத்துத்
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்..
-மணிமேகலை காதை 30, வரிகள் 76-81
நல்வினை யென்று சொல்லப்படுவது யாதென்று கேட்பாயாயின்;
முன்பு சொல்லப்பட்ட பத்துவகைத் தீவினைத் தொகுதிகளைச் செய்யாது நீங்கி;
சீலத்தை மேற்கொண்டு; தானங்கள் பலவற்றையும் செய்து;
மேற்கதி யென்று சான்றோரால் வகுத்துரைக்கப் பட்ட மூன்று கதிகளில்;
தேவரென்றும், மக்களென்றும், பிரம ரென்றுமுள்ள கதிகளிற் பிறந்து;
தாம் செய்த நல்வினைப் பயனாகிய இன்பத்தை நுகர்வர்
பதவுரை Vidwan Avvai Duraisamy Pillai
Should you ask, "What is a good deed?"
Not doing the collection of ten evils mentioned above,
undertaking virtue, establishing generosity.
That which the wise have said are three good results follow
taking birth as devas, humans or brahmas
experiencing the joy from the results of their good deeds.
தவிர்க்கவேண்டிய பத்துவகைத்தீவினைகள்:
கொலை, களவு (திருடல்), தவறான காமம்
இம்மூன்றும் உடம்பால் உண்டாகும் தீவினைகள்;
பொய்யுரையும், புறங்கூறலும், கடுஞ்சொல்லும், பயனில்லாத சொல் சொல்லுதலும்
என்று வாக்கினால் உண்டாகும் தீவினைகள் நான்கும்;
பேராசை, சினம் கொள்ளலும், தவறானகாட்சி
மனத்தில் தோன்றுவனவாகிய தீவினை மூன்றும்...
Killing, stealing, improper sexual conduct (adultery)
are the three kinds of wrongs appearing in a body.
Lies, malicious speech, harsh speech, frivolous speech
are the four types of wrong speech.
Greed, hatred and wrong view (delusion)
are the three kinds of wrong deeds that appear in the mind.
ஐந்து சீலங்கள் (ஒழுக்கங்கள்) The 5 precepts
எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்த்தல் To refrain from killing living creatures
கொடுக்காத எப்பொருளையும் எடுப்பதைத் தவிர்த்தல் To refrain from taking what is not given
தவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருத்தல் To refrain from sexual misconduct
தவறான பேச்சு உரைக்காமல் இருத்தல்; (பொய் சொல்வதும், வதந்தி கிளப்புவதும், கடுமையாகப் பேசுவதும், வம்பளப்பதும் தவிர்த்தல்) To refrain from harsh and false speech
போதையளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்த்தல் To refrain from taking intoxicating liquor and drugs
தவிர்க்கவேண்டிய 4 கீழ்கதிகள்: மிருக, பூத, அசுர, நரக உலகங்கள். அங்கு சென்றுவிட்டல் மீண்டும் மனித பிறப்பெடுப்பது அறிது.
மேற்கதி; மனித, தேவ, பிரம்ம உலகங்களில் பிறப்பெடுப்பது.
Comments
Post a Comment