நன்றி மறவாமை
இது பகவரின் வாக்கு. "துறவிகளே, உலகில் இந்த இரு வகையான மனிதர்களைக் காண்பது அரிது. எவ்விரண்டு? "அன்பை முதலில் விளைவிக்கும் ஒருவர். அன்பைப் பெற்றவர், நன்றியை மறவாதது மட்டுமின்றி அந்த அன்பைத் திருப்பித் தரவேண்டும் என்ற கடமை தனக்கு இருப்பதாக நினைப்பவர் மற்றவர்." (காண்பது அரிது, துள்ளபா சூத்திரம். அங்குத்தர நிகாயம் AN 2:118) “Monks, these two people are hard to find in the world. Which two? The one who is first to do a kindness, and the one who is grateful for a kindness done and feels obligated to repay it. These two people are hard to find in the world.” Hard to find, Dullabhā Sutta (AN 2:118) புத்தர் இவ்விரு பண்புகளையுமுடையோர் அபூர்வமானவர் என்கின்றார். நாமும் எப்படி இத்தகைய அபூர்வமான மனிதாராக முடியும்? இவ்விரு பண்புகளையும் ஒருசேர வளர்த்துக் கொள்ள வேண்டும்.உள்ளப்பூர்வமாக நன்றி உணர்வு எப்போது தோன்றுகிறது? 1. இன்னொருவர் காட்டிய அன்பு நமக்கு உண்மையிலேயே நன்மை பயப்பதாக இருக்கும் போது. 2. மற்றவர் செய்த செய்கை நல்லெண்ணத்தோடு செய்யப்பட்டது என...