ஹிரீ-ஒத்தாப்ப
மனசாட்சி-அக்கறையோடு இருத்தல் Hirī-Ottappa ஹிரீ-ஒத்தாப்ப பிக்கு போதி அவர்களின் போதனையிலிருந்து தொகுக்கப்பட்டது. பௌத்த திரிபிடகத்தில் ஹிரீ-ஒத்தாப்ப என்ற இரு பண்புகள் சேர்ந்து காணப்படுகின்றன. இவை இரண்டும் நற்பண்புகள். வேண்டியவை. ஐந்து சீலங்களை கடைபிடிப்பதற்கு உதவும் பண்புகள் என்று புத்தர் கூறுகிறார். ஹிரீ என்றால் மனசாட்சி. தவறு செய்யுமுன் மனசாட்சி உறுத்துவது. ஒத்தாப்ப என்றால் அக்கறையோடு இருத்தல். தவறு செய்யுமுன் அதற்கான வினைப் பயனை நினைத்து அஞ்சுவது. "இரண்டு பிரகாசமான விஷயங்கள் உலகின் காவலாளிகளாக இருக்கின்றன. உலகை பாதுகாக்கின்றன. அவை: மனசாட்சி (Hirī, Conscience) மற்றும் அக்கறையோடு இருத்தல் (Ottappa, Prudence)." புத்தரின் வாக்கு AN2.9 "இந்த ஏழு விதமான செல்வங்கள் உள்ளன. எந்த ஏழு? நம்பிக்கை (Saddhā, faith), ஒழுக்கம் (sīla, ethics), மனசாட்சி (hirī, conscience), அக்கறையோடு இருத்தல் (ottappa, prudence), கல்வி (suta, learning), தானம் ( cāga, generosity), விவேகம் (paññā, wisdom)." புத்தரின் வாக்கு AN7.6 ஹிரீ (அகம் சார்ந்தது) தீய செயலை நினைக்கும் ப...