புண்ணா தேரியின் கதை

 புண்ணா தேரியின் கதை

[புண்ணா]  (சமஸ்: பூர்ணா?)

நான் ஒரு அடிமைப்பெண்.
நீர் சுமந்து செல்வது எனது வேலை.
எனது எஜமானிகளின் அடிக்கு பயந்து, அவர்களது கோபத்திற்கும் நச்சுதல்களுக்கும் அஞ்சி,
 அடிக்கடி நீரல் இறங்க வேண்டிய கட்டாயம் எனக்கு. 
எனவே வேறு வழியில்லாமல் குளிரில் நடுங்குகிறேன்.

ஆனால் பிராமணரே, நீர் எதற்காக பயப்படுகிறீர்? 
அடிக்கடி தண்ணீரில் மூழ்குகின்றீர். 
கைகளால் எல்லாம் நடுங்குகின்றன,  இந்த கடும் குளிர் நீரில்.

[பிராமணர்]

தெரிந்தேதானே கேட்கிறாய், புண்ணாம்மா? 
நான் நற்காரியங்களை செய்கிறேன்,
செய்த தீவினையை அகற்ற.

இளையவரோ, முதியவரோ - யாராக இருந்தாலும், தீவினை செய்திருந்தால், ஸ்னானம்  (தண்ணீரில் மூழ்கி எழுவது) செய்தால், அத்தீவினை பயனில் இருந்து விடுபடுவார்கள்.

[புண்ணா]

'நீரில் மூழ்கி எழுந்து ஸ்னானம் செய்வதால் தீவினைப் பயனில இருந்து விடுபடலாம்', என்று யார் சொன்னது? , ஒரு அறிவிலி மற்றொருவனுக்கு சொன்னது போல.

அப்படி என்றால் தவளைகளும் ஆமைகளும் முதலைகளும் மற்ற நீர் பிராணிகளும் அடுத்த பிறப்பில் தேவலோகம் செல்லுமா?

ஆடு பன்றிகளின் மாமிசம் விற்போரும், மீனவரும், 
கொள்ளையரும், கொலை தண்டனையை நிறைவேற்றுவோரும்
இவ்வாறு நீரில் மூழ்கி எழுந்து, அவர்களும் தம் பாவத்திலிருந்து விடுபடுவார்களே!

முன் செய்த பாவத்தின் வினைகளை இந்த ஆற்று நீர் அடித்து செல்லும் என்றால்,
முன் செய்த புண்ணியங்களையும் அல்லவா அடித்துச் செல்லும்? ஏன் என்றால், இவை புறத்தில் உள்ளபடியால்.

பிராமணரே, நீர் எதற்காக பயப்படுகின்றீரோ, அதன் காரணமாக  இந்த குளிர்ந்த நீரில் மூழ்குகின்றீரோ,  அதை செய்வதை நிறுத்தி விடுங்கள். இந்தக் குளிர்ந்த நீரில் மூழ்கி, தோலை பாதிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை."

[பிராமணர்]

"நான் தவறான பாதையில் சென்றிருந்தேன், 
நீ என்னை அறிய பாதைக்கு கொண்டு வந்தாய். 
அம்மா, இந்த ஸ்நானம் செய்ய பயன்படுத்திய துணியை பெற்றுக் கொள்."

[புண்ணா]

""இந்த துணியை நீரே வைத்துக் கொள்ளவும்.
 எனக்கு அது தேவையில்லை.
துன்பத்துக்கு அஞ்சினால்,
துன்பம்  பிடிக்காதவொன்று என்றால்,

வெளிப்படையாகவோ, தனிமையிலோ,
தவறான காரியங்களை செய்ய வேண்டாம்.  
தவறான காரியங்களை செய்தால், 
அல்லது எதிர்காலத்தில் செய்யவிருந்தால், 

துக்கத்திலிருந்து தப்பிக்க முடியாது. 
அதை விட்டு ஓடிச்சென்றாலும் அது பின் தொடர்ந்து வரும்.
துன்பத்துக்கு அஞ்சினால்,
துன்பம்  பிடிக்காதவொன்று என்றால்,

புத்தரிடம், தம்மத்திடம், சங்கத்திடம் 
அடைக்கலம் செல்லவும்.
உங்கள் நன்மைக்காக, 
நல்லொழுக்க வழிகளை பின் தொடரவும்."

[பிராமணர்]

நான் புத்தரிடம், தர்மத்திடம், சங்கத்திடம் அடைக்கலம் செல்கின்றேன்!
என் நன்மைக்காக நல்லொழுக்க வழிகளை பின் தொடர்வேன்!

முன்னர் பிரம்மனின் உறவினனாக (பிறப்பினால் பிராமணனாக) இருந்தேன்.  
இன்று உண்மையான பிராமணன் ஆனேன்.  
மூன்று அறிவுகளையும் அடைந்து, மேலான மெய்யறிவு கொண்டேன். 
எனது உள்ளம் பாதுகாக்கப்பட்டுள்ளது, சுத்தமாக கழுவப்பட்டு விட்டது. 

* * *

குறிப்பு:

பிராமணர் அருகர்/அரஹந்தர்  நிலையை அடைந்தார்.

ஒரு அடிமைப்பெண், உயர் குடும்பத்தில் பிறந்த பிராமணருக்கு கல்யாண மித்திரையாக (ஆன்மீக நண்பராக) இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: தேரிகதா 12.1
suttacentral dot net/thig12.1

Comments

Popular posts from this blog

எண்ணங்களை சாந்தப்படுத்தல்

நன்றி மறவாமை

தேவதா சுத்தம் - ஒரு தேவன்