மூன்று விஷயங்கள்

மூன்று விஷயங்கள்  
அங்குத்தர நிகாயம் 10.76

ஹிரீ-ஒத்தாப்ப என்பவை ஆன்மீக வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவை என்று விளக்கும் சுத்தம்.

ஹிரீ என்றால் மனசாட்சி. தவறு செய்யுமுன் மனசாட்சி உறுத்துவது. 
ஒத்தாப்ப என்றால் அக்கறையோடு இருத்தல். தவறு செய்யுமுன் அதற்கான வினைப் பயனை நினைத்து அஞ்சுவது.

ஃஃஃ 1

மூன்று விஷயங்கள் இல்லாமல் முழுமையாக விழிப்புற்ற புத்தர் உலகில் தோன்ற மாட்டார். அவரது போதனைகளும் பயிற்சி முறைகளும் இந்த உலகில் பிரகாசிக்காது. அவை யாவை? 

மறுபிறப்பு, மூப்பு, சாக்காடு. 
Rebirth, old age, and death.
Jāti, jarā, maraṇañ.

ஆனால் இவை மூன்றும் இருப்பதால் புத்தர் உலகில் தோன்றுகிறார். அவரது போதனைகளும் பயிற்சி முறைகளும் உலகில் பிரகாசிக்கின்றன.

ஃஃஃ 2

இந்த மூன்று விஷயங்களை கைவிடாமல் மறுபிறப்பு, மூப்பு, சாக்காடு ஆகியவற்றை விட்டுவிட முடியாது. அவை: 

காமம், வெகுளி (வெறுப்பு), மயக்கம்
Greed, hate, and delusion.
Rāgaṁ, dosaṁ, mohaṁ.

குறிப்பு:
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்
 (குறள் 360)
(மு வரதராசனார்): விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வாராமற் கெடும்.

ஃஃஃ 3

இந்த மூன்று விஷயங்களை கைவிடாமல் காமம், வெகுளி, மயக்கம்  ஆகியவற்றை விட்டுவிட முடியாது. அவை:

தான் என்ற உணர்வு, ஐயம், ஒழுக்க முறைகள் மற்றும் கொள்கையாசாரங்களை தவறாக புரிந்து கொள்ளல்.
Identity view, doubt, and misapprehension of precepts and observances.
Sakkāyadiṭṭhi, vicikiccha, sīlabbataparāmāsa

குறிப்பு:
ஐயம்: புத்தர் முழுமையாக ஞானம் பெற்றாரா என்பதில் ஐயம், போதனைகளை சந்தேகித்தல்.
தவறான கொள்கைகள்: சில சமயத்து குருமார்கள் ஆடைகள் அணிவதில்லை. அதை ஒரு ஒழுக்க முறையாக கருதுகின்றனர். முன் செய்த தீவினைகளை அகற்ற மணிக்கணத்தில்  உச்ச வெயிலில் நிற்பார்கள். 

இந்த மூன்று கட்டுகளை அவிழ்த்தவர்,  ஸோதாபண்ணா என்ற முதல் ஞானநிலையை அடைகிறார்.
These are also the three fetters that drop away for someone who reached sotāpanna, first stage of enlightenment.

 ஃஃஃ 4

இந்த மூன்று விஷயங்களை கைவிடாமல்  தான் என்ற உணர்வு, ஐயம், ஒழுக்க முறைகள் மற்றும் கொள்கையாசாரங்களை தவறாக புரிந்து கொள்ளல்  ஆகியவற்றை விட்டுவிட முடியாது. அவை:

தகாத கவனம்(Ayonisomanasikāra), தவறான பாதை பின்பற்றுதல் மற்றும் மனதில் மந்தம். 
Improper attention, following a wrong path, and mental sluggishness.


குறிப்பு:
விவேகத்துடன் கவனித்தல்: யோனிஸோ மனஸிகாரா
Opposite of improper attention is :  Wise attention. Yonisomanasikāra 

தவறான பாதை என்பது அட்டாங்க மார்க்கத்தை கடைபிடிக்காமல் வேறு வழியில் செல்வது.
Wrong Path: Each of the factors of the eightfold path has Right in front of it. Not following the eightfold path is following a wrong path
 
ஃஃஃ 5

இந்த மூன்று விஷயங்களை கைவிடாமல்  தகாத கவனம், தவறான பாதை பின்பற்றுதல் மற்றும் மனதில் மந்தம் ஆகியவற்றை விட்டுவிட முடியாது. அவை: 

கவனமின்மை, சூழ்நிலை அறியாதிருத்தல் மற்றும் இழிப்பறிப்பட்ட மனம்.
Unmindfulness, lack of situational awareness, and distracted mind.
Muṭṭhassaccaṁ, asampajaññaṁ, cetaso vikkhepaṁ 

Note: Opposite of the first two is the phrase sati-sampajañña
Sati - focussed attention
Sampajañña - situational awareness
Example (from Ajahn Sona): Even a bird needs sati-sampajañña. Focused attention to pick out the seed from thousand grains of sand (otherwise it'll be swallowing sand all the time and not get any food) and also situational awareness (keep checking the surroundings constantly) so it doesn't become food to a bigger bird of prey. 
Likewise, anything we do we need to focus on the task at hand (Sati) while also knowing the big picture, why we are doing it (Sampajañña).
The English idiom "can't see the forest for the trees" means being very involved in the details of a problem (there's sati) without knowing the whole situation(but no Sampajañña).

சதி-சம்பஞ்ஜன்யா
ஆயிரம் கற்களுக்கு மத்தியில் உள்ள விதையை உண்ண வேண்டும் என்றால் ஒரு பறவைக்கு கூர்மையான கவனம் தேவை. அது சதி. தான் ஒரு பூனைக்கோ, பருந்துக்கோ உணவாகி விடாமல் இருக்க, அந்த பறவை சுற்றும் சூழ் அறிந்து இருக்க வேண்டும். அது சம்பஞ்ஜன்யா.

ஃஃஃ 6

இந்த மூன்று விஷயங்களை கைவிடாமல் கவனமின்மை, சூழ்நிலை அறியாதிருத்தல் மற்றும் இழிப்பறிப்பட்ட மனம் ஆகியவற்றை விட்டுவிட முடியாது. அவை:

மேன்மையானவர்களை காண விரும்பாதது, மேன்மையானோரின் போதனைகளை கேட்க விரும்பாதது, குறை காணும் மனம்.
Not wanting to see the noble ones, not wanting to hear the teaching of the noble ones, and a fault-finding mind

குறிப்பு:
குறை காணும் மனம்: காணச் சென்றவரை, கேட்டதை குறை சொல்வது. 

ஃஃஃ 7

இந்த மூன்று விஷயங்களை கைவிடாமல்   மேன்மையானவர்களை காண விரும்பாதது, மேன்மையானோரின் போதனைகளை கேட்க விரும்பாதது, குறை காணும் மனம் ஆகியவற்றை விட்டுவிட முடியாது. அவை:

மன அமைவின்மை (uddhaccaṁ), புலன் அடக்கமின்மை மற்றும் நல்லொழுக்கமின்மை.
Restlessness, lack of restraint, and unethical conduct.

ஃஃஃ 8

இந்த மூன்று விஷயங்களை கைவிடாமல்  மன அமைவின்மை, புலன் அடக்கமின்மை மற்றும் நல்லொழுக்கமின்மை ஆகியவற்றை விட்டுவிட முடியாது. அவை:
நம்பிக்கையின்மை, இரங்கலின்மை, சோம்பல்
Faithlessness, uncharitableness, and laziness.

ஃஃஃ 9

இந்த மூன்று விஷயங்களை கைவிடாமல்  நம்பிக்கையின்மை, இரங்கலின்மை, சொம்பல் ஆகியவற்றை விட்டுவிட முடியாது. அவை:

அவமதித்தல், கண்டிக்க முடியாதவறாக இருத்தல், தீய நட்பு கொண்டிருத்தல் (pāpamittataṁ) 
Disregard, being hard to admonish, and having bad friends.

குறிப்பு:
அவ மதித்தல் என்றால் நல்லது சொல்ல வந்தவரை மதிக்காமல் இருப்பது.

கண்டிக்க முடியாதவராக இருப்பதென்றால், நமக்கு நன்மை தேடுவோர் ஒருவர் நாம் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டியும் திருந்தாமல் தொடர்ந்து அந்த தவறுகளை செய்து கொண்டே இருப்பது.

ஃஃஃ 10

இந்த மூன்று விஷயங்களை கைவிடாமல்   அவமதித்தல், கண்டிக்க முடியாதவறாக இருத்தல், தீய நட்பு கொண்டிருத்தல் ஆகியவற்றை விட்டுவிட முடியாது. அவை:

மனசாட்சியின்மை, அசட்டுத்தனம், அக்கறையின்மை.

Lack of conscience, imprudence, and negligence.
Ahirikaṁ, anottappaṁ, pamādaṁ 

Note: The  opposite of the first two is the phrase hiri-ottappa.
ஹிரீ-ஒத்தாப்ப 
ஹிரீ என்றால் ஒரு தவறு செய்யுமுன் மனசாட்சி உறுத்துவது.
ஒத்தாப்ப என்றால் தவறு செய்யுமுன் அதற்கான வினைப் பயனை நினைத்து அஞ்சுவது.

இவை இரண்டும் மனதில் இருக்கும் போது நாம் அக்கறையோடு வாழ்வோம்.
ஹிரீ-ஒத்தாப்ப மற்றும் அக்கறையோடு வாழ்ந்தல் இருக்கும்போது இதற்கு முன் (#9ல்) சொல்லப்பட்ட மூன்று விஷயங்கள் தோன்றாது. அப்படியே படிப்படியாக செல்லும் போது மறுபிறப்பு இருக்காது என்ற முடிவுக்கு வரலாம். மறுபிறப்பு இல்லை என்றால் மூப்பு இல்லை, மரணம் இல்லை. அதுவே துக்கத்தின் முடிவு.
The Buddha concludes in this Sutta that hiri-ottappa is a foundational requirement.  
Hiri is the moral  shame that we feel before doing an unskillful act
Ottappa is the fear that we have on the consequences of doing an unskillful act
If there is hiri-ottappa then there will be deligence (not negligence) and so the previous three things will not appear and so on till the logical conclusion that rebirth will not happen. No rebirth = no aging, no death, end of suffering.

ஃஃஃ
ஆதாரம்:
https://suttacentral dot net/an10.76/

Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

சுந்தருக்குத் தந்த போதனை