ஹிரீ-ஒத்தாப்ப


 

மனசாட்சி-அக்கறையோடு இருத்தல்
Hirī-Ottappa 
ஹிரீ-ஒத்தாப்ப

பிக்கு போதி அவர்களின் போதனையிலிருந்து தொகுக்கப்பட்டது.

பௌத்த திரிபிடகத்தில் ஹிரீ-ஒத்தாப்ப என்ற இரு பண்புகள் சேர்ந்து காணப்படுகின்றன.

இவை இரண்டும் நற்பண்புகள்.  வேண்டியவை. ஐந்து சீலங்களை கடைபிடிப்பதற்கு உதவும் பண்புகள் என்று புத்தர் கூறுகிறார்.

ஹிரீ என்றால் மனசாட்சி. தவறு செய்யுமுன் மனசாட்சி உறுத்துவது. 
ஒத்தாப்ப என்றால் அக்கறையோடு இருத்தல். தவறு செய்யுமுன் அதற்கான வினைப் பயனை நினைத்து அஞ்சுவது.

"இரண்டு பிரகாசமான விஷயங்கள் உலகின் காவலாளிகளாக இருக்கின்றன. உலகை பாதுகாக்கின்றன. அவை:
மனசாட்சி (Hirī, Conscience) மற்றும் அக்கறையோடு இருத்தல் (Ottappa, Prudence)."
புத்தரின் வாக்கு AN2.9

"இந்த ஏழு விதமான செல்வங்கள் உள்ளன. எந்த ஏழு? நம்பிக்கை (Saddhā,  faith), ஒழுக்கம் (sīla, ethics), மனசாட்சி (hirī, conscience), அக்கறையோடு இருத்தல் (ottappa, prudence), கல்வி (suta, learning),    தானம் ( cāga, generosity),  விவேகம் (paññā, wisdom)."
புத்தரின் வாக்கு AN7.6

ஹிரீ (அகம் சார்ந்தது)
தீய செயலை நினைக்கும் போது மனதில் அருவருப்பு உண்டாக வேண்டும். அதை செய்தால் நமது  சுயமரியாதை பாதிக்கப்படும் என்பதால் அருவருப்பு உண்டாகிறது.
'இந்தச் தீயச் செயலை செய்வது எனக்கு பெருமைக்கேடு, கௌரவக் குறைவு.', போன்ற எண்ணங்கள் எழ வேண்டும்.
நம் மீது நாம் கொண்டுள்ள மரியாதையின் காரணமாக ஒரு தவறை செய்வதில்லை என்று சொல்லலாம்.

ஒத்தாப்ப (புறம் சார்ந்தது)
தீய செயலை செய்யும் முன் அதன் விளைவுகளை நினைத்து அச்சம் உண்டாக வேண்டும். அந்த அக்கறை இருக்க வேண்டும். மற்றவர் மீது நாம் கொண்டுள்ள மரியாதையின் காரணமாக ஒரு தவறை செய்வதில்லை என்றும் நினைத்துக் கொள்ளலாம்.
முதலில், தீய செயலை செய்வதன் விளைவாக மற்றவர் நம்மை குறை கூறலாம். குறிப்பாக நாம் அன்பும் மதிப்பும் கொண்டுள்ளவர்கள் - அது நமது மனைவி, கணவன், பெற்றோர், மக்கள், நண்பர்களாக இருக்கலாம். அவர்களுக்கு தெரிய வந்தால் என்ன நினைப்பார்கள்? ' என்ற அச்சம் தோன்ற வேண்டும்.

இரண்டாவதாக அது சட்டப்படி குற்றம் ஆகுமேயானால், கொலை, திருட்டு, நீதிபதி முன் பொய் சொல்வது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது அல்லது தவறான பாலியல் உறவுகளில் ஈடுபடுவது போன்ற குற்றங்கள் - அதற்கு சட்டப்படி தரப்படும் தண்டனையை ஏற்றாக வேண்டி வரும்.

மூன்றாவதாக பௌத்தம்  பின்பற்றுவோர் கன்மத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். அப்படியே நம் தீய செயல் பிறருக்கு தெரியாமல் போனாலும், சட்டத்தில்  பிடிபடாமல் தப்பித்து விட்டாலும் தீவினையின் கண்ம விளைவுகளை எதிர்காலத்தில் (இம்மையிலும் மறுமையிலும்) சந்தித்தே ஆக வேண்டும். அது  அடுத்த பிறப்பில் நரக, பூத, விலங்கு  உலகங்களுக்கு கூட எடுத்துச் செல்லலாம். அந்த அச்சம் தவறு செய்வதை தடுக்க உதவும்.

உரைகளில் புத்த கோசர் தரும் உவமானம் இது: 
ஒரு இரும்புக்கோல் இருக்கிறது. ஒரு புறம் மலசலம் பூசப்பட்டிருக்கிறது. மறுபுறம் தீயில் நீண்ட நேரம் பழுக்கக் காய்ச்சப்ப ட்டிருக்கிறது.
அந்த இரும்புக்கோல் தான் நாம் செய்ய நினைக்கும் தீயச் செயல். இருபுறத்திலும் அதைப் பிடிக்க தயங்குவோம்.  மலசலம் பூசப்பட்ட பகுதி நமக்கு அருவருப்பு தரும் (ஹிரீ).  மறுபுறத்தை தொட்டால் கை வெந்து விடும் என்ற அச்சம் இருக்கும் (ஒத்தாப்ப).


Hiri and Ottappa (YouTube video transcript)
Ven. Bhikku Bodhi 

Today, I'm going to be speaking about two qualities that are often found joined together in the Buddhist texts. The Pali words are Hiri and Ottappa. The two are often joined together almost inseparably. Normally we translate Hiri as a sense of moral shame and Ottappa as either fear of wrongdoing or the sense of moral dread. The two qualities together are called by the Buddha, the bright guardians of the world, because these two qualities operating together are the foundations of morality, the basis of ethical conduct.

These two qualities of Hiri and Ottappa also function as powers of a trainee, of one in the higher training.  This is quite a significant role to them. So they're not just qualities of the mind but they are powers which have the important function of warding off the tendency to engage in unwholesome activity. The Buddha also calls them treasures or the wealth of the noble ones and so along with such qualities as mindfulness and wisdom this sense of moral shame and moral dread are types of noble wealth.  

So what is  the distinction between Hiri and Ottappa? 
Hiri is explained as the disgust with doing evil. In English the word shame usually signifies a feeling of regret that arises after one has done something wrong, but Hiri has a somewhat different function.  Hiri is a sense of disgust with evil, with unwholesome actions, with misbehavior - that protects one and prevents one from engaging in that action in the first place. The commentaries explain that the ground or basis for Hiri, this disgust with evil, is the sense of self-respect, a regard that one has for what I would call the inherent dignity of one's own character. So when one engages in misconduct, in transgression of the basic ethical principles, then one sullies or defiles ones character so that sense of inherent dignity gets sullied or tainted and one loses that self-respect.
 
Ottappa is the fear of wrong doing, a moral dread. So Ottappa has the quality, it has the function of restraining one from misconduct out of fear of the consequences of moral transgression. And these undesirable consequences can take on various forms.

One will be, for example, being blamed and criticized by others and so naturally we want to avoid being blamed and criticized, especially by good people, like people that we respect. So to preserve one's reputation, to preserve one's good name, one abstains from misconduct. 

  And another type of undesirable consequence of transgression is punishment. Especially in  secular society, the legal consequences of misconduct. So by killing,  stealing and sexual misconduct and so on, one could be subject to legal punishments or penalties and so that will act as a restraint from misconduct.

And then for a Buddhist, who accepts the teaching of karma and the results of karma this will be the most powerful incentive to Ottappa. When one recognizes that even when even if one escapes criticisms by others, even if one avoids legal repercussions but still when one commits moral transgressions then one accumulates or acquires unwholesome karma, which is going to produce its fruits, it's effects sometime in the future. And if it is a serious enough transgression,  it could even lead to a lower form of rebirth and to dreadful, painful consequences in the future. So out of fear of those consequences one refrains from misconduct and so in this way we have Hiri and Ottappa working together. 

Hiri is based on a sense of self-respect so is somewhat inward looking,  looking to preserve one's own inner dignity whereas Ottappa is outward looking, at the opinion of others, looking at potential legal consequences, looking out for the workings beyond faulting of the law of karma and its fruits across the span from one existence to another.

 The commentaries illustrate the difference between Hiri and Ottappa with an interesting and very insightful simile.  They use a simile of a metal bar which on one end has been smeared with excrement and the other end has been heated up until it's red hot.  And so a person would not want to grab hold of the metal bar on the end which has been smeared with excrement because of disgust with the excrement, because they don't want to be defiled, they don't want to have their body tainted by the excrement and they would not want to grab the metal bar on the other end which has been heated till it's red hot from fear of being burnt.  So that illustrates Ottappa, the dread of doing wrong of moral transgression from the fear that one will be burnt either by criticism from others or legal repercussions or the workings of the law of karma.  And so we could see that Hiri-ottappa forms powerful inner conditions for preserving our moral integrity and steering us along the path of Dhamma. 
 
The Buddha points out that Hiri and Ottappa are the basis for Sila, that is ethical behavior and it is from ethical behavior that all of the other stages of the Path unfold, culminating in liberation. And so we start the Path to liberation, not merely with Sila but by cultivating in ourselves the sense of Hiri and Ottappa and from this we walk the rest of the path to liberation.

Comments

Popular posts from this blog

எண்ணங்களை சாந்தப்படுத்தல்

நன்றி மறவாமை

தேவதா சுத்தம் - ஒரு தேவன்