விபஸ்ஸனா
விபஸ்ஸனா
Bhante Gunaratna ("Bhante G") தந்த விளக்கம்.
வி என்றால் விசேட
பஸ்ஸனா என்றால் பார்வை.
அதாவது ஒரு சிறப்பான வழியில் பார்ப்பது
கண்கள் மூலம் பார்ப்பது வேறு.
உதாரணமாக, கண்களாள் ஒரு இலை நிறம் மாறி இருப்பதை பார்க்க முடிகிறது.
ஆனால், இலையின் தோன்றி, மறையும் அநிச்ச தன்மையை, விபஸ்ஸனா மூலம் அறிவோம்.
விபஸ்ஸனா உள்ளதை உள்ளபடி பார்க்கிறது. அதற்கு 'யோனிசோ மனசிகாரா' தேவை அதாவது விவேகத்துடன் கவனித்தல்.
Yoniso manasikārā - wise attention, impartial, unbiased attention
விபஸ்ஸனா மூலம் பொருட்களின், மனநிலைகளின்
'அநிச்ச, அனாத்ம, துக்க'
தன்மைகளை அறிய வேண்டும்.
ஃஃஃ
"நிலையில வறிய துன்பம் என நோக்க"
மணிமேகலை 30-030
நிலையில - நிலையில்லாதனவென்றும் (impermanent);
வறிய - சாரமற்றவை என்றும் (insubstantial, non-self, no owner);
துன்பம் என - துன்பமென்றும் (unsatisfactory);
நோக்க-
எப்பொருளையும் எந்த மனநிலையையும் (நுகர்ச்சி, மனக்குறிப்பு, எண்ணங்கள், உணர்வு போன்றவை) நான், எனது, என் ஆன்மா என்று நினைக்காமல்,
காரணங்களால் தோன்றும் அவற்றை, தோன்றி மறையும் தன்மையுடைய
அவற்றை நிலையில, வறிய, துன்பம் என நோக்க வேண்டும்.
ஃஃஃ
Comments
Post a Comment