போஜங்க சுத்த பரித்தம்

 




போஜங்க சுத்த பரித்தம்
சிவானி குப்தா அகர்வால் அவர்கள் குரலில்

(பரித்தம் - துன்ப நிவாரணத்தின் பொருட்டுச் ஓதும் சுத்தங்கள்)

Bojjhango sati-sankhāto
Dhammānam vicayo tathā
Viriyam-pīti-passaddhi
Bojjhangā ca tathāpare

போதி அங்கங்கள் ஏழு. அவை
கடைப்பிடி,
தம்மங்களை ஆராய்தல்,
வீரியம் (முயற்சி),
அகமலர்ச்சி,
அமைதி
... மேலும் இரண்டு.

Samādhupekkha-bojjhangā
Sattete sabba-dassinā
Muninā sammadakkhātā
Bhāvitā bahulīkatā

சமாதியும்,
மன சமநிலையும்.
இந்த ஏழும் எல்லாம் அறிந்த முனிவரால் நன்கு விளக்கப்பட்டு இருக்கின்றன.
அவை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன,
மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யப்பட்டுள்ளன.

Samvattanti abhiññāya
Nibbānāya ca bodhiyā
Etena sacca-vajjena
Sotthi te hotu sabbadā.

இதனால் மெய்ஞானம் எழுகிறது,
துக்கம் முடிவுக்கு வருகிறது,
மார்க்கம் அறியப்படுகிறது.

இந்த அருள் வாக்கினால் எப்போதும் மணமகிழ்வோடு இருப்பீர்களாக!

Ekasmim samaye nātho
Moggallānañca Kassapam
Gilāne dukkhite disvā
Bojjhange satta desayi

ஒரு சமயம் மொக்களானரும் கஸ்ஸப்பரும் உடல் நலம் குன்றி துன்புற்றிருப்பதைக் கண்டு பகவர் அவர்களுக்கு ஏழு போதி அங்கங்களை போதித்தார்.

Te ca tam abhinanditvā
Rogā muccimsu tamkhaṇe
Etena sacca-vajjena
Sotthi te hotu sabbadā.

போதனையை கேட்டு மனமகிழ்ந்த அவர்கள் நோயிலிருந்து விடுபட்டார்கள்.

இந்த அருள் வாக்கினால் எப்போதும் மணமகிழ்வோடு இருப்பீர்களாக!

Ekadā Dhamma-rājā pi
Gelaññenābhipīḷito
Cundattherena taññeva
Bhaṇāpetvāna sādaram

ஒரு சமயம் தர்மராஜர் நோயினால் அவதிப்பட்டபோது அவர் போற்றுதற்குரிய சுந்தரை இந்த போதனையை பணிவுடன் ஓதச் சொன்னார்.

Sammoditvā ca ābādhā
Tamhā vuṭṭhāsi ṭhānaso
Etena sacca-vajjena
Sotthi te hotu sabbadā.

போதனையை கேட்டு மனமகிழ்ந்த பகவர் விரைவில் குணமடைந்தார்.

இந்த அருள் வாக்கினால் எப்போதும் மணமகிழ்வோடு இருப்பீர்களாக!

Pahīnā te ca ābādhā
Tiṇṇannam-pi mahesinam
Maggāhata-kilesā va
Pattānuppattidhammatam
Etena sacca-vajjena
Sotthi te hotu sabbadā.

அட்டாங்க மார்க்கத்தால் அழிக்கப்படும் மன மாசுக்கள் மீண்டும் தோன்ற வாய்ப்பே இல்லாதது போல,
போஜங்களால் முனிவர் மூவரின் நீக்கப்பட்ட நோய்களும் ஒரு பொழுதும் மீண்டும் தோன்றவில்லை.

இந்த அருள் வாக்கினால் எப்போதும் மணமகிழ்வோடு இருப்பீர்களாக!

Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

சுந்தருக்குத் தந்த போதனை