புத்தரின் ஒன்பது பண்புகள்

 (இலங்கை Sasanawanse பாந்தே அவர்களின் ஞாயிறு இரவு போதனையில் குறிப்பிடப்பட்டது...)


Buddhanusati

தினசரி காலை எழுந்தவுடன் அல்லது வெளியே போகும் முன்பு புத்தரின் ஒன்பது பண்புகளை நினைவு கூறுதல் நல்லது.


அதாவது 

1. அவர் ஒரு அருகர் Arahaṃ (the Holy One),

2. சுய முயற்சியினால் முழுமையாக விழிப்புற்றவர் Sammāsambuddho (fully enlightened),

3. முழுமையான அறிவும் நடத்தையும் கொண்டவர் Vijjācaraṇa sampanno (endowed with clear vision and virtuous conduct), 

4. நல்ல வழியில் சென்றவர் Sugato (sublime), 

5. பிரபஞ்சத்தை அறிந்தவர் Lokavidū (the knower of worlds), 

6. கற்பிக்கக்கூடியவருக்கான தன்னிகரற்ற பயிற்சியாளர் Anuttaro purisadammasārathi (the incomparable leader of men to be tamed), 

7. தேவர்களுக்கும் மனிதர்க்கும் ஆசிரியர் Satthā devamanussānaṃ (the teacher of gods and men),

8. விழிப்புற்றவர் Buddho (enlightened), 

9. ஆசிர்வதிக்கப்பட்டவர் Bhagavā (blessed).



இதைப் பற்றி அன்றைய இந்தியாவின் வட மேற்கு பகுதியை ஆண்டு வந்த கிரேக்க மன்னன் மிலிந்தருக்கும் பௌத்த துறவி நாகசேனருக்கும் இடையே நடந்த பிரபலமான உரையாடல் தொகுப்பிலிருந்து (Milinda Panha ~100BC) தெரிந்து கொள்ளலாம். 

....

மன்னர் மிலிந்தர்: "நூறாண்டுகளுக்கு தீய செயலில் ஈடுபட்ட ஒருவர் தனது மரணத்தின் விளிம்பில் உள்ள போது புத்தரின் பண்புகளை நினைவுக் கூர்ந்தால் அவர் சொர்க்கத்தில் மறுபிறப்பெடுப்பார் என்றும், அதே சமயம் நீண்ட காலமாக நல்லதே செய்து வந்த ஒருவர் அவரது கடைசி நேரத்தில் ஒரு தீய செயலைச் செய்துவிட்டால் அவர் நரகத்தில் மறுபிறப்பெடுக்கக் கூடும் என்று நீங்கள் சொல்லும் இந்த இரண்டு விஷயங்களையும் என்னால் ஏற்க முடியவில்லை."


நாகசேனர்: "என்ன நினைக்கின்றீர்கள் மன்னரே, ஒரு சிறிய கல் நீரில் மிதக்குமா?"


மன்னர்: "மிதக்காது."


நாகசேனர்: "ஆனால் ஒரு வண்டி அளவு கற்களும் ஒரு படகில் இருக்கும்போது மிதக்கும் தானே? ஆகவே நீங்கள் நற்செயல்களை ஒரு படகைப் போல நினைத்துக் கொள்ள வேண்டும்."


 (ஆதாரம் The Debate Of King Milinda Bhikkhu Pesala)

Comments

Popular posts from this blog

எண்ணங்களை சாந்தப்படுத்தல்

நன்றி மறவாமை

தேவதா சுத்தம் - ஒரு தேவன்