கன்மம்
SN 35.146
Kamma-nirodha-sutta
கன்மம் Kamma
(சுருக்கம்)
"உங்களுக்கு
பழைய கன்மம் பற்றியும்,
புதிய கன்மம் பற்றியும், கன்மத்தின் முடிவைப் பற்றியும்,
கன்மத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லும் வழியைப் பற்றியும் கூறுகிறேன்.
கவனமாக கேளுங்கள்."
பழைய கன்மம் என்றால் என்ன?
இந்தக் கண் பழைய கன்மம்.
முந்தைய மனச்சங்கற்பத்தினால் (மனமொப்பிய சிந்தனை, volition, mental activity) தோன்றியது, உருவாக்கப்பட்டது. இந்தக் கண்ணை நுகர்ச்சிகள் மூலம் அறிவோம் (இனிமை (தரும் காட்சிகள்), இன்னல் (தரும் காட்சிகள்), இவை இரண்டுமற்ற -ஆகிய மூன்று நுகர்ச்சிகள்).
(அதேபோல)
இந்தக் காது பழைய கன்மம்...
இந்த மூக்கு பழைய கன்மம்... இந்த நாக்கு பழைய கன்மம்... இந்த உடல் பழைய கன்மம்... இந்த மனம் பழைய கன்மம்...
“And what, bhikkhus, is old kamma? The eye is old kamma, to be seen as generated and fashioned by volition, as something to be felt. The ear is old kamma … The mind is old kamma, to be seen as generated and fashioned by volition, as something to be felt. This is called old kamma.
புதிய கன்மம் என்றால் என்ன?
இந்த உடல், சொல், உள்ளம் மூலமாக தற்போது செய்யும் எந்தச் செயலும் புதிய கன்மம் எனப்படும்.
“And what, bhikkhus is new kamma? Whatever action one does now by body, speech, or mind. This is called new kamma.
கன்மத்தின் முடிவு என்றால் என்ன? உடல், சொல், உள்ளம் மூலமாக (பற்றுக் கொண்டு) செய்யும் செயல்கள் நிறுத்தப்பட்டு, வீடுபேரு (நிப்பாண நிலை) அடையும் போது கன்மம் முடிவுக்கு வந்தது என்று சொல்லப்படும்.
“And what, bhikkhus, is the cessation of kamma? When one reaches liberation through the cessation of bodily action, verbal action, and mental action, this is called the cessation of kamma.
கன்மத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லும் வழி என்ன? அதுவே அட்டாங்க மார்க்கம். அதாவது:
நற்காட்சி, நல்லெண்ணம், நல்வாய்மை, நற்செயல், நல்வாழ்க்கை, நல்லூக்கம், நற்கடைப்பிடி, நல்லமைதி.
***
Comments
Post a Comment