நாகுலரின் தந்தை
Nakulapitu Sutta சங்யுத்த நிகாயம் SN22.1 இவ்வாறு கேள்வியுற்றேன். ஒரு முறை புத்தர் முதலை மலை பக்கர்களின் நாட்டில், பெசகலா வனத்தில் உள்ள மான் பூங்காவில் தங்கியிருந்தார். அப்போது இல்லறத்தார் நாகுலரின் தந்தை புத்தரிடம் சென்று, வணங்கி, ஒரு புறம் அமர்ந்து, அவரிடம் கேட்டது: "ஐயா, நான் வயோதிகன், மூத்தோன். வயதில் முதிர்ச்சி அடைந்துள்ள நான், வாழ்க்கையின் கடைசி கட்டத்திளுள்ளேன். எனது உடல் நலம் தொடர்ந்து குறைபாடுடனே இருக்கிறது. பிக்குகளை பார்ப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. பகவர் எனக்கு அறிவுரையூட்டி, கற்பிப்பாராக. அது என்னுடைய நீண்ட நாள் நன்மைக்கும், மகிழ்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும்." "உண்மைதான் இல்லரத்தாரே, நீங்கள் சொல்வது உண்மைதான். வருத்தங்கள் நிரம்பிய இந்த உடல், அதன் உருவத்தில் சிக்கிக்கொண்டு, துன்பம் அனுபவிக்கிறது. இந்த உடலை இழுத்துக் கொண்டு செல்பவர் எவரும், ஒரு நிமிடம் கூட அது ஆரோக்கியமாக இருப்பதாக கூறினால், அதை மடமை என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது? எனவே இவ்வாறு பயிற்சி செய்யுங்கள், 'என் உடல் துன்பத்துக்காலானாலும், என் மனம் ஆரோக்கியமாக இருக்கும்'. அவ்வாறு நீங...