மஹா கபி (குரங்கு) ஜாதகம்

 ஒரு விவசாயி தன் வயலில் மண்வெட்டியோடு  வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது எருதுகள் வயல் ஓரத்தில் இருந்த புல்லை தின்றுக் கொண்டிருக்கையில், அப்படியே பக்கத்தில் உள்ள வனத்திற்குள் சென்று காணாமல் போய்விடுகின்றன.

துயரம் தாங்காமல், ஏழு நாட்களுக்கு சாப்பிட கூட நினைக்காத விவசாயி, அந்த  எருதுகளை தேடித் தேடி அலைந்தும் அவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரும் இமயமலை பகுதியில் எங்கே இருக்கின்றோம் என்று தெரியாமல் தொலைந்து விடுகின்றார்.

 பின் பசியின் காரணமாக அருகில் இருந்த ஒரு மரத்தில் ஏறி அதன் பழங்களை தின்னச் சென்றவர், மரக்கிளை உடைந்து ஆழ் நரகத்தைப் போல இருந்த ஒரு  பாதாள குழியின் அடியில் இருந்த குளத்தில் விழுந்து விடுகின்றார். பத்து நாட்களுக்கு அந்த குழியில் தவித்துக் கொண்டிருந்த அவரை ஒரு மாபெரும் குரங்கு, கருணையின் காரணமாக, தன் முதுகில் சுமந்து மிகவும் சிரமத்தோடு அந்த குழிக்கு வெளியே எடுத்து வருகிறது.

சோர்ந்து, இளைந்து போயிருந்த அந்த குரங்கு  உறங்கி விடுகிறது. பசி மயக்கத்தில் இருந்த அந்த விவசாயி அந்த குரங்கை உணவாக கருதுகிறார். அதன் மண்டையில் ஒரு பெரும் கல்லை எடுத்து நொறுக்க முயன்றவர், தன் வலிமை இழந்த நிலையில் அந்த குரங்கினை காயப்படுத்த மட்டுமே முடிந்தது.
உடல் முழுவதும் இரத்தம் படிய, வேதனையிலிருந்த அந்த குரங்கு, குதித்து எழுந்து அருகில் இருந்த மரத்தின் உயர்கிளைக்கு சென்று தன்னை காப்பாற்றிக் கொள்கிறது. 

அப்படியும் அது கோபம் கொள்ளாமல், மரங்களின் உச்சியில் தாவித்தாவி செல்ல அந்த விவசாயிக்கு காட்டுக்கு வெளியே செல்லும் வழியை காட்டுகிறது. 

அந்தக் குரங்குக்கு செய்த பாவத்தின் காரணமாக, அந்த விவசாயி எலும்பும் தோலுமாக நாள்தோறும் வேதனையில் ஏழு ஆண்டுகளுக்கு இங்கும் அங்கும் சென்று நாடோடியாக வாழ்ந்தார். ஒருமுறை பூங்காவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அவரை, நாட்டின் அரசர் - பூங்காவிற்கு வந்தவர், அந்த நிலையில் இருப்பதற்கு அவர் என்ன பாவம் செய்தார் என்று கேட்க,
நடந்த கதையை முழுமையாக அவர் சொல்லி முடிக்கும் தருவாயில், பூமி பிளந்து அவரை நரகத்துக்கு இழுத்து செல்கிறது. பின்னர் அரசர் அரண்மனைக்கு திரும்பினார்.

இது புத்தரின் ஒரு முன் பிறவிக் கதை.

அந்த குரங்குதான், போதி சத்துவர். 
எலும்பும் தோலுமாக வேதனையில் இருந்தவன், தேவதத்தன். புத்தரின் சீடனாக இருந்த அவன், பொறாமையின் காரணமாக எதிரியாகி விட்டவன்.

 சில துறவிகள், தேவதத்தன் புத்தரை ஒரு மலை உச்சியில் இருந்து பாறையை உருட்டி கொள்ள முயற்சித்ததைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில், புத்தர் அவர்களிடம் தேவதத்தன் தன்னை  கொள்ள நினைத்தது இது முதல் முறை அல்ல என்பதை, இந்த கதை மூலமாக விளக்கினார்.


மஹா கபி (குரங்கு) ஜாதகம்
Maha Kapi Jataka 516.  

ஆதாரம்:
https://thejatakatales dot com/mahakapi-jataka-516/

குறிப்பு: விகாரை சென்றபோது, மெத்தா பாவனா செய்வதற்கு முன்னால் இந்த கதையைச் சொல்லி அந்தக் கருணையங் கடலான, குரங்கு வடிவில் தோன்றிய போதிசத்துவரை நினைத்து தியானம் செய்ய சொன்னார், விகாரையில் இருந்த பாந்தே.

Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

சுந்தருக்குத் தந்த போதனை