இக்கரையும் அக்கரையும்

 இக்கரையும் அக்கரையும்
சங்காரவ சுத்தம்
அங்குத்தர நிகாயம் 10.117

சங்காரவ என்ற பிராமணர் புத்தரிடம் சென்று, நலம் விசாரித்து, ஒருபுறமாக அமர்ந்த பின் கேட்டது:
 "கோதமரே,  இக்கரை என்றால் என்ன?அக்கரை என்றால் என்ன?"

"பிராமணரே, 
தவறான காட்சி இக்கரை, சரியான காட்சி (sammādiṭṭhi) அக்கரை. [1]
தவறான கருத்து இக்கரை, நல்கருத்து (sammāsaṅkappo) அக்கரை.
தவறான வாய்மை இக்கரை, சரியான வாய்மை (sammāvācā) அக்கரை.
தவறான செயல் இக்கரை, நற்செயல் (sammākammanto) அக்கரை.
தவறான வாழ்க்கை இக்கரை, நல்வாழ்க்கை (sammāājīvo) அக்கரை. 
தவறான முயற்சி இக்கரை, நல் முயற்சி (sammāvāyāmo) அக்கரை.
தவறான கடைப்பிடி இக்கரை, நற்கடைப்பிடி (sammāsati) அக்கரை. 
தவறான அமைதி இக்கரை, நல்லமைதி (sammāsamādhi) அக்கரை.
தவறான ஞானம் இக்கரை, நல்ஞானம் (sammāñāṇaṁ) அக்கரை. [2]
தவறான விடுதலை இக்கரை, நல்விடுதலை (sammāvimutti) அக்கரை."

உதாணம் (புத்தர் பாவடிவில் சில சுத்தங்களின் இறுதியில் சொன்ன வார்த்தைகள்)

மனிதர்கள் சிலரே அக்கரை செல்வார்கள். 
மற்றவர் இக்கரையை சுற்றிக்கொண்டே இருப்பார்கள்.

தம்மம் நன்கு விளக்கப்படும்போது,
அதன்படி பயில்வோர்,
நீர்ப் பரப்பை கடந்து அக்கறை செல்வார்கள்.  
நீர்ப்பரப்பில் வெள்ளங்கள் அடித்துச் செல்லும், 
அதை தாண்டுவது கடினம்.[3]

தனிமையை நாடி,
வீட்டை விட்டுச் சென்றவர் 
- அந்த தனிமையில் சுகம் காண்பது கடினம்,
 திறமை கொண்டவர்,
தீய பண்புகளை விட்டுவிட்டு, நற்பண்புகளை வளர்த்து,

புலன் ஆசைகளை விட்டு,
தனிமையில் சுகம் காண்கிறார். 
உடமைகள் ஏதும் இல்லாதவராக,  
ஒரு திறமைசாலி
மனத்தின் மாசுக்களை தூய்மைப்படுத்துகிறார்.

போதி அங்கங்களை மனதில் சரியாக வளர்த்து, 
வேட்கையை விட்டு,  
பற்றுக்களில்  இன்பம் கொள்ளாமல்,
தாகம் தீர்ந்தவராக  (nibbutā), 
பிரகாசமாக, உலகில் வாழ்கின்றார். 

ஃஃஃ

ஆதாரம்: https://suttacentral dot net/an10.117

குறிப்பு:

[1]
"தவறான காட்சி இக்கரை, சரியான காட்சி அக்கரை." 
And what is wrong view? (MN 117)
‘There’s no meaning in giving, sacrifice, or offerings. There’s no fruit or result of good and bad deeds. There’s no afterlife. There’s no such thing as mother and father, or beings that are reborn spontaneously. And there’s no ascetic or brahmin who is well attained and practiced, and who describes the afterlife after realizing it with their own insight.’

இவையெல்லாம் தவறான காட்சிகள், இக்கரை சார்ந்தவை:
தானம், நன்கொடை செய்வதில் பயனில்லை என்று நினைப்பது. 
நற்செயல்களுக்கும் தீய செயல்களுக்கும் தகுந்த விளைவுகள் இல்லை என்று நினைப்பது, அடுத்த பிறவி என்று எதுவும் இல்லை என்று நினைப்பது, நமது வாழ்க்கையில் தாய், தந்தை என்ற சிறந்தவர்கள் இல்லை என்றும் அவர்களுக்கு தனிப்பட்ட மரியாதை ஏதும் தர வேண்டியது இல்லை என்று நினைப்பது, மறைந்த பின் உடனடியாக மறு பிறவி எடுப்போம் என்று  நம்பாதது, ஆன்மீகப் பாதையை  தொடர்ந்து,  வீடு பேரு அடைந்தவர் உள்ளனர் என்பதையும், அவர்கள் சிறப்பான அறிவுகளை பெற்றிருக்கின்றார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ளாது. 

[2]
நல்ஞானம், நல்விடுதலை:
அட்டாங்க பாதையை முடித்ததற்கு கிடைக்கும் பலன் இவை இரண்டும்.

[3]
நீர்ப்பரப்பில் உள்ள நான்கு வெள்ளங்கள்:
புலன் இன்பங்கள், மறுபிறப்புக்கான ஆசை, கருத்துக்கள், அறியாமை (இவையெல்லாம் வாழ்க்கையில் நம்மை அடித்துச் செல்லக்கூடிய வெள்ளங்கள்)
the floods of sensual pleasures, desire to be reborn, views, and ignorance.
kāmoghassa, bhavoghassa, diṭṭhoghassa, avijjoghassa.

ஃஃஃ

Comments

Popular posts from this blog

எண்ணங்களை சாந்தப்படுத்தல்

நன்றி மறவாமை

தேவதா சுத்தம் - ஒரு தேவன்