சார்ந்தோர்



 
தம்மசேனா பாந்தே, நாக்பூர் அவர்களின் தம்ம உரையில் வரும் சுத்தத்தின் மொழிபெயர்ப்பு

Sevitabba Sutta
அங்குத்தர நிகாயம் 3.26

"மூன்று வகையான மனிதரை உலகில் காணலாம். எந்த மூன்று?

ஒரு வகையான மனிதருடன் சார்ந்து இருப்பதை, அவரோடுக் கூடச் செல்வதை  அல்லது அவருக்கு பணிவிடை செய்வதை  தவிர்க்க வேண்டும்.

இரண்டாமவருடன் சார்ந்து இருக்கலாம், கூடச் செல்லலாம், அவருக்கு பணிவிடை செய்யலாம்.

மூன்றாமவருடன் சார்ந்து இருக்கலாம், கூடச் செல்லலாம், ஆழ்ந்த மதிப்பும் மரியாதையுடன் பணிவிடையும் செய்யலாம்.
  
ஃஃஃ

யாருடன் சார்ந்து இருக்கக் கூடாது?
அப்படிப்பட்டவர் நம்மை விட ஒழுக்கத்திலும் (sīla), அமைதியிலும் (தியானம் samādhi), விவேகத்திலும் (paññā) குறைந்தவராக இருப்பார்.   இரக்கமும், கருணையும் காரணமாகத் தவிர, அப்படிப்பட்டவருடன் நாம் சார்ந்திருக்க கூடாது, அவரோடு கூடவும் செல்லக்கூடாது அவருக்கு பணிவிடையும் செய்யக்கூடாது.  

ஃஃஃ

எப்படிப்பட்டவருடன் சார்ந்து இருக்கலாம், கூடச் செல்லலாம், அவருக்கு பணிவிடை செய்யலாம்?
அப்படிப்பட்டவர் நமக்கு ஒழுக்கத்திலும் அமைதியிலும், விவேகத்திலும் சமமாக இருப்பவராவார்.  அவருடன் சார்ந்திருக்கலாம். ஏன்?
ஏனென்றால், அப்படிப்பட்டவருடன் ஒழுக்கத்தை பற்றி, அமைதியை பற்றி, விவேகத்தைப் பற்றி பேசமுடியும். அந்த பேச்சும் சரளமாக, எளிமையாக வரும். இதன் காரணமாக அவரோடு சார்ந்து இருக்கலாம். அவருக்கு பணிவிடை செய்யலாம்.

ஃஃஃ

எவருடன்  சார்ந்து இருக்கலாம், கூடச் செல்லலாம், ஆழ்ந்த மதிப்பும் மரியாதையுடன் பணிவிடையும் செய்யலாம்? 
அப்படிப்பட்டவர் நம்மை விட ஒழுக்கத்திலும் அமைதியிலும் விவேகத்திலும் சிறந்தவராக இருப்பார். அப்படிப்பட்டவருடன் சார்ந்திருக்கலாம், கூடப் போகலாம், அவருக்கு  மிக்க மரியாதையுடனும்,  மதிப்புடனும் பணிவிடை செய்யலாம்.
ஏனென்றால், அப்படிப்பட்டவருடன் சார்ந்து இருக்கும் போது  நமது ஒழுக்கம் முழுமையாகும், அல்லது உள்ள ஒழுக்கம் மெய்யறிவோடு பாதுகாக்கப்படும். அதேபோல் நமது  அமைதியும், விவேகமும் சிறப்படையும். இதன் காரணமாக நாம் அப்படிப்பட்டவருடம் சார்ந்து இருக்கலாம், அவருடன் கூடச் செல்லலாம், அவருக்கு மிகுந்த மரியாதையுடனும்,  மதிப்புடனும் பணிவிடை செய்யலாம்.
.
ஃஃஃ

இவர்களே உலகில் காணக்கூடிய மூன்று வகையான மனிதர்கள்.

நம்மை விட இழிவான ஒருவருடன் சார்ந்து இருந்தால், அது நமது அழிவுக்கு எடுத்துச் செல்லக்கூடும்.
 நமக்கு சமமானவருடன் சார்ந்து இருந்தால் நாம் கீழ்நோக்கி செல்லமாட்டோம்.
நம்மைக் காட்டிலும் சிறந்தவரோடு சார்ந்திருக்கும் போது நாம் விரைவில் முன்னேறுவோம்.
 எனவே நாம் நம்மை விட சிறந்தவர்களுடன் சார்ந்திருப்பது நல்லது."

ஃஃஃ
ஆதாரம்: https://suttacentral dot net/an3.26

Comments

Popular posts from this blog

எண்ணங்களை சாந்தப்படுத்தல்

நன்றி மறவாமை

தேவதா சுத்தம் - ஒரு தேவன்