விஷப் பாம்பு உவமானம்
விஷப் பாம்பு உவமானம் Āsīvisopamasutta Āsīvisa - விஷப் பாம்பு Upamā - உவமை சங்யுத்த நிகாயம் SN 35.238 பிறவியிலுள்ள (இம்மையிலும் மறுமையிலும்) ஆபத்தினையும், அதிலிருந்து தப்பிக்க வழியையும் - விஷப்பாம்புகள், கொலைக்காரர்கள், வெறுமையான கிராமம், கொள்ளையர்கள்.. என்று பல வலிமையான உவமானங்களின் கோர்வையாக விளக்கம் தருகிறார் புத்தர். ஃஃஃ "துறவிகளே, நான்கு மரணம் விளைவிக்கத்தக்க விஷமுள்ள விரியன் பாம்புகள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அதே சமயம், வாழ விரும்பும் ஒருவர், மரணம் விரும்பாதவர், மகிழ்ச்சியை விரும்புபவர், துன்பத்துக்கு அஞ்சுபவர் அங்கு வருகிறார். அவரிடம் இவ்வாறு சொல்வார்கள்: 'ஐயா, இங்கு நான்கு மரணம் விளைவிக்கத்தக்க விஷமுள்ள விரியன் பாம்புகள் உள்ளன. அவற்றை அவ்வப்போது எடுத்து, குளிப்பாட்டி, உணவூட்டி, தூங்க வைக்க வேண்டும். ஆனால் அவற்றில் ஒன்றேனும் உங்களிடம் கோபம் கொண்டால், நீங்கள் உறுதியாக மரணம் தழுவவேண்டியிருக்கும் அல்லது உங்களுக்கு மரண வலி ஏற்படும். நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள்.' அதைக் கேட்ட அந்த மனிதர் அந்த நான்கு விஷப் பாம்புகளுக்கு பயந்து, அங்கிருந்து, தப்பிக்க...