ஒரு அன்பளிப்பின் தூய்மை
ஒரு அன்பளிப்பை தூய்மைப்படுத்துவது எப்படி?
(மஜ்ஜிம நிகாயம் MN142 சுருக்கம், ஒரு பகுதி மட்டும்)
"ஆனந்தா, நான்கு வழிகளில் ஒரு அன்பளிப்பை தூய்மைப்படுத்தலாம். எந்த நான்கு?
தருபவரால் ஒரு அன்பளிப்பு தூய்மைப்படுத்தப்படுகிறது. பெறுபவரால் அல்ல. - தருபவர் ஒழுக்கம் உடையவர், பண்புள்ளவர். பெறுபவர் ஒழுக்கம் கெட்டவர், தீய குணமடைவர்.
பெறுபவரால் ஒரு அன்பளிப்பு தூய்மைப்படுத்தப்படுகிறது. தருபவரால் அல்ல. - தருபவர் ஒழுக்கம் கெட்டவர், தீய குணமடைவர். பெறுபவர் ஒழுக்கம் உடையவர், பண்புள்ளவர்.
தருபவர், பெறுபவர் இருவராலும் ஒரு அன்பளிப்பு தூய்மைப்படுத்தப்படாமல் போகிறது. - தருபவர், பெருபவர் இருவரும் ஒழுக்கம் கெட்டவர், தீய குணமடைவர்.
ஒரு அன்பளிப்பு தருபவராலும், பெறுபவராலும் தூய்மைப்படுத்தப்படுகிறது. தருபவர், பெருபவர் இருவரும் ஒழுக்கம் உடையவர், பண்புள்ளவர்."
இந்த நான்கு வழிகளில் ஒரு அன்பளிப்பு தூய்மைப்படுத்தப்படுகிறது.
மேலும் அந்த கருணை உடைய புத்த பகவான் சொன்னது:
"ஒழுக்கமுடைய ஒருவர், இனிய மனதோடு நேர்மையாக பெற்ற ஒரு அன்பளிப்பை, நற்செயலின் விளைவில் நம்பிக்கை உடையவராக, ஒழுக்கம் இல்லாதோருக்கு தரும்போது அந்த அன்பளிப்பு தருபவரால் தூய்மைப்படுத்தப்படுகிறது.
ஒழுக்கம் இல்லாத ஒருவர், வெறுப்பான மனதோடு, தவறான முறையில் பெற்ற ஒரு அன்பளிப்பை, நற்செயலின் விளைவில் நம்பிக்கை இல்லாதவராக ஒழுக்கம் உடையவருக்கு தரும்போது அந்த அன்பளிப்பு பெறுபவரால் தூய்மைப்படுத்துகிறது.
ஒழுக்கம் இல்லாத ஒருவர், வெறுப்பான மனதோடு, தவறான முறையில் பெற்ற ஒரு அன்பளிப்பை, நற்செயலின் விளைவில் நம்பிக்கை இல்லாதவராக, ஒழுக்கம் கெட்டவருக்கு தரும்போது அந்த அன்பளிப்பில் அதிகம் பயனில்லை என்கிறேன்.
ஒழுக்கமுடைய ஒருவர், இனிய மனதோடு நேர்மையாக பெற்ற ஒரு அன்பளிப்பை, நற்செயலின் விளைவில் நம்பிக்கை உடையவராக, ஒழுக்கம் உடையவருக்கு தரும்போது அந்த அன்பளிப்பு தருபவர், பெறுபவர் இருவராலும் தூய்மைப்படுத்துகிறது.
இனிய மனதோடு, நேர்மையாக பெற்ற ஒரு அன்பளிப்பை, நற்செயலின் விளைவில் நம்பிக்கை உடையவராக, ஆசையை துறந்த ஒருவர், ஆசையை துறந்த மற்றவருக்கு தரும்போது, அதுவே பொருள் தானத்தில் சாலச் சிறந்தது."
ஃஃஃ
ஆதாரம்: https://suttafriends dot org/sutta/mn142/#Four_ways_of_purifying_a_gift
Section: Four ways of purifying a gift
Comments
Post a Comment