சர சுத்தம் - நடக்கையில்

 சர சுத்தம் - நடக்கையில்

AN4.11 Carasutta - Walking

சச்சித்த சுத்தத்தினை (AN 10.51) விளக்கிய ஒரு பாந்தே, அதனுடன் இந்த சர சுத்தத்தினையும் குறிப்பிட்டார். ஏனென்றால், இரண்டும் ஒரே கருத்தினை, அதாவது மனதில் தோன்றும் குற்றங்களை உடனடியாக நீக்குவது நல்லது என்ற கருத்தினை முன்வைக்கின்றன.

சச்சித்த சுத்தம் சுருக்கம்:

கண்ணாடியில் பார்க்கும்போது, முகத்தில் ஏதேனும் குறை, கரை இருக்குமேயானால், அதனை உடனடியாக சரி செய்கிறோம். அதேபோல உள்ளத்தில் ஏதேனும் குறை இருக்கின்றதா என்று, தம்மம் என்னும் கண்ணாடியில் அடிக்கடி பார்த்துக் கொள்ள வேண்டும். 

மேலும், தலை தீப்பற்றிக் கொண்டிருந்தால் எவ்வளவு வேகமாக செயல்பட்டு அதை அணைக்க பார்ப்போமோ, அதே அவசரத்துடன் உள்ளத்தில் உள்ள குறைகளையும் நீக்க வேண்டும்.

சர சுத்தம்

சுருக்கம்: ஒருவரின் உடல் எந்த நிலையில் - நடக்கும், உட்கார்ந்த, நிற்கும், படுத்த - நிலையில் இருந்தாலும், மனதில் சாமர்த்தியமற்ற என்னப்போக்கு தோன்றினாள், அதனை உடனடியாக நீக்குவது நல்லது.

ஃஃஃ

துறவிகளே, ஒரு துறவி நடந்து கொண்டிருக்கும் போது அவர் மனதில்

சிற்றின்ப, துஷ்டத்தனமான அல்லது கொடிய எண்ணம் தோன்றுவதாக எடுத்துக் கொள்வோம். ஆனால், அவர் அதை பொருட்படுத்துகிறார். அந்த என்ன போக்கை கைவிடுவதில்லை, கலைப்பதில்லை, ஒழிப்பதில்லை. அப்படிப்பட்டவரை, 'ஆர்வம் மற்றவர், விவேகம் இல்லாதவர், சோம்பல் உடையவர், முயற்சி எடுக்காதவர்,' என்று அழைக்கலாம்.

அதேபோல, நிற்கையில்... உட்காருகையில்... தூங்காமல் படுத்திருக்கையில்... அவர் மனதில் தீய எண்ணம் தோன்றி அதனை அவர் பொருட்படுத்தினால் ....அவரை, 'ஆர்வம் மற்றவர், விவேகம் இல்லாதவர், சோம்பல் உடையவர், முயற்சி எடுக்காதவர்,' என்று அழைக்கலாம்.

ஃஃஃ

 ஒரு துறவி நடந்து கொண்டிருக்கையில் அவர் மனதில் சிற்றின்ப, துஷ்டத்தனமான அல்லது கொடிய எண்ணம் தோன்றுவதாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அவர் அதை பொருட்படுத்துவதில்லை. அந்த என்ன போக்கை கைவிடுகிறார், கலைத்து விடுகிறார், ஒழித்து விடுகிறார். அப்படிப்பட்டவரை, 'ஆர்வம் மிக்கவர் விவேகம் உடையவர், சுறுசுறுப்பானவர் முயற்சி எடுப்பவர், உறுதியுடையவர்,' என்று அழைக்கலாம்.

அதேபோல, நிற்கையில்... உட்காருகையில்... தூங்காமல் படுத்திருக்கையில்... அவர் மனதில் தீய எண்ணம் தோன்றும் போது, அதனை அவர் பொருட்படுத்துவதில்லை. . அப்படிப்பட்டவரை, 'ஆர்வம் மிக்கவர், விவேகம் உடையவர், சுறுசுறுப்பானவர், முயற்சி எடுப்பவர், உறுதியுடையவர,' என்று அழைக்கலாம்.

ஃஃஃ

நடக்கும்போதும் நிற்கும்போதும்,

உக்காரும் போதும் படுத்திருக்கையிலும்,

வீட்டு வாழ்க்கையை பற்றிய 

ஒரு தீய எண்ணம் தோன்றினால்,


நீங்கள் தவறான பாதையில் செல்கின்றீர்கள்,

புத்தியை மயக்கும் விஷயங்களில் தொலைந்து விட்டீர்கள்.

அப்படிப்பட்ட துறவி உயர் மேன்மையான வீடு பேற்றினை அடைவதற்கு சாமர்த்திய மற்றவர் எனலாம்.


ஆனால், நிற்கும்போதும் நடக்கும்போதும்

உட்கார்ந்திருக்கையிலும் படுத்திருக்கையிலும், 

மனதை சாந்தப்படுத்தியவர், 

உள்ளத்தில் அமைதியை விரும்புபவர்; அப்படிப்பட்ட துறவி உயர் மேன்மையான வீடு பேற்றினை அடைவதற்கு திறமை கொண்டவர் ஆவார்.

ஃஃஃ

ஆதாரம்: https://suttacentral dot net/an4.11

Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

சுந்தருக்குத் தந்த போதனை