சச்சித்த சுத்தம்

 


சச்சித்த சுத்தம்

AN  10.51 Sacitta Sutta 

Your Own Mind

உங்கள் மனம்


ஒரு முறை புத்தர் சாவத்தி நகருக்கருகே,  ஜேத வனத்தில், அனாதபிண்டிகரின் விஹாரையில் தங்கியிருந்தார்.  அவர் துறவிகளிடம், "துறவிகளே!"  என்று அழைத்தார்.

 "ஐயா," என்று கூடியிருந்த துறவிகள் பதிலளித்தனர்.

"துறவிகளே, மற்றவர் மனதை அறியும் சாமர்த்தியம் ஒரு துறவிக்கு இல்லை என்றால், அவர்கள் இவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும், 'நான் எனது மனதின் நடவடிக்கைகளில் சாமர்த்தியமாக இருப்பேன்.'

ஒரு துறவி எப்படி தனது மன நடவடிக்கைகளில் சாமர்த்தியமாக இருப்பது? உதாரணமாக, இளைய பருவத்தில் உள்ள ஒரு பெண்ணையோ, ஆணையோ எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஆபரணங்களை அணிவதற்கு,  அழகிய துணிமணிகளை உடுத்துவதற்கு ஆசை. எனவே அவர்கள் ஒரு கண்ணாடி முன் தங்களின் பிரதிபிம்பத்தை பார்ப்பார்கள். ஏதேனும் அழுக்கோ, குறையோ தென்பட்டால் உடனடியாக அதனை நீக்கிவிடுவார்கள். எந்தக் குறையும் இல்லை என்றால், 

தாங்கள் விரும்பிய படி கண்ணாடியில் தோன்றுவதால் அவர்களுக்கு சந்தோஷம். 'நான் சுத்தமாக இருப்பது எனது பாக்கியம்', என்று நினைத்துக் கொள்வார்கள்.

அதே போல ஒரு துறவியும் தம்மம் என்ற கண்ணாடியின் முன் தங்கள் பண்புகளை ஆராய்வது, மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

நான் அடிக்கடி பேராசைப்படுகிறேனா, இல்லையா?

நான் அடிக்கடி வஞ்சகனாக இருக்கின்றேனா, இல்லையா?

நான் அடிக்கடி சோம்பலும் தூக்கமும் கொண்டுள்ளேனா, இல்லையா?

நான் அடிக்கடி சஞ்சலப் படுகின்றேனா இல்லையா?  

நான் அடிக்கடி சந்தேகம் கொண்டுள்ளவனாக இருக்கின்றேனா, இல்லையா?

நான் அடிக்கடி கோபப் படுகின்றேனா இல்லையா?

என் மனம் அடிக்கடி ஒழுக்கம் கெட்டுள்ளதா, இல்லையா?

என் உடல் அடிக்கடி தொந்தரவு படுகிறதா, இல்லையா?

நான் அடிக்கடி சுறுசுறுப்பாக உள்ளேனா, இல்லையா?

என் மனம் அடிக்கடி சமாதி நிலையில், ஆழ் அமைதியில் இருக்கின்றதா, இல்லையா?


மேற்படி ஆராய்ந்த பின்னர் ஒரு பிக்குவிற்கு இவ்வாறு தெரிய வந்தால்: 'நான் அடிக்கடி பேராசை கொண்டுள்ளேன். வஞ்சகமும், சோம்பலும் தூக்கமும், சஞ்சலமும், சந்தேகமும், கோபமும் கொண்டுள்ளேன். ஒழுக்கம் கெட்டு, உடல் தொந்தரவுடன், சுறுசுறுப் பற்று, அமைதி இன்றி உள்ளேன்'. அந்த தீய சாமர்த்தியமற்ற பண்புகளை கைவிட வேண்டும் என்றால், மிகுதியான அபிமானத்தோடும், கடுமையான முயற்சியோடும், இடைவிடா உறுதியோடும், நற் கடைப்பிடியும் சூழ்நிலை அறிந்திருந்தவராகவும் இருக்க வேண்டும்.


 நீங்கள் அணிந்திருக்கும் துணியோ அல்லது உங்கள் தலையோ தீப்பற்றி எரிகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அப்போது அந்தத் தீயை அணைக்க மிகுதியான அபிமானத்தோடும், கடுமையான முயற்சியோடும், இடைவிடா உறுதியோடும், நற் கடைப்பிடியும் சூழ்நிலை அறிந்திருந்தவறாகவும், வேக வேகமாக, ஒருமனத்துடன் செயல்படுவீர்கள் அல்லவா? அதேபோல அந்தத் தீய சாமர்த்தியமற்ற பண்புகளை கைவிட வேண்டும் என்றால், மிகுதியான அபிமானத்தோடு......... செயல்பட வேண்டும்.


ஆனால் தம் மனநிலையை ஆராய்ந்த பின்னர் ஒரு பிக்குவிற்கு இவ்வாறு தெரிய வந்தால்: 'நான் அடிக்கடி திருப்தியுடனும், அன்புள்ளத்தொடும், சோம்பலின்றி விழிப்புடனும், அமைதியோடும், நம்பிக்கையோடும், அன்போடும், தூய மனநிலைக் கொண்டும், உடலில் தொந்தரவின்றி, சுறுசுறுப்பாகவும் ஆழ்ந்த சமாதி நிலையிலும் உள்ளேன்'. இவ்வாறு சாமர்த்தியமான பண்புகளைக் கொண்டுள்ளவர், மன மாசுகளை முழுமையாக நீக்குவதற்கு தொடர்ந்து தியானம் பயின்று லர வேண்டும்."

,ஃஃஃ

ஆதாரம்: https://suttacentral dot net/an10.51

Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்..

சுந்தருக்குத் தந்த போதனை