Karajakāya sutta
Feb 25, 2024 பாந்தே Sasanawanse தொடர்ந்து மெத்தா பாவனை செய்வதன் நன்மைகளைப் பல சுத்த உதாரணங்களை கொண்டு பாந்தே விளக்கினார். அவற்றுள் சில... ஃஃஃ அங்குத்தர நிகாயம் AN10.219 Karajakāya sutta வினை தோற்றுவித்த இந்த உடல் சுத்தம் (சுருக்கம்) பகவான் புத்தர் கூறுகிறார்: "தீவினை செய்திருந்தால் அதன் பலனை அனுபவிக்காமல் துன்பத்தின் முடிவுக்கு வர முடியாது. அந்த வினைப் பயனை இந்த வாழ்க்கையில் அல்லது அடுத்த வாழ்க்கையில் அல்லது அதன் பின் தொடரும் வாழ்க்கைகளில் அனுபவிக்க நேரிடும். (அந்த தீவினைப் பலனைக் குறைப்பது எப்படி?) ஒரு மேன்மையான சீடர் பேராசை இல்லாமல், பகைமை இல்லாமல், குழப்பம் இல்லாமல், தெளிவான மனதுடன் தம்முள்ளத்தில் அன்பு நிறைந்தவராக அந்த அன்பை ஒரு திசையில் பரப்புகிறார். பின் இரண்டாம், மூன்றாம், நான்காம் திசைகளில் பரப்புகிறார். அதே போல மேல் திசையிலும் கீழ் திசையிலும் உலகம் முழுவதற்கும் தன் அன்பை செலுத்துகிறார் - நிறைந்த, பரந்த வரையறையற்ற, பகைமையற்ற அன்பு அது. அவர் இவ்வாறு அறிகிறார்: 'முன்பு எனது உள்ளம் அளவானதாக, வளர்க்கப்படாமல் இருந்தது. இப்போது அது அளவற்றதாகவும் ந...