Jan 28 போதனை
பாந்தே Sasanawanse
தியானத்தில் விருத்தியடைதல் எப்படி என்பதே Jan 28 போதனையின் சாரம்சம். பாந்தே குறிப்பிட்ட சில கருத்துக்கள்:
ஃ
ஆனாபானா சதி தியானம் (உன் மூச்சு வெளி மூச்சு கவனித்தல்) செய்வதில் சிரமம் இருந்தால் முதலில் மெத்தா (எல்லா உயிர்கட்கும் வரையறையற்ற அன்பு செலுத்துதல்) தியானத்தோடு தொடங்குங்கள் அல்லது புத்தானுஸ்ஸதி தியானம் (புத்த பகவானின் ஒன்பது பண்புகளை நினைவுகூரும் தியானம்) தியானத்தோடு தொடங்குங்கள்.
மெத்தா தியானம்:
https://youtu.be/dtI8qiBEcaU?feature=shared
ஃ
மெத்தா தியானம் பயில்வதன் நன்மைகளுல் ஒன்று: மனத்தை விரைவாக ஒரு நிலைப்படுத்த முடிவது.
ஃ
ஐந்து சீலங்களை கடைப்பிடிப்பது நல்லது. பொறிகளை கட்டுப்படுத்தி இருப்பது நல்லது. இதனால் தியானத்தில் முன்னேறலாம்.
indriya-saṃvara-sīla
விகாரைக்கு போக முடிந்தால், அவ்விடத்தை சுத்தம் செய்தல் பிக்குமார்களுக்கு உதவுதல் போன்ற புண்ணியச் செயல்கள் சீலத்தை முழுமையடையச் செய்யும்.
ஃ
காலை நேரங்களில் தியானம் செய்வது நல்லது.
ஃ
சீலங்களை கடைப்பிடிக்க உதவும் மற்றொரு விஷயம்:
வெட்கம்-அச்சம் (ஹிரீ-ஒத்தாப்ப) இருப்பது நல்லது.
ஹிரீ என்றால் மனசாட்சி. தவறு செய்யுமுன் மனசாட்சி உறுத்துவது. செய்யவிருக்கும் தவறை நினைத்து வெட்கப்படுதல்.
ஒத்தாப்ப என்றால் அக்கறையோடு இருத்தல். தவறு செய்யுமுன் அதற்கான வினைப் பயனை நினைத்து அஞ்சுவது.
ஃ
இவ்விரு விஷயங்களுக்குப் பிறகு தியானத்தை துவங்கினால் நற்பலன் கிடைக்கும்:
1. பாராயணம் செய்தல் ("ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்")
2. தம்ம போதனைகளை கேட்டல்
ஃ
பஞ்ச நீவரணஙகளை (மன மாசுக்கள்) கட்டுப்படுத்துதல் தியானம் செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கும். அவை:
சிற்றின்ப ஆசைகள்
கோபம் வெறுப்பு (போன்றவை)
சோம்பலும் சோர்வும்
சஞ்சலமும் வருத்தமும்
ஐயம்
ஃஃஃ
Comments
Post a Comment