வஜிராருடன்
சங்யுத்த நிகாயம் 5.10
Vajirāsutta வஜிரா சுத்தம்
ஆதாரம்: https://suttacentralnet/sn5.10
With Vajirā
வஜிராருடன்
சாவத்தியில்.
முற்பகலில் பிக்குணி வஜிரா சீவர ஆடைகளை சீர் செய்துக் கொண்டு, பிச்சா பாத்திரத்துடன் சாவத்தி நகருக்குள் உணவு பெறுவதற்குச் சென்றார். சாவத்தியில் உணவுக்காக நடந்தார். இரந்த உணவை அருந்திவிட்டு திரும்பிய பின்னர், இருண்ட காடு எனப்படும் வனத்தின் ஆழமான பகுதிக்குச் சென்று ஒரு மரத்தினடியில் அந்த நாள் தியானத்திற்காக அமர்ந்தார்.
அப்போது மாரன் என்ற தீயவன் (காம உலகத் தலைவன்) பிக்குணி வஜிராவிற்கு பயம் உணர்த்துவதற்காக, அச்சத்தாற்கலங்கவைப்பதற்காக, மயிர்சிலிர்கச்செய்வதற்காக, அவரது தியானத்தை குலைக்கும் நோக்கத்தோடு அவரிடம் சென்று இவ்வாறு பாவடிவில் சொன்னான்:
"யார் தோற்றுவித்தது இந்த உயிரை?
அதைத் தோற்றுவித்தவர் எங்கே?
எங்கு தோன்றியது இந்த உயிர்?
அது எங்கு மறையும்?"
பிக்குணி வஜிரா இவ்வாறு நினைத்தார், "இந்த பாவடிவில் பேசுவது யார்? மனிதனா, மனிதரல்லாதவனா?"
பின் இவ்வாறு நினைத்தார், "இது தீயோன் மாரன். எனக்கு பயம் உணர்த்துவதற்காக, என்னை அச்சத்தாற்கலங்கவைப்பதற்காக, மயிர்சிலிர்கச்செய்வதற்காக, எனது தியானத்தை குலைக்கும் நோக்கத்தோடு
வந்துள்ளான்!"
பின் வஜிரர் அது மாரன் என்ற தீயோன் என்று உணர்ந்ததால் இவ்வாறு பதிலுக்கு பாவடிவில் சொன்னார்:
" 'உயிர்' என்று ஒன்று இருப்பதாக ஏன் நம்புகிறாய்?
மாரனே, இது உனது கொட்பாடா?
இது காரணங்களின் தொகுப்பு மட்டுமே,
இங்கு உயிர் என்று ஒன்றை காண முடியாது.
பாகங்கள் ஒன்றுகூடும் போது அதனை ஒரு 'தேர்' என்று அழைக்கின்றோம்.
அதேபோல கந்தங்கள் இருக்கும் போது 'உயிர்' என்று பேச்சு வழக்கில் கூறுகிறோம்.
(உருவு form நுகர்ச்சி feelings குறிப்பே perception பாவனை volitional formations
உள்ள அறிவு consciousness இவை ஐங்கந்தம் ஆவன
- மணிமேகலை 30,189-190)
ஆனால் துக்கம் மட்டுமே தோன்றுகிறது, சில காலம் நீடிக்கிறது, பின் மறைகிறது.
துக்கம் தவிர வேறொன்றும் தோன்றுவதுமில்லை,
துக்கம் தவிர வேறொன்றும் மறைவதுமில்லை."
பின் மாரன் என்ற தீயவன் இவ்வாறு நினைத்தான், "இந்த பிக்குணி வஜிரா என்னை அடையாளம் கண்டு கொண்டாள்!"
ஏமாற்றமடைந்தவன் போல, உள்ளங் கு
லைந்து அவ்விடத்திலேயே மறைந்து போனான்.
ஃஃஃ
Comments
Post a Comment