ஒழுக்கங்கள்
பாந்தே Sasanawanse
இந்த வாரம் பாந்தே கற்பித்த பல விஷயங்களுள் ஒன்று, ஒரு கேள்விக்கான பதில் - ஐந்து ஒழுக்கங்கள் கடைப்பிடிப்பதால் வரும் ஐந்து அனுகூலங்களைப் பற்றி.
அந்த ஐந்து நன்மைகளில் நான்கை இம்மையிலேயே காணலாம்.
புத்த பகவான்:
"இல்லறத்தார்களே, ஒரு ஒழுக்கமுள்ள மனிதரின் நல்லொழுக்கத்தின் காரணமாக அவருக்கு ஐந்து அனுகூலங்கள் கிடைக்கின்றன. எந்த ஐந்து?
அவர் விவேகத்துடன் வாழ்கின்றபடியால், பெரும் செல்வத்தைச் சேர்க்கிறார். இதுவே முதல் அனுகூலம்.
அவர் புகழ் பரவுகிறது. இதுவே இரண்டாம் அனுகூலம்.
மேலும், அவர் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வாராயின், அது க்ஷத்திரியர்கள், பிராமணர்கள், இல்லறத்தார் அல்லது தியானிகளின் கூட்டமாக இருக்கலாம் - அந்த ஆண் அல்லது பெண் தன்னம்பிக்கையுடன், கூச்சப்படாமல், தலை நிமிர்ந்து கலந்து கொள்வார். இதுவே மூன்றாம் அனுகூலம் இது.
மேலும், அவர் இறக்கும் போது தெளிந்த மனத்தோடு இறப்பார். இதுவே நான்காம் அனுகூலம்.
மேலும் அவர் உடல் சிதைந்த பின், மரணத்தின் பின் நல்ல மறுபிறப்பெடுப்பார். சொர்க்கத்தில் பிறப்பார். இதுவே ஐந்தாம் அனுகூலம்.
இல்லறத்தார்களே, ஒரு ஒழுக்கமுள்ள மனிதரின் ஒழுக்கத்தின் காரணமாக அவர் பெரும் ஐந்து அனுகூலங்கள் இவையே."
ஃஃஃ
பகவர் பாட்டாலி கிராம (இன்றைய பாட்னா நகரம்) மக்களுக்கு சொன்னது.
ஆதாரம்: மஹா பரிநிப்பாண சூத்திரம்
தீக நிகாயம் (நீண்ட சொற்பொழிவுகளின் தொகுப்பு) DN16
Comments
Post a Comment