Posts

Showing posts from August, 2025

2.1 தம்மபதம் பின்னணி கதைகள்

  அப்பமாதவக்க (Appamādavagga) – விவேகத்துடன்  வாழ்வது 2.1 தம்மபதம் பின்னணி கதைகள் (தம்மப்பதம் செய்யுள் 21,22,23 ) 2.1 Dhammapada Atthakatha  (Verse 21, 22, 23) Source: Venerable Kiribathgoda Gnanananda Thero's Singhala rendition of the background stories of the Dhammapada. Translation to English: Thiru Sarath Kankanamge. *** புண்ணியமிக்க பக்தர்களே, அன்பான பிள்ளைகளே, சிலர் அழகால் மயங்கி விடுகிறார்கள். சிலர் செல்வத்தால் மயங்குகிறார்கள். சிலர் அறிவால் மயங்குகிறார்கள். மற்றவர்கள் பதவியால் மயங்குகிறார்கள். “மயக்கம்” என்பது மனதால் பற்றுதல்—அதாவது பெருமை, அகந்தை, திமிர் போன்ற தன்மைகளை வளர்ப்பது.  இவ்வாறு மயங்கியவர்கள், இறுதியில் அந்த மயக்கத்தால் அழிக்கப்படுகிறார்கள். புத்திசாலியான ஒருவர் ஒருபோதும் இவ்வாறான முட்டாள்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. அவர் பெற்றதை பயனுள்ளதாக்கி மாற்றுகிறார். நீங்கள் இப்போது படிக்கின்ற இந்தக் கதை அத்தகையதொரு நிகழ்வு. இது நன்மையும் தீமையும் பற்றிப் பேசுகிறது. நன்மையால் வரும் மகிழ்ச்சியும், தீமையால் வரும் துயரமும் ஒருவரின் சொந்த செயல்களிலிருந்து...

9.5 தம்மபதம் பின்னணி கதைகள்

  9.5 தம்மபதம் பின்னணி கதைகள் (தம்மப்பதம் செய்யுள் 121) 9.5 Dhammapada Atthakatha  (Verse 121)  இன்றியமையாத பொருட்களை பராமரிக்க தவறிய பிக்கு கதைச்சுருக்கம்: ஒரு பிக்கு, தன்னுடைய தேவையான பொருட்களை பராமரிக்க மறுத்தார்; (அவற்றை பராமரிக்க தேவையான) சிரமத்திற்கு தகுதியற்றவை என எண்ணினார். ஆனால் புத்தர், அவ்வாறு எண்ணக்கூடாது என்று கூறி, ஒரு கவிதை மூலம் அவரை அறிவுறுத்தினார். *** ஜேதவனத்தில் வழங்கப்பட்ட தம்ம போதனை – தேவையான பொருட்களை பராமரிக்க தவறிய பிக்குவைப் பற்றியது ஒரு பிக்கு, தன்னுடைய தேவையான பொருட்களை - படுக்கைகள், நாற்காலிகள் போன்றவை-  வெளியே பயன்படுத்தியபின், அவற்றை உள்ளே கொண்டு வராமல் வெளியிலேயே விட்டுவிடுவார். மழை, வெயில், கறையான் போன்றவற்றால் அவை விரைவில் சேதமடைந்தன. மற்ற பிக்குகள் அவரிடம் கூறினார்கள்: “நண்பரே, நீங்கள் உங்கள் பொருட்களை உள்ளே வைக்க வேண்டாமா?” அந்த பிக்கு பதிலளித்தார்: “நான் சிறிய தவறே செய்துள்ளேன் நண்பர்களே; அதைப் பற்றி அதிகமாக யோசிக்க வேண்டியதில்லை, தேவையில்லாமல் அலட்டிக் கொள்ள வேண்டாம்.” ஆனால் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்தார். பிக்குகள் இந்த வி...

9.4 தம்மபதம் பின்னணி கதைகள்

  தம்மபதம் பின்னணி கதைகள் 9.4 (தம்மப்பதம் செய்யுள் 119,120) Dhammapada Atthakatha 9.4 (Verse 119,120)  அனாதபிண்டிகரும் தேவதையும்  கதைச்சுருக்கம்: அனாதபிண்டிகரின் இல்லத்தில் இருந்த ஒரு தேவதை, அவர் புத்தரையும் அவருடைய சீடர்களையும் ஆதரிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தினாள்; ஏனெனில் அதனால் அவர் வறுமைக்கு தள்ளப்பட்டதாக அவள் நினைத்தாள். ஆனால் அனாதபிண்டிகர் அந்த தேவதையை கடிந்து கூறி, தன் இல்லத்திலிருந்து விரட்டிவிட்டார். பின்னர், அவள் அந்தக் இல்லறத்தாரின் செல்வத்தை மீண்டும் பெற்றுத் தந்துவிட்டு மன்னிப்பு கேட்டாள். அவர் அவளைப் புத்தரிடம் அழைத்து வந்தார். அப்போது புத்தர், இருவருக்கும் சில செய்யுள்களோடு உபதேசம் செய்தார். *** ஜேதவனத்தில் அனாதபிண்டிகரைச் சார்ந்து புத்தரால் கொடுக்கப்பட்ட உபதேசம். அனாதபிண்டிகர், ஜேதவன மகாவிகாரத்தை அமைப்பதற்காக மட்டுமே 54 கோடி நிதி செலவிட்டார். புத்தர் ஜேதவனத்தில் தங்கும் போதெல்லாம் தினமும் மூன்று வேளையும், மிகுந்த மரியாதையுடன் புத்தரிடம் தரிசனத்திற்கு வந்தார். செல்லும்போதெல்லாம், “இளைய பிக்குகள், சாமணர்கள் என் கைகளைக் கவனித்து, 'அவர் என்ன கொண்டு வந்தார்,'...

9.3 தம்மபதம் பின்னணி கதைகள்

  தம்மபதம் பின்னணி கதைகள் 9.3 (தம்மப்பதம் செய்யுள் 118) Dhammapada Atthakatha 9.3 (Verse 118)  உலாஜா தேவதையின் கதை கதைச்சுருக்கம்: ஒரு வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இளம் பெண், நெற்பொரியை  தேரர் மகா கஸ்ஸபருக்குத் தந்தாள். அதன் பயனாக, அவள் துசித தேவலோகத்தில் ஒரு தேவதையாக மறுபிறவி எடுத்தாள். தேரர் மகா கஸ்ஸபருக்காக மேலும் நல்ல செயல்கள் செய்ய விரும்பினாள். ஆனால் அவர் அவளைத் தடுத்தார். அப்போது புத்தர், அவள் ஏன் இவ்வாறு விரும்பினாள் என்பதற்கான காரணத்தை, ஒரு பாவடிவில் விளக்கினார். *** இந்த தர்ம உபதேசத்தை ஆசாரியர் (புத்தர்) ஜேதவனத்தில் தங்கி இருந்தபோது, உலாஜா (நெற்பொரி) தேவதையைப் பற்றிக் கூறினார். கதை ராஜகஹத்தில் ஆரம்பிக்கிறது.  மகா கஸ்ஸபர், பிப்பலிகுகையில் தங்கி இருந்தபோது, அவர் சமாதி நிலையில் நுழைந்து ஏழு நாட்கள் அந்த ஆழ்ந்த தியான நிலையில் இருந்தார். ஏழாம் நாளில் அவர் சமாதிதியிலிருந்து எழுந்து, தனது தெய்வீகக் கண்களால் பிண்டபாதத்திற்குச் (உணவு சஞ்சரிப்பதற்கு) செல்வதற்கான இடங்களை ஆராய்ந்தார். அப்போது அவர் ஒரு பெண்ணை கண்டார்; அவள் வயலில் இருந்து அறுவடை செய்த நெற்கதிர்களை ...