9.5 தம்மபதம் பின்னணி கதைகள்

 9.5 தம்மபதம் பின்னணி கதைகள் (தம்மப்பதம் செய்யுள் 121)

9.5 Dhammapada Atthakatha 

(Verse 121) 


இன்றியமையாத பொருட்களை பராமரிக்க தவறிய பிக்கு


கதைச்சுருக்கம்:

ஒரு பிக்கு, தன்னுடைய தேவையான பொருட்களை பராமரிக்க மறுத்தார்; (அவற்றை பராமரிக்க தேவையான) சிரமத்திற்கு தகுதியற்றவை என எண்ணினார். ஆனால் புத்தர், அவ்வாறு எண்ணக்கூடாது என்று கூறி, ஒரு கவிதை மூலம் அவரை அறிவுறுத்தினார்.


***


ஜேதவனத்தில் வழங்கப்பட்ட தம்ம போதனை – தேவையான பொருட்களை பராமரிக்க தவறிய பிக்குவைப் பற்றியது


ஒரு பிக்கு, தன்னுடைய தேவையான பொருட்களை - படுக்கைகள், நாற்காலிகள் போன்றவை-  வெளியே பயன்படுத்தியபின், அவற்றை உள்ளே கொண்டு வராமல் வெளியிலேயே விட்டுவிடுவார்.


மழை, வெயில், கறையான் போன்றவற்றால் அவை விரைவில் சேதமடைந்தன. மற்ற பிக்குகள் அவரிடம் கூறினார்கள்: “நண்பரே, நீங்கள் உங்கள் பொருட்களை உள்ளே வைக்க வேண்டாமா?”


அந்த பிக்கு பதிலளித்தார்: “நான் சிறிய தவறே செய்துள்ளேன் நண்பர்களே; அதைப் பற்றி அதிகமாக யோசிக்க வேண்டியதில்லை, தேவையில்லாமல் அலட்டிக் கொள்ள வேண்டாம்.” ஆனால் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்தார்.


பிக்குகள் இந்த விஷயத்தை ஆசானிடம் தெரிவித்தனர். ஆசான் அந்த பிக்குவை அழைத்து, “பிக்குவே, நீங்கள் இவ்வாறு செய்கிறீர்கள் என்பது உண்மையா?” என்று கேட்டார்.


பிக்குவும் அதே பதிலை அளித்தார்: “பகவனே, நான் சிறிய தவறே செய்துள்ளேன்; அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.”


அதற்கு ஆசான் கூறினார்:


“பிக்குகள் இந்தக் கொள்கையை ஒருபோதும் பின்பற்றக் கூடாது.  ‘இது ஒரு சிறிய தவறே’ என்று எண்ணி, தீய செயல்களை சிறியதாகக் கருதக்கூடாது.


ஒரு நீர்க்குடம் வெளியில் திறந்து வைக்கப்பட்டிருந்தால், ஒரு மழைத்துளி அதை நிரப்ப போவதில்லை. ஆனால் மழை தொடர்ந்து பெய்தால், அது நிரம்பி விடும். அதுபோல, ஒரு மனிதன் சிறிது சிறிதாகத் தீய செயல்களைச் செய்து, ஒரு பெரும் தவறை செய்தவனாகிறான்.”


இவ்வாறு கூறி, ஆசான் தம்மத்தை போதித்து, பின்வரும் செய்யுளை உச்சரித்தார்:


தம்மப்பதம் 121


Māppamaññetha pāpassa: na maṁ taṁ āgamissati, udabindunipātena udakumbho pi pūrati, bālo pūrati pāpassa, thokaṁ thokam-pi ācinaṁ.


தமிழ் பொருள்:


தீய செயல்களை ‘இது சிறியது’ என்று இகழக்கூடாது. நீர்த்துளிகள் தொடர்ந்து விழுவதால், நீர்க்குடம் நிரம்புகிறது. அதுபோல, ஒரு முட்டாளன் சிறிது சிறிதாகத் தீயதைச் சேர்த்து, பெரிய பாவத்திற்குள்ளானவனாகிறான்.


இந்த தம்ம போதனையின் முடிவில், பலர் ஸோதாபன்ன நிலையை அடைந்தனர்.


பின்னர், ஆசான் ஒரு விதியை அறிவித்தார்:


“வெளியில் விரித்த படுக்கையை அகற்றத் தவறியவர், தவறான செயலில் ஈடுபட்டவராகக் கருதப்படுவார்.”


***

Comments

Popular posts from this blog

அன்பளிப்புகள் பற்றிய உரை

சுந்தருக்குத் தந்த போதனை

மஹா கபி (குரங்கு) ஜாதகம்