Posts

Jan 21 விமான வத்து கதைகள்

  Jan 21:  பாந்தே Sasanawanse போதனையின் சாராம்சம், புத்தர் மீது நம்பிக்கை இருந்தால் அது  நல் விளைவுகளையும், பெரும் மகிழ்ச்சியையும் அளிக்கும் என்பதே. திரிபிடத்தின் விமான வத்து புத்தகத்திலிருந்து பல சம்பவங்களை  எடுத்துக்காட்டினார். ஃஃஃ விமான வத்து  5.6 கரணிய சுத்தம் https://suttafriends dot org/sutta/vv5-6/ மொக்களானர் சொர்க்கத்திற்கு சென்று ஒரு தேவதையின் அழகிய அரண்மனையைப் பார்த்து வியந்து புகழ்ந்தார். அப்படிப்பட்ட மாளிகை கிடைப்பதற்கு தான் என்ன புண்ணிய காரியங்களை செய்தார் என்று கேட்க, தேவதை:  "மெய்யறிவு உடையோர் தங்கள் நலம் கருதி புண்ணிய காரியங்களை செய்ய வேண்டும். பகவான் புத்தர் சரியான பாதையை தொடர்ந்து பயணத்தை முடித்தவர். அப்படிப்பட்ட புத்தர்களுக்கு தானம் தருவது பெரும் பலனைத் தரும். என் அதிர்ஷ்டவசம், ஒரு நாள் புத்தர் வனத்திலிருந்து வெளியே வந்து எங்கள் கிராமத்திற்கு வந்தார். அவரை பார்த்தவுடன் என் மனதில் நம்பிக்கை தோன்றியது. அதன் விளைவாக இந்த தாவதிம்ச சொர்க்கத்துக்கு நான் வந்து சேர்ந்தேன். அந்த புண்ணியக் காரணத்தினால் நான் ஒரு அழகிய தேவதையாக பிறந்து, எல்லா சுக ப...

Jan 14 போதனை Cūḷanikāsutta

  Jan 14, 2024  பாந்தே Sasanawanse  விவரித்த சுத்தம். AN3.80 Cūḷanikāsutta https://suttacentral dot net/an3.80/ (சுருக்கம் மட்டும்) இவ்வாறு நான் கேள்விப்பட்டேன். ஒருமுறை போற்றுதற்குரிய ஆனந்தர் பகவரிடம் சென்று, அவரை வணங்கி ஒரு புறமாக அமர்ந்தார். அப்போது ஆனந்தர் பகவரியிடம், "அண்ணலே, 'ஆனந்தா, சிக்கி புத்தரின் சீடரான அபிபு, பிரம்மலோகத்தில் நின்று கொண்டிருக்கையில் ஆயிரம் உலகங்களுக்கு அவருடைய குரலை செலுத்தக் கூடிய ஆற்றல் பெற்றவராக இருந்தார்,' என்று நீங்கள் சொல்ல கேட்டிருக்கின்றேன்." "அப்படியென்றால், முழுமையாக ஞானம் பெற்ற பகவர் எவ்வளவு தூரம் அவருடைய குரலை செலுத்த முடியும்?" "அவர் ஒரு சீடர் ஆனந்தா, தாதாகதர்களை அளவிட முடியாது." ஆனந்தருக்கு அந்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்பதால் இரண்டாம் முறை, மூன்றாம் முறை அதே கேள்வியை திரும்பக் கேட்டார். "ஆயிரம் மடங்கு சிறிய மண்டலம் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றாயா? அதில் ஆயிரம் நிலவுகளும், ஆயிரம் கதிரவனும், ஆயிரம் மேரு மலைகளும், ஆயிரம் இந்திய கண்டங்களும்.... ஆயிரம் பிரம்மலோகங்களும் உள்ளன. அப்படிப்பட்ட சிறிய மண்டலங...

சுந்தருக்குத் தந்த போதனை

  வெள்ளிக்கொல்லர் சுந்தருக்குத் தந்த போதனை அங்குத்தர நிகாயம் AN 10.176 நான் இவ்வாறு கேள்வியுற்றேன். ஒருமுறை பகவர் பாவா ஊருக்கு அருகே வெள்ளிக்கொல்லர் சுந்தரின் மாந்தோப்பில் தங்கியிருந்தார். வெள்ளிக்கொல்லர் சுந்தர் பகவரிடம் சென்று, அவரை வணங்கி, பின் ஒரு புறமாக அமர்ந்தார். அமர்ந்திருந்த அவரிடம் பகவர், "சுந்தா, எப்படிப்பட்ட தூய்மை ஆசாரத்தை நீ ஏற்கின்றாய்?" என்று கேட்டார். "தண்ணீர் பானைகளை தூக்கிச் செல்லும், நீர்ச் செடிகளாலான மாலைகளை அணிந்து கொண்டும், தீயை வழிபடும், நீரால் தூய்மை செய்து கொள்ளும் மேற்கத்திய நாட்டு பிராமணர்கள் உரைக்கும் தூய்மையாச்சாரத்தை நான் ஏற்கின்றேன், ஐயா." "அவ்வாறு தண்ணீர் பானைகளை தூக்கிச் செல்லும், நீர்ச் செடிகளாலான மாலைகளை அணிந்து கொண்டும், தீயை வழிபடும், நீரால் தூய்மை செய்து கொள்ளும் மேற்கத்திய நாட்டு பிராமணர்கள் எவ்வாறான தூய்மையாச்சாரத்தை உரைக்கின்றனர்?" "....மேற்கத்திய நாட்டு பிராமணர்கள் தங்கள் சீடர்களை இவ்வாறு பயிற்சி மேற்கொள்ள கூறுவர்: 'வாரும் உத்தமபுருஷர்களே, சரியான நேரத்தில் படுக்கையிலிருந்து எழுந்து பூமியைத் தொட வேண...

காலாமர்களுக்கு தந்த போதனை

  காலாமர்களுக்கு தந்த போதனை அங்குத்தர நிகாயம் AN 3.65 ஃஃஃ ஒன்றுக் கொன்று முரண்பாடான ஆன்மீக கருத்துக்களை எவ்வாறு கையாள்வது என்பதை பகவர் கேசபுத்த நகரைச் சார்ந்த காலாமர்களுக்கு எடுத்துரைக்கின்றார். ஃஃஃ ஒருமுறை பகவர் கோசல நாட்டில், ஒரு பெரும் பிக்கு சங்கத்தினருடன் சுற்றுப்பிரயாணம் செய்து கொண்டிருக்கையில், கேசபுத்திரம் என்னும் காலாமர் மக்கள் வாழும் ஊருக்கு சென்றடைந்தார். காலாமர்கள் இவ்வாறு கேள்விப்பட்டனர்: "சமணர் கோதமர், சாக்கியரின் புதல்வர், சாக்கியர் குடும்பத்திலிருந்து வீடு துறந்தவர், கேசபுத்திரம் வந்துள்ளார். இவரைப் பற்றி ஒரு சிறந்த கருத்து பரவியிருக்கிறது: 'கோதமர் ஒரு அருகர், முழுமையாக விழிப்புற்றவர், முழுமையான அறிவும் நடத்தையும் கொண்டவர், மங்கலமானவர், பிரபஞ்சத்தை அறிந்தவர், கற்பிக்கக் கூடியவருக்கான தன்னிகரற்ற பயிற்சியாளர், தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் ஆசிரியர்; பூரண ஞான முற்றவர்; பாக்கியவான். தேவர்களும், மாரரும், பிரம்மரும், துறவிகளும், பிராமணர்களும், மக்களும் கொண்ட இந்த உலகினை தன் நேரடி அறிவினால் உணர்ந்த அவர், மற்றவர்கும் அதனை தெரிவிக்கின்றார். அவர் துவக்கத்திலும், மத்...

விபஸ்ஸனா

விபஸ்ஸனா Bhante Gunaratna ("Bhante G") தந்த விளக்கம். வி என்றால் விசேட பஸ்ஸனா என்றால் பார்வை. அதாவது ஒரு சிறப்பான வழியில் பார்ப்பது கண்கள் மூலம் பார்ப்பது வேறு.  உதாரணமாக, கண்களாள் ஒரு இலை நிறம் மாறி இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால், இலையின் தோன்றி, மறையும் அநிச்ச தன்மையை, விபஸ்ஸனா மூலம் அறிவோம். விபஸ்ஸனா உள்ளதை உள்ளபடி பார்க்கிறது. அதற்கு 'யோனிசோ மனசிகாரா' தேவை அதாவது விவேகத்துடன் கவனித்தல். Yoniso manasikārā - wise attention, impartial, unbiased attention விபஸ்ஸனா மூலம் பொருட்களின், மனநிலைகளின் 'அநிச்ச, அனாத்ம, துக்க' தன்மைகளை அறிய வேண்டும். ஃஃஃ "நிலையில வறிய துன்பம் என நோக்க"      மணிமேகலை 30-030 நிலையில - நிலையில்லாதனவென்றும் (impermanent); வறிய - சாரமற்றவை என்றும் (insubstantial, non-self, no owner); துன்பம் என - துன்பமென்றும் (unsatisfactory); நோக்க- எப்பொருளையும் எந்த மனநிலையையும் (நுகர்ச்சி, மனக்குறிப்பு, எண்ணங்கள், உணர்வு போன்றவை) நான், எனது, என் ஆன்மா என்று நினைக்காமல்,  காரணங்களால் தோன்றும் அவற்றை, தோன்றி மறையும் தன்மையுடைய  அவற்றை நில...

அன்பளிப்புகள் பற்றிய உரை

அன்பளிப்புகள் பற்றிய உரை Dakkhiṇāvibhaṅga Sutta dakkhiṇā - தட்சிணை, அன்பளிப்பு vibhaṅga - வியாக்கியானம், உரை மஜ்ஜிம நிகாயம் MN142 Source: The Middle Length Discourses of the Buddha. A translation of the Majjhima Nikāya by Bhikku Ñanamoli and Bhikku Bodhi - Wisdom Publications மகாபஜாபதி கோதமி தரும் அன்பளிப்பை புத்தர் ஏற்க மறுப்பு   இவ்வாறு நான் கேள்வியுற்றேன். ஒரு சமயம் பகவர் சாக்கியர் நாட்டின் கப்பிலவத்துவில் உள்ள நிக்ரோதரின் விகாரையில் எழுந்தருளியிருந்தார்.   அப்போது மகாபஜாபதி கோதமி [1] இரண்டு புதிய துணிகளோடு பகவரிடம் சென்றார். அவரை வணங்கியபிறகு ஒரு புறமாக அமர்ந்து பகவரிடம், "போற்றுதற்குரிய ஐயா, இந்த இரண்டு புதிய துணிகளை நான் பகவருக்காகவே இழைத்து, நெய்துள்ளேன். பகவர் கருணையோடு இதனை என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாராக," [2] என்று கேட்டுக் கொண்டார்.   இதை கேட்ட பகவர் அவரிடம் "இதை சங்கத்துக்குத் தரவும், கோதமியாரே. சங்கத்துக்குத் தரும்போது நானும் சங்கத்தாரும் கௌரவிக்கப்படுவோம்."   இரண்டாவது முறை, மூன்றாவது முறை கோதமி பகவரிடம், "போற்றுதற்குரிய ஐயா........ இதனை கருணையோ...

ஆரிய மார்க்க சுத்தம்

ஆரிய மார்க்க சுத்தம்: மேன்மையான பாதை Ariyamagga Sutta: The Noble Path  AN 4.237 translated from the Pali by Thanissaro Bhikkhu "துறவிகளே, நான்கு விதமான செய்கைகளை நான்  நேரடியாக அறிந்து,, சரிபார்த்து,தெரியப்படுத்தியுள்ளேன். எந்த நான்கு? 1. இருளான செயல், அதனால் இருளான விளைவு. 2. பிரகாசமான செயல், அதனால் பிரகாசமான விளைவு. 3. இருளான மற்றும் பிரகாசமான செயல், அதனால் இருளான மற்றும் பிரகாசமான விளைவுகள். 4. இருளற்ற பிரகாசமுமற்ற செயல்‌, அதனால் இருளும் இல்லாத பிரகாசமும் இல்லாத விளைவு. இது கன்மத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லும். 'இருளான செயல் அதனால் இருளான விளைவு', என்றால் என்ன? ஒருவர் தங்கள்  மனோவாக்குக்காயங்களில் (மனம், சொல், உடல்)  புண்படுத்தும் செய்கையில் ஈடுபட்டால், அதன் காரணமாக அவர் ஒரு புண்படுத்தும் உலகில் தோன்றுகிறார். அவர் அங்கு புண்படுத்தும் ஊறுகளால் [1] தொடப்படுகிறார். புண்படுத்தும் ஊறுகளால் தொடப்பட்ட அவர், நரகத்தில் உள்ள ஜீவன்களைப்போலவே, முழுமையாக துன்பமான நுகற்சிகளையே அனுபவிக்கிறார்.  இதுவே 'இருளான செயல் அதனால் உண்டாகும் இருளான விளைவு', என்பது. 'பிரகாசம...