Posts

9.2 தம்மபதம் பின்னணி கதைகள்

  தம்மபதம் பின்னணி கதைகள் 9.2 (தம்மப்பதம் செய்யுள் 117) Dhammapada Atthakatha 9.2 (Verse 117)  தேரர் செய்யசகன் பற்றிய கதை கதைச் சுருக்கம்: தேரர் செய்யசகன் தன் பிரம்மச்சரியத்தை நிலைநிறுத்த முடியாமல், மீண்டும் மீண்டும் அதே விதியை மீறினார். இதை புத்தரிடம் தெரிவித்தபோது, அவர் சீலங்களை பின்பற்ற நினைவூட்டி, ஒரு செய்யுள் மூலம் கண்டித்தும் போதித்தார். *** இந்த தர்ம உபதேசத்தை ஆசாரியர் (புத்தர்) ஜேதவனத்தில் தங்கி இருந்தபோது, தேரர் செய்யசகனை முன்னிட்டு கூறினார். தேரர் செய்யசகன், தேரர் உலாளுதாயியின் இணை வாசகர் (ஒரே விகாரத்தில் தங்கியவர்). துறவு வாழ்க்கையில் திருப்தி இல்லாததால் தன் மனக்குறையை தோழரிடம் சொன்னார். அப்போது அந்த தோழர் அவரை, சங்காதிசேச முதல் விதியை மீற ஊக்குவித்தார். அதன் பின்னர், எப்போதெல்லாம் அவர் மனமுடைந்தாரோ, அப்போதெல்லாம் அதே விதியை மீண்டும் மீண்டும் மீறினார். ஆசாரியர் (புத்தர்) அவருடைய செயல்களை அறிந்து, அவரை அழைத்துக் கேட்டார்: “நீ இப்படிச் செய்கிறாய் என்று கூறப்படுகிறது, அது உண்மையா?” “ஆம், ஐயா, உண்மைதான்” என்று ஒப்புக் கொண்டார். அப்போது புத்தர்: “முட்டாள் மனிதனே! உன் நில...

9.1 தம்மபதம் பின்னணி கதைகள்

  9. தீமைகள் பற்றிய அதிகாரம் (பாபவக்கம்) தம்மபதம் பின்னணி கதைகள் 9.1 (தம்மப்பதம் செய்யுள் 116) Dhammapada Atthakatha 9.1 (Verse 116) பிராமணர் சுள்ள எகசாடகர் பற்றிய கதை   கதைச் சுருக்கம்: ஒரு பிராமணரிடம் ஒரே ஒரு மேலங்கி மட்டுமே இருந்தது. அதை புத்தருக்குத் தரலாமா என்று அவர் தயங்கினார். இரவின் கடைசி சாமத்தில் தயக்கம் முடிந்து அதை அளித்தார். பின்னர் அவருக்கு மன்னரால் மிகுந்த பரிசுகள் கிடைத்தன. புத்தர் கூறினார்: “அவர் தாமதிக்காமல் முன்பே தந்திருந்தால், இன்னும் அதிகமான பலனைப் பெற்றிருப்பார்” என்று. இதைக் கூறிய பின்னர் ஒரு வசனத்தையும் உபதேசித்தார். *** இந்த தர்ம உபதேசத்தை, ஆசாரியர் (புத்தர்) ஜேதவனத்தில் தங்கி இருந்தபோது, சுள்ள எகசாடகர் என்ற பிராமணர் (சிறிய-சுள்ள, ஒரு-ஏக, மேலங்கி-சாடக என்று பொருள்) குறித்துப் போதித்தார். முந்தைய விபஸ்ஸி புத்தரின் காலத்தில் “மகா எகசாடகர்” எனும் ஒரு பிராமணர் வாழ்ந்தார். அவரே தற்போதைய புத்தர் காலத்தில் சாவத்தியில் சுள்ள எகசாடகர் எனப் பிறந்தார். அவரிடம் ஒரே ஒரு உள்ளாடை  இருந்தது; அவர் மனைவியிடமும் ஒரே ஒரு உள்ளாடை இருந்தது. இருவருக்கும் சேர்ந்து ஒரே ஒ...

9.9 தம்மபதம் பின்னணி கதைகள்

  தம்மபதம் பின்னணி கதைகள் 9.9 (தம்மப்பதம் செய்யுள் 125) Dhammapada Atthakatha 9.9 (Verse 125)  Source: A Revised Translation of the Dhammapada Aṭṭhakathā E W Burlingame, Ānandajoti Bhikkhu வேட்டைக்காரன் கோகானின் நாய்கள் பற்றிய கதை (கதைச் சுருக்கம்):  வேட்டைக்காரன் கோகானென்பவன், தான் விலங்குகளை பிடிக்க முடியாமல் போனதற்காக ஒரு பிக்குவை குற்றம்சாட்டினான். அவன் தனது நாய்களை அவர்மீது விடுத்தான்;  விரட்டிக் கொண்டு வந்த நாய்களிடமிருந்து தப்பிப்பதற்காக பிக்கு ஒரு மரத்தில் ஏறினார். அந்த குழப்பத்தில் பிக்குவின் சீவர ஆடை கீழே விழுந்தது; அது வேட்டைக்காரனை மூடியதால், நாய்கள் தவறாக பிக்கு விழுந்து விட்டதாக நினைத்து தங்கள் எஜமானனையே கடித்துக் குதறி கொன்று விடுகின்றன. பிக்கு தனது செயல்களால்தான் அந்த வேட்டைக்காரன் இறந்தானோ என்று கவலைப்பட்டார். அப்போது புத்தர் அவருக்கு ஒரு செய்யுள் மூலம் ஆறுதல் கூறினார். * * * இந்த தம்ம உபதேசத்தை ஆசாரியர் (புத்தர்) ஜேதவனத்தில் தங்கி இருந்தபோது, வேட்டைக்காரன் கோகானை (ஓநாய் என்று பொருள்) குறித்துப் போதித்தார். ஒரு நாள் அதிகாலையில், கோகான் தன் வில்லை கைய...

புண்ணியம் செய்யும் வழிகள்

  (சென்ற வாரம் பாந்தே போதனை) புண்ணியம் செய்யத் தயங்க வேண்டாம், ஏனென்றால், புண்ணியமும் மகிழ்ச்சியும் ஒன்று என்று புத்தர் கூறினார்.  AN8.36 puñña kiriya vatthu Sutta புண்ணியம் செய்ய வழிகள் மூன்று வழிகளில் புண்ணியம் சேர்க்கலாம்:  1. தானம்  2. சீலம் (ஒழுக்கம்) 3. தியானம் (பாவனை - மனதைப் பக்குவப்படுத்தல்) (தானத்தை விட சீலம் உயர்ந்தது. முதல் இரண்டை விட தியானம் உயர்ந்தது. ஒரு பூவை முகரும் நேரத்திற்கு மட்டுமே உள்ளத்தில் அன்பை நிரப்பி கொண்டாள் (மெத்தா தியானம் மூலம்) அது புத்தர் தலைமையில் உள்ள சங்கத்தினருக்கு ஒரு விகாரை தானம் செய்வதால் கிடைக்கும் புண்ணியத்தை விட அதிக புண்ணியம் சேர்க்கும் என்று புத்தர் கூறினார். ஆகவே தானம் நல்லது, ஆனால் தியானம் தானத்தை விட மேலானது.) 1. ஓரளவுக்கு தானம், ஓரளவுக்கு சீலம் கடைப்பிடித்து ஆனால் தியானம் செய்யாத ஒருவர் மரணத்தின் பின் மனிதர் மத்தியில் பிறக்கின்றார். ஆனால் அனுகூலமற்ற சூழ்நிலையில் பிறக்கின்றார். (உதாரணமாக, ஒரு வறியோனாக பிறக்கலாம்.) 2. நடுத்தர அளவு தானம் நடுத்தர அளவு சீலம் கடைப்பிடித்து ஆனால் தியானம் செய்யாத ஒருவர் மரணத்தின் பின் மனிதர் மத்...

கன்மம்

  SN 35.146 Kamma-nirodha-sutta  கன்மம் Kamma (சுருக்கம்)  "உங்களுக்கு  பழைய கன்மம் பற்றியும்,  புதிய கன்மம் பற்றியும், கன்மத்தின் முடிவைப் பற்றியும்,  கன்மத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லும் வழியைப் பற்றியும் கூறுகிறேன்.   கவனமாக கேளுங்கள்." பழைய கன்மம் என்றால் என்ன?  இந்தக் கண் பழைய கன்மம்.  முந்தைய   மனச்சங்கற்பத்தினால் (மனமொப்பிய சிந்தனை, volition, mental activity) தோன்றியது, உருவாக்கப்பட்டது. இந்தக்  கண்ணை நுகர்ச்சிகள் மூலம் அறிவோம் (இனிமை (தரும் காட்சிகள்), இன்னல் (தரும் காட்சிகள்), இவை இரண்டுமற்ற -ஆகிய மூன்று நுகர்ச்சிகள்).  (அதேபோல) இந்தக் காது பழைய கன்மம்... இந்த மூக்கு பழைய கன்மம்... இந்த நாக்கு பழைய கன்மம்... இந்த உடல் பழைய கன்மம்... இந்த மனம் பழைய கன்மம்... “And what, bhikkhus, is old kamma? The eye is old kamma, to be seen as generated and fashioned by volition, as something to be felt. The ear is old kamma … The mind is old kamma, to be seen as generated and fashioned by volition, as something to be felt. Th...

புகழ்தலும் இகழ்தலும்

  புகழ்தலும் இகழ்தலும் Praise and blame  ஒரு முறை பகவர் பெரும் சங்கத் தாரோடு  இராஜகிருகத்திலிருந்து  நாளந்தைக்கு பயணித்துக் கொண்டிருந்தார். அதே சமயம் நாடோடி சுப்பியாவும் அவரது மாணவரான இளைஞர் பிரம்மதத்தரும் அவர்களுக்கு பின்னால் அதே வழியில் நடந்துவந்துக் கொண்டிருந்தனர். சுப்பியா பல வழிகளில் புத்த, தம்ம, சங்கம் ஆகிய மும்மணிகளையும் அவதூராக பேசி கொண்டு வந்தார். ஆனால் அவரது மாணவரான பிரம்மதத்தரோ புத்த, தம்ம சங்கத்தினரை புகழ்ந்து கொண்டு வந்தார். இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டு புத்தரையும் சங்கத்தினரையும் தொடர்ந்தனர். பின்னர் பகவரும் சங்கத்தாரும் அரசனின் சத்திரமான அம்பலதிக்கை தோட்டத்தில் இரவைக் கழிக்க தங்கினர். சுப்பியாவும் அவரது மாணவரும் அதே இடத்தில் இரவைக் கழித்தனர். முன் போலவே அந்த இடத்திலும் சுப்பியா மும்மணிகளை அவதூறாக பேசிக் கொண்டிருந்தார். அவரது மாணவர் பிரம்மதத்தர் மும்மணிகளை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். மறுநாள்  பொழுது விடிந்ததும் சில பிக்குகள் அங்கிருந்த மண்டபத்தில்  கூடினர். அங்கு உட்காந்திருக்கையில் அவர்களிடையே இந்த பேச்சு துவங்கியது. " அருமை!  அதிச...

Happy Vesak

 Happy Vesak/Buddha jayanthi.  Today marks the birth, enlightenment and passing away of the Buddha. (Recently heard talk) The Buddha taught gratification, its danger and the escape (Saṁyutta Nikāya 22.26). We live in a sensual world. We have 6 senses and we seek gratification through them.  Eyes through forms Ears through sound  Tongue through taste  Nose through smells Body through touch Mind through thoughts  Nothing wrong there.  But know the danger in excess. Don't cross boundaries. People kill, steal, lie etc. to get what they want. Keep the 5 precepts. It's for our own protection.  Just this: following 5 precepts, practicing generosity and cultivating unconditional love for all beings will lead one to much happiness in this life and a good rebirth in the next. Then there's the next level up. Escape. At some point as wisdom develops, one realizes this constant seeking of gratification in the external world is not satisfactory. Return is di...